500-1000 ரூபானாகூட பரவாயில்ல.. ஒரே அடியா பல ஆயிரம் ரூபாவ ஏத்திட்டாங்க! டாடா இப்படி செய்யும்னு எதிர்பாக்கல!

டாடா நிறுவனம் அதன் நெக்ஸான் இவி மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகிய எலெக்ட்ரிக் கார்களின் விலையை பல மடங்கு உயர்த்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

500-1,000 ரூபானாகூட பரவாயில்ல... ஒரே அடியா பல ஆயிரம் ரூபாவ ஏத்திட்டாங்க! மின்சார காரின் விலையை பலமடங்கு உயர்த்திய டாடா!

டாடா மோட்டார்ஸ் அதன் பயணிகள் வாகன பிரிவில் விற்கப்படும் அனைத்து கார்களின் விலையையும் உயர்த்தியிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை இந்தியர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்தது. குறிப்பாக, டாடா கார் பிரியர்கள் மத்தியில் இந்த விலையுயர்வு பெருத்த கவலையையே ஏற்படுத்தியிருக்கின்றது.

500-1,000 ரூபானாகூட பரவாயில்ல... ஒரே அடியா பல ஆயிரம் ரூபாவ ஏத்திட்டாங்க! மின்சார காரின் விலையை பலமடங்கு உயர்த்திய டாடா!

இந்த கவலையை இரட்டிப்பாக்கும் வகையில் நிறுவனத்தின் புதிய விலையுயர்வு பற்றிய தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், டாடா நிறுவனத்தின் பிரபல நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பது குறித்த தகவலே இப்போது வெளியாகியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 60 ஆயிரம் வரை உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

500-1,000 ரூபானாகூட பரவாயில்ல... ஒரே அடியா பல ஆயிரம் ரூபாவ ஏத்திட்டாங்க! மின்சார காரின் விலையை பலமடங்கு உயர்த்திய டாடா!

இந்தியாவில் மிக சூப்பராக விற்பனையாகிக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் காராக நெக்ஸான் இவி இருக்கின்றது. நிறுவனம் இந்த காரை அதிக ரேஞ்ஜ் தரும் வெர்ஷனிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த வெர்ஷன் நெக்ஸான் இவி மேக்ஸ் எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் வருகை மிக சமீபத்திலேயே அரங்கேறியது.

500-1,000 ரூபானாகூட பரவாயில்ல... ஒரே அடியா பல ஆயிரம் ரூபாவ ஏத்திட்டாங்க! மின்சார காரின் விலையை பலமடங்கு உயர்த்திய டாடா!

மாதத்திற்கு சுமார் மூவாயிரம் யூனிட்டுகள் விற்பனையாகுமளவிற்கு நெக்ஸான் இவி-க்கு நாட்டில் டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் 2022 ஜூன் மாதத்தில் மட்டும் டாடா மோட்டார்ஸின் மின்சார கார்கள் 3,507 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. டிகோர் இவி மற்றும் நெக்ஸான் இவி ஆகிய இரண்டும் இந்த விற்பனை எண்ணிக்கையில் அடங்கும்.

500-1,000 ரூபானாகூட பரவாயில்ல... ஒரே அடியா பல ஆயிரம் ரூபாவ ஏத்திட்டாங்க! மின்சார காரின் விலையை பலமடங்கு உயர்த்திய டாடா!

ஆனால், இதில் பெருமளவில் நெக்ஸான் இவி யூனிட்டுகளே விற்பனையாகியுள்ளன. இத்தகைய சூப்பராக விற்பனையாகும் எலெக்ட்ரிக் காரின் விலையையே டாடா மோட்டார்ஸ் தற்போது உயர்த்தியிருக்கின்றது. டாடா நிறுவனம் நெக்ஸான் இவி-யை - எக்ஸ்எம், எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ், டார்க் எக்ஸ்இசட் பிளஸ் மற்றும் டார்க் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் ஆகிய ஐந்து விதமான தேர்வுகளிலும், நெக்ஸான் இவி மேக்ஸை - எக்ஸ்இசட் பிளஸ் (3.3 கிலோவாட் பேட்டரி பேக்), எக்ஸ்இசட் பிளஸ் (7.2 கிலோவாட் பேட்டரி பேக்), எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் (3.3 கிலோவாட் பேட்டரி பேக்) மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் (7.2 கிலோவாட் பேட்டரி பேக்) ஆகிய நான்கு விதமான தேர்வுகளிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

500-1,000 ரூபானாகூட பரவாயில்ல... ஒரே அடியா பல ஆயிரம் ரூபாவ ஏத்திட்டாங்க! மின்சார காரின் விலையை பலமடங்கு உயர்த்திய டாடா!

