இதுக்காகதான் இந்தியாவே இந்த காருக்காக காத்திருந்துச்சா!.. டாடா நெக்ஸான் இவி மேக்ஸின் டாப்பான அம்சங்கள்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கும் டாப்பான அம்சங்களின் பட்டியலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இதுக்காகதான் இந்தியாவே இந்த காருக்காக காத்திருந்துச்சா!.. டாடா நெக்ஸான் இவி மேக்ஸின் டாப்பான அம்சங்கள்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நெக்ஸான் இவி மேக்ஸ் (Nexon EV Max) நேற்றைய (மே 11) தினம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காருக்கு டாடா நிறுவனம் ரூ. 17.74 லட்சம் என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

இதுக்காகதான் இந்தியாவே இந்த காருக்காக காத்திருந்துச்சா!.. டாடா நெக்ஸான் இவி மேக்ஸின் டாப்பான அம்சங்கள்!

உச்சபட்சமாக ரூ. 19.24 லட்சம் வரையிலான விலையில் இந்த மின்சார கார் விற்பனைக்குக் கிடைக்கும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏற்கனவே, நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரேவற்புக் கிடைத்து வருகின்றது. இந்தமாதிரியான சூழலில் புதிய பெயரில், அதாவது 'நெக்ஸான் இவி மேக்ஸ்' எனும் பெயரில் அப்டேட் வெர்ஷனை டாடா விற்பனைக்குக் கொண்டு வர என்ன காரணம் என நீங்கள் கேட்கலாம்.

இதுக்காகதான் இந்தியாவே இந்த காருக்காக காத்திருந்துச்சா!.. டாடா நெக்ஸான் இவி மேக்ஸின் டாப்பான அம்சங்கள்!

தற்போது சந்தையில் எலெக்ட்ரிக் கார் பிரிவில் போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனைச் சமாளிக்கும் பொருட்டே நெக்ஸான் இவி-யை பன்மடங்கு அதிக சிறப்பு வசதிகள் கொண்ட காராக டாடா மோட்டார்ஸ் அப்டேட் செய்திருக்கின்றது. அதாவது, பெரிய பேட்டரி, கூடுதல் ரேஞ்ஜ் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் அதனை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இதுக்காகதான் இந்தியாவே இந்த காருக்காக காத்திருந்துச்சா!.. டாடா நெக்ஸான் இவி மேக்ஸின் டாப்பான அம்சங்கள்!

இந்த அப்டேட்டுகளின் சிறப்பம்சத்தையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, டாடா மோட்டார்ஸ் புதிய நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரில் வழங்கியிருக்கும் புதிய அப்டேட்டுகளின் முக்கிய அம்சங்கள் பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இதுக்காகதான் இந்தியாவே இந்த காருக்காக காத்திருந்துச்சா!.. டாடா நெக்ஸான் இவி மேக்ஸின் டாப்பான அம்சங்கள்!

எந்தெந்த வேரியண்டில் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் கிடைக்கும்?

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எக்ஸ்இசட்-ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்-ப்ளஸ் லக்ஸ் ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இரண்டிலும் 3.3 kW ஹோம் சார்ஜர் வசதியுடன் கிடைக்கின்றது என்பது கூடுதல் சிறப்பு. இவற்றின் விலை ரூ. 17.74-ரூ. 18.74 லட்சம் ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இதுதவிர, 7.2 kW ஏசி ஃபாஸ்ட் சார்ஜர் வசதியும் வழங்கப்படுகின்றது. இது சிறப்பு பிரீமியம் அம்சம் என்பதால் இதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. ரூ. 50 ஆயிரம் அதற்கு வசூலிக்கப்படுகிறது.

இதுக்காகதான் இந்தியாவே இந்த காருக்காக காத்திருந்துச்சா!.. டாடா நெக்ஸான் இவி மேக்ஸின் டாப்பான அம்சங்கள்!

பேட்டரி பேக் விபரம்:

டாடா நெக்ஸான் இவி மேக்ஸில் 40.5 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக் வழக்கமானதைக் காட்டிலும் 33 சதவீதம் அதிக திறன் வெளிப்பாடு வசதிக் கொண்டது. அராய் அமைப்பு வழங்கியிருக்கும் சான்றின்படி இக்கார் 437 கிமீ ரேஞ்ஜை அது வழங்கும். இக்காரில் வழங்கப்பட்டிருக்கும் பேட்டரி மற்றும் மோட்டார் பேட்டரி மற்றும் மோட்டார் ஆகியவை ஐபி67 தர சான்று பெற்றவை ஆகும். இவற்றிற்கு 8 வருடங்கள் அல்லது 1.60 லட்சம் கிமீ வாரண்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுக்காகதான் இந்தியாவே இந்த காருக்காக காத்திருந்துச்சா!.. டாடா நெக்ஸான் இவி மேக்ஸின் டாப்பான அம்சங்கள்!

இதன் மின் மோட்டார் இவ்ளோ சூப்பரானதா?

