நம்பவே முடியல... இதுக்கு முன்னாடி ஒரே மாசத்துல இவ்ளோ கார்களை ஸ்கோடா வித்ததே இல்ல... ஜூனில் அமர்க்களம்!

ஸ்கோடா நிறுவனம் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்பவே முடியல... இதுக்கு முன்னாடி ஒரே மாசத்துல இவ்ளோ கார்களை ஸ்கோடா வித்ததே இல்ல... ஜூனில் அமர்க்களம்!

நடப்பாண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை ஸ்கோடா இந்தியா (Skoda India) நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி நடப்பாண்டு ஜூன் மாதம் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் 6,023 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கை (Highest-ever Monthly Sales) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

நம்பவே முடியல... இதுக்கு முன்னாடி ஒரே மாசத்துல இவ்ளோ கார்களை ஸ்கோடா வித்ததே இல்ல... ஜூனில் அமர்க்களம்!

ஸ்கோடா நிறுவனம் இதற்கு முன்பாக ஒரே மாதத்தில் இவ்வளவு அதிகமான கார்களை விற்பனை செய்தது கிடையாது. நடப்பாண்டு ஜூன் மாதம் தனது அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்திருப்பதுடன், விற்பனையில் மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சியையும் பதிவு செய்து ஸ்கோடா இந்தியா நிறுவனம் அசத்தியுள்ளது.

நம்பவே முடியல... இதுக்கு முன்னாடி ஒரே மாசத்துல இவ்ளோ கார்களை ஸ்கோடா வித்ததே இல்ல... ஜூனில் அமர்க்களம்!

ஸ்கோடா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் வெறும் 734 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையை அந்த நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் 6,023 ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலமாக ஸ்கோடா இந்தியா நிறுவனம் விற்பனையில் 721 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

நம்பவே முடியல... இதுக்கு முன்னாடி ஒரே மாசத்துல இவ்ளோ கார்களை ஸ்கோடா வித்ததே இல்ல... ஜூனில் அமர்க்களம்!

இங்கே மற்றொரு விஷயத்தையும் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஸ்கோடா இந்தியா கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட ஸ்கோடா கார்களின் எண்ணிக்கையை விட, நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் அதிகமான ஸ்கோடா கார்கள் விற்பனையாகியுள்ளன.

நம்பவே முடியல... இதுக்கு முன்னாடி ஒரே மாசத்துல இவ்ளோ கார்களை ஸ்கோடா வித்ததே இல்ல... ஜூனில் அமர்க்களம்!

ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு முழுவதும் ஒட்டுமொத்தமாக 23,858 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2022ம் ஆண்டின் முதல் 6 மாதங்களிலேயே ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் 28,899 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஸ்லாவியா (Skoda Slavia) போன்ற புதிய கார்களுக்கு கிடைத்துள்ள பிரம்மாண்டமான வரவேற்புதான், ஸ்கோடா நிறுவனத்தின் இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு காரணம்.

நம்பவே முடியல... இதுக்கு முன்னாடி ஒரே மாசத்துல இவ்ளோ கார்களை ஸ்கோடா வித்ததே இல்ல... ஜூனில் அமர்க்களம்!

ஸ்கோடா குஷாக், மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அதே நேரத்தில் ஸ்கோடா ஸ்லாவியா, மிட்-சைஸ் செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் ஸ்கோடா குஷாக் காரானது, கியா செல்டோஸ் (Kia Seltos), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) போன்ற கார்களுடன் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது.

நம்பவே முடியல... இதுக்கு முன்னாடி ஒரே மாசத்துல இவ்ளோ கார்களை ஸ்கோடா வித்ததே இல்ல... ஜூனில் அமர்க்களம்!

இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் வரும் மாதங்களில் போட்டி கடுமையாக அதிகரிக்கவுள்ளது. ஏனெனில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்து வரும் கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய 2 கார்களின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல்கள் இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

நம்பவே முடியல... இதுக்கு முன்னாடி ஒரே மாசத்துல இவ்ளோ கார்களை ஸ்கோடா வித்ததே இல்ல... ஜூனில் அமர்க்களம்!

இதுதவிர புத்தம் புதிய கார் ஒன்றும் இந்த செக்மெண்ட்டில் களமிறங்கவுள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி (Toyota Urban Cruiser Hyryder) காரை பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி தற்போது பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

நம்பவே முடியல... இதுக்கு முன்னாடி ஒரே மாசத்துல இவ்ளோ கார்களை ஸ்கோடா வித்ததே இல்ல... ஜூனில் அமர்க்களம்!

அத்துடன் இந்த காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் இந்த காரின் விலையை டொயோட்டா நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. வரும் பண்டிகை காலத்தில் விலைகள் அறிவிக்கப்பட்டு, முறைப்படி இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த செக்மெண்ட்டில் போட்டி கடுமையாவது உறுதியாகியுள்ளது.

நம்பவே முடியல... இதுக்கு முன்னாடி ஒரே மாசத்துல இவ்ளோ கார்களை ஸ்கோடா வித்ததே இல்ல... ஜூனில் அமர்க்களம்!

அதனை ஸ்கோடா குஷாக் எப்படி சமாளிக்க போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மறுபக்கம் ஸ்கோடா ஸ்லாவியா காரானது, மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz), ஹோண்டா சிட்டி (Honda City) மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) போன்ற கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. இதில், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் டெலிவரி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda india registers 721 per cent growth in sales in june 2022
Story first published: Friday, July 1, 2022, 20:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X