சர்வதேச அளவில் இந்தியாவிற்குக் கெளரவத்தைத் தேடித்தந்த ஸ்கோடா...உலகின் 3வது பெரிய சந்தையாக மாற்றியது இந்தியா

ஸ்கோடா இந்தியா நிறுவனம் இந்தாண்டு அதிகமான கார்களை விற்பனை செய்து இந்தியாவைச் சர்வதேச அளவில் 3வது பெரிய சந்தையாக உருவாக்கியுள்ளது.

ஸ்கோடா இந்தியா (Skoda India) நிறுவனம் இது வரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் இந்த 2022ம் ஆண்டு மிகப்பெரிய விற்பனையைச் சந்தித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் துவங்கி ஆக்டோபர் மாதம் வரையில் மொத்தம் 44,500 கார்களை விற்பனை செய்துள்ளது.

சர்வதேச அளவில் இந்தியாவிற்குக் கெளரவத்தைத் தேடித்தந்த ஸ்கோடா...உலகின் 3வது பெரிய சந்தையாக மாற்றியது இந்தியா

இதைக் கொண்டாடும் வகையில் அந்நிறுவனம் வட இந்தியாவில் சமீபத்தில் ஸ்கோடா (Skoda) விரும்பிகளுக்கான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. இந்த சந்திப்பில் ஸ்கோடா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குநர் பீட்டர் சோல்க் (Petr Šolc) கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு இந்தியா, ஜெர்மனி, ஸ்லோவேக்கியா, அயர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஆஸ்திரியா, மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளிலிருந்து ஆட்டோமொபைல் விரும்பிகள் வந்திருந்தனர்.

இவர் அந்த கூட்டத்தில் பேசியதாவது : "பொதுவாக செக் குடியரசு நாட்டில் உள்ள ஸ்கோடா தலைமையகம் உள்ள மால்டா போலேஸ்லேவ் பகுதிக்கு ஸ்கோடாவின் தயாரிப்புகளைக் காட்ட சந்திப்புகளை நடத்துவோம். தற்போது இந்தியாவில் இந்தியாவிலே உருவாக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை உலகிற்குக் காட்டுவதில் பெருமைகொள்கிறோம். இந்த ஆண்டு எங்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. இதை மொமெண்டத்தை 2023ம் ஆண்டு தொடர்ந்து கொண்டு வருவோம்" எனக் கூறினார். ஸ்கோடா நிறுவனம் இந்தாண்டு இதுவரையில்லாத அளவிற்கு விற்பனையைப் பெற்றதற்கு இந்தியாவில் இந்தியாவிற்காகத் தயாரிக்கப்பட்ட MQB-A0-IN பிளாட்ஃபார்ம் முக்கியமான காரணம்.

இந்த பிளாட்ஃபார்மில் தான் ஸ்கோடா குஷாக் எஸ்யூவி (Skoda Kushaq SUV) கார் தயாரிக்கப்பட்டுக் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தாக ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) கார் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார்களின் விற்பனை ஸ்கோடா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தியா தற்போது ஸ்கோடா நிறுவனத்திற்கு ஜெர்மனி மற்றும் செக் குடியரசு நாட்டிற்கு அடுத்தபடியாக 3வது மிகப்பெரிய மார்கெட்டாக இருக்கிறது.

ஸ்கோடா குஷாக் கார் கடந்த மாதம் குலோபல் NCAP கிராஷ் (GNCAP) டேஸ்டிங்கில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த டெஸ்டில் ஸ்கோடா குஷாக் கார் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான ரேட்டிங்கில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. புதிய குலோபல் NCAP (GNCAP) விதிகளில் கீழ் இந்த டெஸ்டிங்கில் ஈடுபட்ட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கார் இது தான். இது MQB-A0-IN பிளாட்ஃபார்மில் தரத்தை எடுத்துக்காட்டு விதமாக அமைந்துள்ளது. ஸ்கோடா இந்தியா நிறுவனம் தனது கார்களில் பாதுகாப்பிற்குக் குறை வைக்காது என்பதை இது எடுத்துச் சொல்கிறது.

ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகிய கார்களில் ஆக்டிவ் மற்றும் பேசிவ் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. 3 பாயிண்ட் சீட் பெல்ட், ஒவ்வொரு பயணிகளுக்கும் தனித்தனியாக ஹெட்ரெஸ்ட், 6 ஏர்பேக்குகள், ரோல் ஓவர் புரோடெக்ஷன், ஐஎஸ்ஓபிக்ஸ் மவுண்ட் சைல்டு புரோடெக்ஷன், ஹில் ஹோல்டு கண்ட்ரோல்,

எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், டிராக்ஷன் கண்ட்ரோல் உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் டிஃபரென்ஷியல் லாக் சிஸ்டம், மல்டி கோலிஷன் பிரேக்கிங், எலெக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன், பிரேக் டிஸ்க் வைப்பிங், கேமராவுடன் கூடிய ரியர் பார்க்கிங் சென்சார் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

ஸ்கோடா இந்தியா நிறுவனம் இந்த 2022ம் ஆண்டு சிறப்பான விற்பனையை மட்டும் பெறவில்லை தனது பிஸ்னஸையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் வெறும் 175 டச் பாயிண்ட்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அது 220 டச் பாயிண்ட்களாக மாறியுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 250 டச் பாயிணட்களாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்நிறுவனம் தனது ஷோரூம்களை முற்றிலுமாக டிஜிட்டலைஸாக மாற்றி இந்தியாவில் முதன் முறையாக வாடிக்கையாளர்களுக்கு இன்டராக்டிவ் அனுபவத்தை வழங்குகிறது.

ஸ்கோடா நிறுவனம் தனது இந்தியா 2.0 திட்டத்தைக் கடந்த 2018ம் ஆண்டு உருவாக்கி தற்போது முக்கியமான மைல் கல்லை எட்டியுள்ளது. இதன்படி ஸ்கோடா கார்களை 95 சதவீதம் இந்திய பொருட்களை வைத்தே தயாரித்து தற்போது இடது பக்க டிரைவ் கார்களை தயாரித்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. மேலும் இந்தியாவில் செய்யும் உதிரிப்பாகங்களை வியட்நாம் நாட்டிற்கு அனுப்பி அங்கு வைத்து அந்நாட்டிற்கான கார்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஸ்கேடா நிறுவனத்திற்கு இந்தியா ஒரு சர்வதேச மையமாக மாறியுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Auto India had record braking sales in 2022 India becomes 3rd largest market
Story first published: Thursday, November 10, 2022, 11:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X