டாடாவின் கைக்கு செல்லும் ஃபோர்டின் குஜராத் தொழிற்சாலை!! எப்படியோ தொழிலாளர்கள் நிம்மதியா இருந்தா சரி!

ஃபோர்டின் சனந்த் தொழிற்சாலையை சொந்தமாக்குவதை டாடா மோட்டார்ஸ் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

டாடாவின் கைக்கு செல்லும் ஃபோர்டின் குஜராத் தொழிற்சாலை!! எப்படியோ தொழிலாளர்கள் நிம்மதியா இருந்தா சரி!

பிரபல அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு போதிய விற்பனையின்மையால் இந்தியாவில் அதன் தொழிற்சாலை பணிகளை நிறுத்தி கொள்வதாக கடந்த 2021ஆம் ஆண்டில் அதிர்ச்சிக்கர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இது அதன் கூட்டணி டீலர்களுக்கு மட்டுமின்றி, ஃபோர்டு கார்களை வாங்கி இருந்த வாடிக்கையாளர்களுக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.

டாடாவின் கைக்கு செல்லும் ஃபோர்டின் குஜராத் தொழிற்சாலை!! எப்படியோ தொழிலாளர்கள் நிம்மதியா இருந்தா சரி!

ஏனெனில் இதன்பின் தங்களது கார்களுக்கு பராமரிப்பு சேவைகளும், உதிரி பாகங்களும் எவ்வாறு கிடைக்கும் என்கிற பயம் அவர்களுக்குள் ஏற்பட்டது. ஆனால் இந்தியாவில் பராமரிப்பு சேவைகளும், உதிரி பாகங்களும் தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்துள்ளதாக ஃபோர்டு அதன்பின் அறிவித்தது அவர்களுக்கு நம்பிக்கை அளித்தது. ஆனால் உண்மையில் ஃபோர்டின் வெளியேற்றத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பது என்னமோ அதன் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தவர்கள் தான்.

டாடாவின் கைக்கு செல்லும் ஃபோர்டின் குஜராத் தொழிற்சாலை!! எப்படியோ தொழிலாளர்கள் நிம்மதியா இருந்தா சரி!

இந்தியாவில் இந்த அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு குஜராத், சனந்த் பகுதியிலும், சென்னையிலும் என இரு தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. இதில் சென்னை தொழிற்சாலை மூலமாகவே ஃபோர்டு இந்திய சந்தையில் அதன் வணிகத்தை ஆரம்பித்தாலும், பின்னர் காலத்தில் சனந்த் தொழிற்சாலையிலேயே ஃபோர்டின் 75% கார் தயாரிப்பு பணிகள் நடைபெற்றன.

டாடாவின் கைக்கு செல்லும் ஃபோர்டின் குஜராத் தொழிற்சாலை!! எப்படியோ தொழிலாளர்கள் நிம்மதியா இருந்தா சரி!

சென்னை தொழிற்சாலையை கார்களை அசெம்பிள் செய்வதற்கும், துறைமுகம் அருகாமையில் உள்ளதால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதற்குமே பயன்படுத்தி வந்தது. இதனால் இப்போதும் ஃபோர்டின் சென்னை தொழிற்சாலை சில பகுதி வாரியாக செயல்பாட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் குஜராத், சனத் தொழிற்சாலையை விற்கும் முடிவில் ஃபோர்டு உள்ளது.

டாடாவின் கைக்கு செல்லும் ஃபோர்டின் குஜராத் தொழிற்சாலை!! எப்படியோ தொழிலாளர்கள் நிம்மதியா இருந்தா சரி!

இதனை வாங்க டாடா மோட்டார்ஸுக்கும், மற்றொரு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருவதாக சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தோம். இந்த நிலையில் தற்போது இந்த போட்டியில் டாடா மோட்டார்ஸின் கை ஓங்கி இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த இறுதிக்கட்ட முடிவுகள் விரைவில் எடுக்கப்பட்டு, அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடாவின் கைக்கு செல்லும் ஃபோர்டின் குஜராத் தொழிற்சாலை!! எப்படியோ தொழிலாளர்கள் நிம்மதியா இருந்தா சரி!