இந்த நீண்ட தூர பயணத்தை வழங்கும் நெக்ஸான் இவி மேக்ஸ் மின்சார காரில் பிஎம்எஸ் ஏசி (Permanent magnet synchronous AC) மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 141 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. ஒன்பதே செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை அது எட்டிவிடும். இதுமட்டுமில்லைங்க இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 140 கிமீ வேகம் ஆகும்.

இதுக்காகதான் இந்தியாவே இந்த காருக்காக காத்திருந்துச்சா!.. டாடா நெக்ஸான் இவி மேக்ஸின் டாப்பான அம்சங்கள்!

ரொம்ப ஃபாஸ்டா சார்ஜ் செய்ய முடியும்:

புதிய நெக்ஸான் இவி 7.2kW ஏசி ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது. மேலே கூறியதைப் போல் 3.3 kW சார்ஜர் திறன் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும் போது 15 மணி நேரம் முழுமையாக சார்ஜ் செய்ய எடுத்துக் கொள்ளும். இதுவே, ஃபாஸ்ட் சார்ஜ் மையத்தில் வைத்து சார்ஜ் செய்யும்போது 6.5 மணி நேரங்களில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதைக்காட்டிலும் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் சார்ஜ் செய்ய முடியும். அதாவது, பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை வெறும் 56 நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இதுக்காகதான் இந்தியாவே இந்த காருக்காக காத்திருந்துச்சா!.. டாடா நெக்ஸான் இவி மேக்ஸின் டாப்பான அம்சங்கள்!

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் வசதி:

டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் இவி மேக்ஸ் காரில் மல்டி-மோட் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம் புதிதாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது ஃப்ளோர் கன்சோலில் உள்ள சுவிட்சுகள் மூலம் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கின் அளவை எளிதாக சரிசெய்ய உதவுகிறது. இதனை நான்கு லெவல் தேர்வில் டாடா வழங்க இருக்கின்றது. பூஜ்ஜியத்தில் இருந்து 3 வரையிலான ரீஜென் லெவல்களின் தேர்வில் அது கிடைக்கும்.

இதுக்காகதான் இந்தியாவே இந்த காருக்காக காத்திருந்துச்சா!.. டாடா நெக்ஸான் இவி மேக்ஸின் டாப்பான அம்சங்கள்!

தோற்றம்:

தோற்றத்தைப் பொருத்தவரை பெரியளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆகையால், முந்தைய நெக்ஸான் இவி-யைப் போலவே புதிய நெக்ஸான் இவி மேக்ஸ் காட்சியளிக்கின்றது. இருப்பினும், புதிதாக இன்டென்சி டீல் வண்ணம் புதியதாக வழங்கப்பட்டிருக்கின்றது. இதுவே, இக்கார் அதிக ரேஞ்ஜ் தரும் கார் என நமக்கு உணர்த்துகின்றது. இதுதவிர, டேடோனா கிரை மற்றும் பிரைஸ்டைன் வெள்ளை ஷேட் மற்றும் இரட்டை நிற உள்ளிட்டவையும் வழங்கப்படும்.

ஆனால், டார்க் எடிசன் இதில் கிடைக்காது.

இதுக்காகதான் இந்தியாவே இந்த காருக்காக காத்திருந்துச்சா!.. டாடா நெக்ஸான் இவி மேக்ஸின் டாப்பான அம்சங்கள்!

காரின் கேபின்:

நெக்ஸான் இவி மேக்ஸ் எஸ்யூவி காரின் கேபின் பகுதி புதிய மகரன் பீஜ் கலரில் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், புதிய வென்டிலேட் வசதிக் கொண்டு இருக்கையும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, ஒயர்லெஸ் சார்ஜர், புதிய கன்ட்ரோல்கள் கொண்ட திரை, ஏர் ப்யூரிஃபையர், ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு, ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் க்ரூஸ் கனட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இதுக்காகதான் இந்தியாவே இந்த காருக்காக காத்திருந்துச்சா!.. டாடா நெக்ஸான் இவி மேக்ஸின் டாப்பான அம்சங்கள்!

நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரில் மூன்று விதமான டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய மோட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இசட்-கன்னெக்ட் 2.0 இணைப்பு கார் தொழில்நுட்பம் அம்சமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த இசட்-கன்னெக்ட் அம்சத்தின் வாயிலாக 48 இணைப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதுக்காகதான் இந்தியாவே இந்த காருக்காக காத்திருந்துச்சா!.. டாடா நெக்ஸான் இவி மேக்ஸின் டாப்பான அம்சங்கள்!

பாதுகாப்பு அம்சத்திலும் மிரட்டுது:

நெக்ஸான் இவி மேக்ஸ் காரில் பாதுகாப்பு வசதிகளும் மிக அதிகம். இஎஸ்பி உடன் கூடிய ஐ-விபிஏசி (intelligent - Vacuum-less Boost & Active Control), ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஹில் டெசன்ட் கன்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. இரட்டை ஏர் பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான சீட் மவுண்ட்டுகள் மற்றும் 4 டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

Most Read Articles
English summary
Tata nexon ev max top things to know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X