டொயோட்டாவை கீழே தள்ளி நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் டெஸ்லா... எலான் மஸ்கின் "மாஸ்" திட்டம்...

தற்போது உலகில் அதிகமாக விற்பனையாகி வரும் டொயோட்டா கொரோல்லா காரைவிட டெஸ்லாவின் Y கார் இந்தாண்டு இறுதிக்குள் அதிகமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து எலான் மஸ்க் தனது நிறுவனத்தின் முதலீட்டார்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். அதன்படி இந்த ஆண்டே டெஸ்லா Y கார் உலகின் அதிகமாக விற்பனையாகும் காராக மாறும் என கூறியிருந்தார். இது குறித்த விபரங்களை காணலாம்.

டொயோட்டாவை கீழே தள்ளி நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் டெஸ்லா . . . எலான் மஸ்கின்

இந்தியாவில் அதிகமாக கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் என கேட்டால் நாம் கண்களை மூடிக்கொண்டு மாருதி என சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு இந்தியாவில் அதிகமான மக்கள் மாருதி நிறுவனத்தின் கார்களை அதிகம் விரும்பி வாங்கி வருகின்றனர். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையானது மாருதி சுஸூகி நிறுவனத்தின் வேகன் ஆர் கார் தான். மொத்தம் 22 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளது.

டொயோட்டாவை கீழே தள்ளி நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் டெஸ்லா . . . எலான் மஸ்கின்

ஆனால் உங்களுக்கு உலக அளவில் எந்த கார் அதிகமாக விற்பனையாகியுள்ளது தெரியுமா? டொயோட்டா நிறுவனத்தின் கொரோல்லா கார் தன் உலக அளவில் அதிகம் விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. ஆண்டிற்கு 11.5 லட்சம் கார்கள் விற்பனையாகிறது. இந்நிலையில் இந்த காரின் விற்பனையை முறியடிக்கும் அளவிற்கு தற்போது ஒரு காரின் விற்பனை அதிகமாகி வருகிறது.

டொயோட்டாவை கீழே தள்ளி நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் டெஸ்லா . . . எலான் மஸ்கின்

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சமீபத்தில் தனது நிறுவனத்தின் முதலீட்டாளர்களுடன் ஒரு சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் அவர் அடுத்த ஆண்டு டெஸ்லா Y கார் தான் உலகில் அதிகம் விற்பனையாகும் நம்பர் 1 காராக இருக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் பல ஆண்டுகளாக நம்பர் ஒன் விற்பனையில் இருக்கும் டொயோட்டா கொரோல்லா காரின் விற்பனை முறியடிக்கப்பட்டு டெஸ்லா Y நம்பர் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டாவை கீழே தள்ளி நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் டெஸ்லா . . . எலான் மஸ்கின்

டெஸ்லா நிறுவனம் இந்த டெஸ்லா Y எலெக்ட்ரிக் காரை கடந்த 2020ம் ஆண்டு தான் அறிமுகப்படுத்தியது. இந்த காரை அறிமுகப்படுத்தும் போது எலான் மஸ்க் இந்த காருக்கு மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் மாடல் 3 காரை விட இரு மடங்கு இந்த காருக்கு டிமாண்ட் அதிகமாகும் என கூறியிருந்தார்.

டொயோட்டாவை கீழே தள்ளி நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் டெஸ்லா . . . எலான் மஸ்கின்

டெஸ்லா Y காருக்கு முன்னர் மாடல் 3 கார் தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக இருந்தது. கடந்த 2016ம் ஆண்டு டெஸ்லா Y காருக்கான அடிப்படை வடிவமைப்பு தயாரானபோதே எலான் மஸ்க் இந்த கார் ஆண்டிற்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் கார்கள் வரை விற்பனையாகும் என கணித்திருந்தார்.

டொயோட்டாவை கீழே தள்ளி நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் டெஸ்லா . . . எலான் மஸ்கின்

டெஸ்லா Y காரை பொருத்தவரை தற்போது அந்நிறுவனம் டெக்ஸாஸில் உள்ள ஜிகா ஆலையில் உற்பத்தி செய்து வருகிறது. அடுத்தகட்டமாக இந்த காரை ஆஸ்டின் ஆலையிலும் உற்பத்தி செய்ய திட்டமிட்டு வருகிறது. தற்போது இந்த கார் ஆண்டிற்கு 9 லட்சத்தி 36 ஆயிரத்தி,222 கார்கள் ஆண்டிற்கு உற்பத்தியாகும் திறன் இருக்கிறது.

டொயோட்டாவை கீழே தள்ளி நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் டெஸ்லா . . . எலான் மஸ்கின்

இப்படியாக உற்பத்தியாகும் அத்தனை கார்களும் விற்பனையாகிறது. மேலும் காருக்கான புக்கிங்களும் குவிகிறது. அப்படி என்றால் இந்த காருக்கான டிமாண்ட் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது டெஸ்லா நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் ஆண்டிற்கு 13 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு அதன் திறனைமேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

டொயோட்டாவை கீழே தள்ளி நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் டெஸ்லா . . . எலான் மஸ்கின்

அப்படியாக காரின் உற்பத்தி திறன் மேம்படுத்தப்பட்டால் தற்போது இந்த காருக்கு உள்ள டிமாண்டை ஒப்பிட்டு பார்த்தால் இந்த கார் தான் உலகின் அதிகமாக விற்பனையாகும் காராக மாறும் என தெரிகிறது. தற்போது உள்ள சப்ளைசெயில் பிளாக்கை மட்டும் டெஸ்லா நிறுவனம் சரி செய்து விட்டால் டெஸ்லா நிறுவனம் புதிய சாதனையை செய்துவிடும்.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Model y car become world best selling car know full detail here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X