டாடானாலே வேற லெவலுங்க.. வாங்கும் ஐடியாவே இல்லாதவர்களைகூட கவரும் அம்சத்தில் 2022 டிகோர் இவி அறிமுகம்!

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் டிகோர் இவி எலெக்ட்ரிக் காரில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் பற்றிய விரிவான தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி மின்சார கார் மாடல்களில் டிகோர் இவி-யும் ஒன்று. இந்த காரின் அப்டேட்டட் வெர்ஷனையே நிறுவனம் தற்போது நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

டிகோர் இவி

அப்டேட்டின்கீழ் எக்கச்சக்க சிறப்பு வசதிகளை இந்த காரில் டாடா வாரி வழங்கியிருக்கின்றது. அப்படி என்னென்ன அம்சங்கள் 2022 டிகோர் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன?, என்பது போன்ற முக்கிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். புதிய 2022 டிகோர் இவி ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எக்ஸ்இ, எக்ஸ்டி, எக்ஸ்இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் ஆகிய தேர்வுகளிலேயே 2022 டிகோர் இவி விற்பனைக்கு வந்திருக்கின்றது.

இதுதவிர, பன்முக நிற தேர்விலும் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கும். புதிதாக டாடா மோட்டார்ஸ் இந்த காரை மேக்னட்டிக் ரெட் நிற தேர்விலும் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இது சற்று கவர்ச்சியான நிறத் தேர்வாகக் காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி எக்கசக்கமான அளவில் புதிய அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், லெதர் அம்சம் இந்த காரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஸ்டியரிங் வீலிலும் லெதர் உறை பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர, தானாக ஒளிரும் ஹெட்லேம்ப், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற நவீன கால அம்சங்கள் சிலவும் புதிய 2022 டிகோர் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி கூடுதல் சிறப்பு வசதிகளாக மல்டி மோட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு வசதி, இசட் கன்னெக்ட் கார் இணைப்பு தொழில்நுட்பம், ஐ-டிபிஎம்எஸ் மற்றும் டயர் பிரஷ்ஷர் ரிப்பேர் கிட் உள்ளிட்ட அம்சங்களும் ஃபேஸ்லிஃப்ட் 2022 டிகோர் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

இதில், டயர் பஞ்சர் ரிப்பேர் கிட்டை நிறுவனம் ஸ்டாண்டர்டு அம்சமாக தனது அனைத்து தயாரிப்புகளிலும் டாடா வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த காரில் சூப்பரான ரேஞ்ஜ் திறனை வழங்குவதற்காக 26 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அராயும் இந்த ரேஞ்ஜ் திறனை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

இந்த ரேஞ்ஜ் திறன் முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் 9 கிமீ அதிகம் ஆகும். அப்கிரேடின்கீழ் அதிக ரேஞ்ஜை தரும் வகையில் 2022 டிகோர் இவி மாற்றப்பட்டிருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் 2022 டிகோர் இவியின் ஆரம்ப நிலை தேர்விற்கு ரூ. 12.49 லட்சம் விலையை நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதேவேலையில், இந்த காரின் உயர்நிலை வேரியண்டான எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸுக்கு ரூ. 13.75 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுவும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலையிலேயே டாடா நிறுவனம் தனது அப்டேட்டட் 2022 டிகோர் இவி-யை விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. மேலும், டிகோர் இவி எலெக்ட்ரிக் காரின் பயனர்களைக் கவரும் விதமாக நிறுவனம் தற்போது இலவச சாஃப்ட்வேர் அப்டேட்டை அறிவித்துள்ளது. இது டிகோர் இவி எலெக்ட்ரிக் கார் பயனர்களைக் குஷியில் ஆழ்த்தியிருக்கின்றது. முன்னதாக இந்த சிறப்பு சலுகையை டாடா மோட்டார்ஸ் அதன் நெக்ஸான் இவி பிரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.

இதைத் தொடர்ந்தே தற்போது டிகோர் இவிக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமின்றி, டிகோர் இவி பயன்பாட்டாளர்கள் தங்களின் வாகனத்தை மல்டி மோட் ரீஜெனரேசன் சிஸ்டத்திற்கு அப்டேட் செய்து கொள்ளலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது. இத்துடன், ஐடிபிஎம்எஸ் மற்றும் டயர் பஞ்சர் ரிப்பேர் கிட்டையும் அப்கிரேடின்கீழ் நிறுவனம் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த சேவை நிறுவனத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்கள் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இதனை 2022 டிசம்பர் 20 உள்ளாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

Most Read Articles

English summary
Tata tigor ev top things to know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X