சனந்த் தொழிற்சாலையில் ஃபிகோ, ஃப்ரீஸ்டைல் & ஆஸ்பியர் என இந்திய சந்தைக்கேற்ற மலிவான கார்களை ஃபோர்டு தயாரித்து வந்தது. இந்த தொழிற்சாலையினை டாடா மோட்டார்ஸ் வாங்க விரும்புவதற்கு காரணம், டாடாவிற்கும் குஜராத், சனந்த் பகுதியில் தொழிற்சாலை உள்ளது. இன்னும் சொல்ல போனால் சனந்த் பகுதியில் ஃபோர்டின் தொழிற்சாலையையும், டாடா மோட்டார்ஸின் தொழிற்சாலையையும் சாலை ஒன்று மட்டுமே பிரிக்கிறது.

டாடாவின் கைக்கு செல்லும் ஃபோர்டின் குஜராத் தொழிற்சாலை!! எப்படியோ தொழிலாளர்கள் நிம்மதியா இருந்தா சரி!

ஆதலால் ஃபோர்டின் தொழிற்சாலையை வாங்குவதன் மூலம் போக்குவரத்து உள்பட பல வழிகளில் டாடா நிறுவனத்திற்கு நன்மை கிட்டும். டாடாவின் சனந்த் தொழிற்சாலையில் தற்சமயம் டியாகோ & டிகோர் கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக பிரபலமான டாடா நானோ கார்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வந்ததால், இப்போதும் அப்பகுதி மக்களால் இது நானோ தொழிற்சாலை என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

டாடாவின் கைக்கு செல்லும் ஃபோர்டின் குஜராத் தொழிற்சாலை!! எப்படியோ தொழிலாளர்கள் நிம்மதியா இருந்தா சரி!

ஃபோர்டின் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் வாங்குவது அந்த நிறுவனத்திற்கு நன்மை வந்து சேருகிறதோ இல்லையோ, அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்களின் வயிற்றில் பாலை வார்த்தது போல் இருக்கும். ஏனெனில் ஃபோர்டின் இந்திய வெளியேற்ற அறிவிப்பிற்கு பிறகு மீண்டும் தொழிற்சாலையில் வேலை துவங்குமா என்கிற குழப்பத்தில் அவர்கள் உள்ளனர். ஃபோர்டு தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 40,000 பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.

டாடாவின் கைக்கு செல்லும் ஃபோர்டின் குஜராத் தொழிற்சாலை!! எப்படியோ தொழிலாளர்கள் நிம்மதியா இருந்தா சரி!

அத்துடன் புதிய தொழிற்சாலையை வாங்குவதன் மூலம் டாடா கார்களின் தயாரிப்பும் அதிகரிக்கும். இதன் மூலமாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவிரி செய்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் கார்களின் விற்பனையை கணிசமாக அதிகரித்து கொள்ள முடியும். சனந்த தொழிற்சாலை மட்டுமின்றி சென்னை தொழிற்சாலை மீதும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கண் உள்ளது.

டாடாவின் கைக்கு செல்லும் ஃபோர்டின் குஜராத் தொழிற்சாலை!! எப்படியோ தொழிலாளர்கள் நிம்மதியா இருந்தா சரி!

இதனை வெளிக்காட்டும் விதமாக சில தினங்களுக்கு முன்பு டாடா க்ரூப்பின் தலைவர், தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. சென்னை, மறைமலை நகரில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சென்னை ஃபோர்டு தொழிற்சாலை வருடத்திற்கு 2 லட்ச வாகனங்களையும், 3.4 லட்ச என்ஜின்களையும் தயாரிக்கும் திறன் கொண்டதாக உள்ளது.

Most Read Articles
English summary
Tata motors close to buy ford gujarat plant
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X