சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையில் மெல்ல மெல்ல டாடாவை நெருங்கும் மாருதி!! முதலிடம் எந்த காருக்கு?

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான மவுசு வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. இதைதான் கடந்த நவம்பர் மாத சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் விற்பனை நிலவரமும் வெளிக்காட்டுகிறது. தற்போதைக்கு இந்திய சந்தையில் மொத்தம் 9 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அதாவது இவற்றின் நீளம் 4 மீட்டர் அல்லது அதற்கு குறைவாக இருக்கும். டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி300, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், ஹோண்டா டபிள்யூ.ஆர்.வி, டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்பன இந்தியாவில் விற்பனையில் உள்ள 9 சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் ஆகும். இதில் கடந்த நவம்பர் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாடலாக டாடா நெக்ஸான் முதலிடத்தில் உள்ளது.

சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் சேல்ஸில் முதலிடத்தில் நெக்ஸான்

கடந்த நவம்பரில் விற்பனை செய்யப்பட்ட டாடா நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 15,871 ஆகும். அதுவே 2021 நவம்பரில் 9,831 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது நெக்ஸான் கார்களின் விற்பனை ஆனது கிட்டத்தட்ட 61.44% அதிகரித்துள்ளது. அதேபோல் 2022 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் நெக்ஸான் கார்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 15.28% உயர்ந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 13,767 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கடந்த வருடங்களில் சந்தையில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் எஸ்யூவி இடத்திற்கு மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ கார்கள் இடையே தான் பலத்த போட்டி நிலவி வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் எஸ்யூவி காராக டாடா நெக்ஸான் விளங்கி வருகிறது. இதனை முறியடிக்கவே மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை காராக பிரெஸ்ஸாவையும், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வென்யூவில் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் வெர்சனையும் சமீபத்தில் கொண்டுவந்தன.

இதன் காரணமாகவே 2021 நவம்பர் உடன் ஒப்பிடுகையில் கடந்த நவம்பரில் இந்த இரு கார்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளன. அதிலிலும் குறிப்பாக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா வரும் மாதங்களில் டாடா நெக்ஸானை முந்திக்கொண்டு இந்த வரிசையில் முதலிடத்தை பிடித்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. கடந்த நவம்பர் மாதத்தில் 11,324 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 2021 நவம்பரில் 10,760 விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் சேல்ஸில் முதலிடத்தில் நெக்ஸான்

இந்த வகையில் இந்த மாருதி சுஸுகி சப்-4 மீட்டர் எஸ்யூவி காரின் விற்பனை ஆனது 5.24% அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்து 3வது இடத்தில் உள்ள ஹூண்டாய் வென்யூ கார்கள் கடந்த மாதத்தில் 10,738 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2021 நவம்பரில் வென்யூ கார்கள் வெறும் 7,932 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி, ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினால் வென்யூ கார்களின் விற்பனை ஆனது 35.38% அதிகரித்துள்ளது.

சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் சேல்ஸில் முதலிடத்தில் நெக்ஸான்

இவை மூன்று தான் கடந்த நவம்பரில் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் ஆகும். அதாவது இந்தியாவின் டாப்-3 சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் என்று இவையை தான் சொல்ல வேண்டும். இவற்றிற்கு அடுத்து கியா சொனெட் 7,834 யூனிட்களின் விற்பனை உடனும், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மாடல் 5,903 யூனிட்கள் விற்பனை உடனும் உள்ளன. இவை இரண்டின் விற்பனையும் 2021 நவம்பர் உடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளன.

ஆனால் முந்தைய 2022 அக்டோபர் மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் எக்ஸ்யூவி300 கார்களின் விற்பனை 6.03% குறைந்துள்ளது. ஆறாவது மற்றும் 7வது இடங்களை கிட்டத்தட்ட ஒரே அளவிலான விற்பனை எண்ணிக்கைகளுடன் நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் பிடித்துள்ளன. இவை இரண்டின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 2,397 மற்றும் 2,278 ஆகும். இருப்பதிலேயே மிகவும் அதிகம் விற்பனையாகும் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காராக ஹோண்டா டபிள்யூ.ஆர்.வி 430 யூனிட்களின் விற்பனை உடன் 8வது இடத்தில் உள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் கடந்த மாதத்தில் ஒரு யூனிட் கூட விற்பனை செய்யப்படவில்லை.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Sub compact suv cars sales 2022 november
Story first published: Friday, December 9, 2022, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X