உச்சகட்ட பாதுகாப்பு... டாடா பன்ச் காரை வாங்க கடும் போட்டி... விலை தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

டாடா பன்ச் காரின் விற்பனை தூள் கிளப்பி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா பன்ச் காரை வாங்க கடும் போட்டி... விலை தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாடா பன்ச் கார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 8,008 பன்ச் கார்களை விற்பனை செய்துள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கை என்பதில் நமக்கு சந்தேகமில்லை.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா பன்ச் காரை வாங்க கடும் போட்டி... விலை தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

ஏனெனில் அதற்கு முந்தைய நவம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 6,110 பன்ச் கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் டாடா பன்ச் கார் விற்பனையில் 31.06 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டாடா பன்ச் காரானது, மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும்.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா பன்ச் காரை வாங்க கடும் போட்டி... விலை தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

வரும் மாதங்களில் டாடா பன்ச் காரின் விற்பனை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை 5.49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.09 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா பன்ச் காரை வாங்க கடும் போட்டி... விலை தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

ப்யூர், அட்வென்ஜர், அக்காம்ப்ளிஷ் மற்றும் க்ரியேட்டிவ் என டாடா பன்ச் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் கிடைக்கிறது. டாடா பன்ச் காரின் டாப் வேரியண்ட்டில், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், எல்இடி டெயில்லைட்கள், 16 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா பன்ச் காரை வாங்க கடும் போட்டி... விலை தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

மேலும் மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் (7 இன்ச் எம்ஐடி உடன்), 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ரியர் பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கூல்டு க்ளவ் பாக்ஸ் உள்ளிட்ட வசதிகளும் கொடுக்கப்படுகின்றன.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா பன்ச் காரை வாங்க கடும் போட்டி... விலை தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இது 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-3 பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்களிலும் இதே இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா பன்ச் காரை வாங்க கடும் போட்டி... விலை தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. டாடா பன்ச் காரில் கூடிய விரைவில் புதிய இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா பன்ச் காரை வாங்க கடும் போட்டி... விலை தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

அத்துடன் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் என கூறப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே நெக்ஸான் மற்றும் டிகோர் ஆகிய ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்த வரிசையில் டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு வரவுள்ளது.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா பன்ச் காரை வாங்க கடும் போட்டி... விலை தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பிறகு, பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் நடப்பாண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு வரலாம்.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா பன்ச் காரை வாங்க கடும் போட்டி... விலை தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

டாடா பன்ச் கார் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. சமீபத்தில் கூட சாலை விபத்து ஒன்றில் இருந்து பயணிகளின் உயிரை டாடா பன்ச் கார் காப்பாற்றியது. விபத்து நடைபெற்றபோது டாடா பன்ச் காருக்கு உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் காயங்கள் இன்றி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

உச்சகட்ட பாதுகாப்பு... டாடா பன்ச் காரை வாங்க கடும் போட்டி... விலை தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இதுபோன்ற காரணங்களால்தான் டாடா பன்ச் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். நீங்கள் பொங்கல் பண்டிகைக்கு புதிய கார் வாங்க திட்டமிட்டிருந்தால், டாடா பன்ச் காரை சொந்தமாக்குவது குறித்து யோசிக்கலாம்.

Most Read Articles

English summary
Tata punch micro suv sales report december 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X