அடேங்கப்பா ஒரே நாளில் இத்தனை கார்கள் டெலிவரியா? சைலெண்டாக சாதனை படைக்கும் ஸ்கோடா ஸ்லாவியா...

ஸ்கோடா நிறுவனம் ஒரே நாளில் 125 ஸ்லாவியா கார்களை கோவையில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் அதன் கோவை டீலர் மூலம் இதை செய்து்ளது. ஒரே நேரத்தில் எல்லாவேரியன்ட் மற்றும் அனைத்து கலர் ஆப்ஷன் கார்கள் டெலிவரி செய்யப்பட்டன. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

அடேங்கப்பா ஒரே நாளில் இத்தனை கார்கள் டெலிவரியா? சைலெண்டாக சாதனை படைக்கும் ஸ்கோடா ஸ்லாவியா . . .

ஸ்கோடா நிறுவனம் கடந்த பிப்., மாத இறுதியில் தனது ஸ்லாவியா காரில் புதிய அப்டேட்களை செய்து ரிலீஸ் செய்தது. அந்நிறுவனம் வெளியிடும் காரில் சிறப்பான விற்பனையாகி வரும் காரில் ஸ்லாவியாவும் ஒன்று. மக்கள் பலர் அந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். குறிப்பாகச் சமீபத்தில் வெளியான அப்டேட்டிற்கு பிறகு மக்களிடம் அந்த கார் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அடேங்கப்பா ஒரே நாளில் இத்தனை கார்கள் டெலிவரியா? சைலெண்டாக சாதனை படைக்கும் ஸ்கோடா ஸ்லாவியா . . .

கடந்த பிப்ரவரி மாதம் செய்யப்பட்ட அப்டேட் முக்கியமாக காரின் இன்ஃபோடெயின்மெண்ட்டில் இருந்தது. இந்த காரில் 10 இன்ச் டச் ஸ்கிரினுடன் பானாசோனிக் யூனிட் பொருத்தப்பட்டிருந்தது. இதில் இரண்டு பக்கமும் ரோட்டரி நாப்களு் இருந்தது. இது மட்டுமல்லாமல் ஸ்கோடா கனெக்ட் என்ற கனெக்டெட் கார் தொழிற்நுட்பமும், ஸ்கோடா பிளே ஆப்ஸ், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் ஸ்மார்ட் லிங் போன்ற ஆப்ஷன்கள் உள்ளன.

அடேங்கப்பா ஒரே நாளில் இத்தனை கார்கள் டெலிவரியா? சைலெண்டாக சாதனை படைக்கும் ஸ்கோடா ஸ்லாவியா . . .

முந்தைய மாடலில் 8 இன்ச் டிஸ்பிளே ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளேயுடன் வயர்டு கனெக்ட்டிவிட்டி ஆப்ஷன் மட்டுமே இருந்தது. புதிதாக அப்டேட் செய்யப்பட்டது மக்களை அதிகமாக ஈர்க்க துவங்கிய நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் இந்த கார் விற்பனை ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.

அடேங்கப்பா ஒரே நாளில் இத்தனை கார்கள் டெலிவரியா? சைலெண்டாக சாதனை படைக்கும் ஸ்கோடா ஸ்லாவியா . . .

கோவை மாவட்டத்தில் உள்ள SGA கார் என்ற ஸ்கோடா கார் விற்பனையகம் ஒரே நாளில் 125 ஸ்கோடா ஸ்லாவியா கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஸ்கோடா ஸ்லாவியா கார்களை புக்கிங் செய்த கஸ்டமர்களுக்கு ஒரே நாளில் டெலிவரியை வழங்கியுள்ளது.

அடேங்கப்பா ஒரே நாளில் இத்தனை கார்கள் டெலிவரியா? சைலெண்டாக சாதனை படைக்கும் ஸ்கோடா ஸ்லாவியா . . .

இந்த மொத்த 125 கார்களில் அத்தனை வேரியன்களும், அத்தனை கலர் ஆப்ஷன்களும் நிறைந்ததாக இருந்தது. இந்த செய்தி ஸ்கோடா நிறுவனத்திற்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் இந்திய மக்களிடம் மனதில் தனது பிராண்ட்டின் மீதான நம்பிக்கையை வளர்த்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

அடேங்கப்பா ஒரே நாளில் இத்தனை கார்கள் டெலிவரியா? சைலெண்டாக சாதனை படைக்கும் ஸ்கோடா ஸ்லாவியா . . .

ஸ்கோடா ஸ்லாவியா காரை பொருத்தவரை 2 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. முதல் ஆப்ஷனவாக 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. இரண்டாவது ஆப்ஷனாக 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது.

அடேங்கப்பா ஒரே நாளில் இத்தனை கார்கள் டெலிவரியா? சைலெண்டாக சாதனை படைக்கும் ஸ்கோடா ஸ்லாவியா . . .

இதில் 1.0 லிட்டர் இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 114 பிஎச்பவி பவரையும் 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இரண்டாவது ஆப்ஷனான 1.5 லிட்டர் இன்ஜினை பொருத்தவரை அது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ்களுடன் வருகிறது. இது 148 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

அடேங்கப்பா ஒரே நாளில் இத்தனை கார்கள் டெலிவரியா? சைலெண்டாக சாதனை படைக்கும் ஸ்கோடா ஸ்லாவியா . . .

இந்த ஸ்கோடா ஸ்லாவியா காரில் முக்கிய அம்சங்களாக புரோஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், டூயல் டோன் அலாய் வீல்கள், இரண்டு பீஸ் எல்இடி டெயில் லைட், ஷாக் ஃபின் ஆண்டனா, எலெக்ட்ரானிக் சன்ரூப், முன்பக்கம் வென்டிலேட்டட் சீட்கள், பெரிய டச் ஸ்கிரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் , க்ரூஸ் கண்ட்ரோல், பின்பக்க ஏசி வென்ட், ஆம்பியஸ் லைட், ஆகிய வசதிகள் இருக்கிறது.

அடேங்கப்பா ஒரே நாளில் இத்தனை கார்கள் டெலிவரியா? சைலெண்டாக சாதனை படைக்கும் ஸ்கோடா ஸ்லாவியா . . .

இந்த ஸ்கோடா ஸ்லாவியா கார் தற்போது மார்கெட்டில் 5 விதமான கலர் ஆப்ஷன்கள் மற்றும் 4 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த காரை பொருத்தவரை இந்தியாவில் சமூகத்தில் ஒரு நல்ல மதிப்பை ஏற்படுத்தக்கூடிய காராக பார்க்கப்படுகிறது. இந்த காரை வைத்திருக்கும் இந்த காருக்கான சிறப்பான ரிவியூவை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda delivers 125 slavia cars to customers in coimbatore
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X