அசத்தும் சிறப்பம்சங்களுடன் புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள் விபரம்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் புதிய அம்சங்கள் மற்றும் விலை விபரம் உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎஸ்-4 மாசு உமிழ்வு விதி அமல்படுத்தப்பட்டதால், ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள், கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட எஞ்சின் தேர்வுடன் புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் மீண்டும் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 3 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பொலிவு கொடுக்கப்பட்ட முகப்பு க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய இண்டிகேட்டர்கள், புதிய பம்பர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, புதிய 20 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், சில்வர் வண்ணத்தில் புதிய ரூஃப் ரெயில்கள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவையும் வசீகரத்தை கூட்டுகின்றன.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்தில் இரட்டை வண்ண பாகங்களுடன் இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்கோடா கார்களில் வழங்கப்படும், 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் இந்த புதிய மாடலிலும் இடம்பெற்றிருக்கிறது. பனோரமிக் சன்ரூஃப் வசதியும் உள்ளது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 3 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 12 ஸ்பீக்கர்களுடன் கூடிய கேன்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகரான 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 187 எச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஸ்கோடா கோடியாக எஸ்யூவியில் டைனமிக் சேஸிஸ் கன்ட்ரோல் சிஸ்டம் மிக முக்கிய அம்சமாக இருக்கும். டிரைவிங் மோடுகளுக்கு தக்கவாறு சஸ்பென்ஷன் டேம்பர்களின் இறுக்கத்தை இந்த தொழில்நுட்பம் தானியங்கி முறையில் மாற்றிவிடும். இந்த காரில் ஈக்கோ, நார்மல், ஸ்போர்ட்ஸ், ஸ்னோ மற்றும் இன்டிவிஜுவல் என 5 டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியில் 9 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், மெக்கானிக்கல் பிரேக் அசிஸ்ட், ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஸ்டைல் வேரியண்ட்டிற்கு ரூ.34.99 லட்சமும், ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டிற்கு ரூ.35.99 லட்சமும், எல் அண்ட் கே வேரியண்ட்டிற்கு ரூ.37.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவிக்கு புக்கிங் துவங்கப்பட்டுவிட்டது. இந்த கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும். ஏற்கனவே உற்பத்தியும் துவங்கிவிட்டது. இதனால், அடுத்த சில நாட்களில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் டீலர்களில் நடைபெறும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has launched Kodiaq facelift India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X