இவற்றில் நெக்ஸான் இவி-யின் விலையை 20 ஆயிரம் ரூபாய் தொடங்கி ரூ. 45 ஆயிரம் வரையிலும், நெக்ஸான் இவி மேக்ஸ் வெர்ஷனின் அனைத்து வேரியண்டுகளின் விலையையும் ரூ. 60 ஆயிரம் வரையில் டாடா மோட்டார்ஸ் உயர்த்தியிருக்கின்றது. எந்தெந்த வேரியண்டின் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டிருக்கின்றது என்பது பற்றிய விபரத்தைப் பட்டியலாகக் கீழே பார்க்கலாம்.

500-1,000 ரூபானாகூட பரவாயில்ல... ஒரே அடியா பல ஆயிரம் ரூபாவ ஏத்திட்டாங்க! மின்சார காரின் விலையை பலமடங்கு உயர்த்திய டாடா!
டாடா நெக்ஸான் இவி புதிய விலை பழைய விலை வித்தியாசம்
XM ₹14,99,000 ₹14,54,000 ₹45,000
XZ+ ₹16,30,000 ₹15,95,000 ₹35,000
XZ+ LUX ₹17,30,000 ₹16,95,000 ₹35,000
Dark XZ+ ₹16,49,000 ₹16,29,000 ₹20,000
Dark XZ+ LUX ₹17,50,000 ₹17,15,000 ₹35,000
டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் புதிய விலை பழைய விலை வித்தியாசம்
XZ+ 3.3 kW ₹18,34,000 ₹17,74,000 ₹60,000
XZ+ 7.2 kW ₹18,84,000 ₹18,24,000 ₹60,000
XZ+ LUX 3.3 kW ₹19,34,000 ₹18,74,000 ₹60,000
XZ+ LUX 7.2 kW ₹19,84,000 ₹19,24,000 ₹60,000
500-1,000 ரூபானாகூட பரவாயில்ல... ஒரே அடியா பல ஆயிரம் ரூபாவ ஏத்திட்டாங்க! மின்சார காரின் விலையை பலமடங்கு உயர்த்திய டாடா!

இதில், நெக்ஸான் இவி மேக்ஸின் விலை அக்கார் விற்பனைக்கு வந்த இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகின்ற நிலையில் உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய விலையைக் காட்டிலும் 3.12 சதவீதம் தொடங்கி 3.38 சதவீதம் வரை அதன் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது. நெக்ஸான் இவி மேக்ஸ் ஓர் முழுமையான சார்ஜில் 437 கிமீ ரேஞ்ஜை தரும்.

500-1,000 ரூபானாகூட பரவாயில்ல... ஒரே அடியா பல ஆயிரம் ரூபாவ ஏத்திட்டாங்க! மின்சார காரின் விலையை பலமடங்கு உயர்த்திய டாடா!

இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 40.5 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், சிறந்த இயக்கத்தை வழங்கும் விதமாக 105 kW திறன் கொண்ட மின் மோட்டார் நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 143 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

500-1,000 ரூபானாகூட பரவாயில்ல... ஒரே அடியா பல ஆயிரம் ரூபாவ ஏத்திட்டாங்க! மின்சார காரின் விலையை பலமடங்கு உயர்த்திய டாடா!

இதைவிட சற்று குறைவான பேட்டரி பேக் கொண்ட வெர்ஷனாக நெக்ஸான் இவி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது ஓர் முழுமையான சார்ஜில் 312 கிமீ ரேஞ்ஜை மட்டும் வழங்கும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக இந்த வாகனத்தில் 30.2 kWh லித்தியம் அயன்-பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஐபி67 தர சான்று பெற்ற பேட்டரி பேக்காகும்.

Most Read Articles
English summary
Tata motors hikes nexon ev price from rs 20000 to rs 60000
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X