2023 ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி கார் உலகளவில் வெளியீடு!! நமக்குத்தான் கொடுத்து வைக்கல...!

அப்டேட் செய்யப்பட்ட 2023 ஃபோர்டு எண்டேவியர் (Ford Endeavour) கார் உலகளவில் வெளியீடு செய்யப்ப்பட்டுள்ளது. புதிய எண்டேவியர் பற்றி முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2023 ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி கார் உலகளவில் வெளியீடு!! நமக்குத்தான் கொடுத்து வைக்கல...!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவை சேர்ந்த கார் பிராண்டான ஃபோர்டு வெளியேறி மாதக்கணக்கில் ஆகிவிட்டது. நம் நாட்டில் போதிய அளவில் தங்களது பயணிகள் கார்கள் விற்பனையாகததால் ஃபோர்டு இவ்வாறான முடிவை எடுத்திருந்தது. இருப்பினும் மற்ற வெளிநாட்டு சந்தைகளில் தொடர்ந்து ஃபோர்டு கார்கள் விற்பனை செய்யப்பட்ட வண்ணம்தான் உள்ளன.

2023 ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி கார் உலகளவில் வெளியீடு!! நமக்குத்தான் கொடுத்து வைக்கல...!

இந்த நிலையில் தற்போது புதிய தலைமுறை எவரெஸ்ட் எஸ்யூவி கார் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் எவரெஸ்ட் மாடல் தான் இந்தியாவில் எண்டேவியர் என்கிற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த 7-இருக்கை பிரீமியம் எஸ்யூவி காரின் அப்கிரேட் வெர்சனின் சோதனை மாதிரிகள் சர்வதேச சந்தைகளில் பலமுறை சோதனை ஓட்டங்களின்போது அடையாளப்படுத்தப்பட்டு இருந்தன.

2023 ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி கார் உலகளவில் வெளியீடு!! நமக்குத்தான் கொடுத்து வைக்கல...!

தற்போது புதிய தலைமுறை எவரெஸ்ட் காரின் வெளிப்புற மற்றும் உட்புற அம்சங்களை ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய எண்டேவியரில் முற்றிலும் புதிய முன்பக்கம் சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்ட புதிய எஃப்-150 ராப்டர் வாகனத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட எவரெஸ்ட்டின் முன்பக்கத்தில் செங்குத்தான ஸ்லாட்களுடன் புதிய முப்பரிமாண ரேடியேட்டர் க்ரில் வழங்கப்பட்டுள்ளது.

2023 ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி கார் உலகளவில் வெளியீடு!! நமக்குத்தான் கொடுத்து வைக்கல...!

இந்த க்ரில் அமைப்பிற்கு மத்தியில் நீல நிறத்தில் ஃபோர்டு லோகோ பொருத்தப்பட்டுள்ளது. பெரிய அளவிலான க்ரில்லிற்கு இரு பக்கங்களிலும் புதிய இரட்டை-பேட் பிரோஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப்கள், C-வடிவிலான எல்இடி டிஆர்எல்கள் உடன் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து தட்டையான பொனெட், அகலமான காற்று ஏற்பான் மற்றும் பருத்த முன்பக்க பம்பர் உள்ளிட்டவற்றை புதிய எண்டேவியர் மாடல் தொடர்ந்துள்ளது.

2023 ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி கார் உலகளவில் வெளியீடு!! நமக்குத்தான் கொடுத்து வைக்கல...!

ஆனால் முன்பக்க பம்பரில் பொருத்தப்பட்டிருக்கும் ஃபாக் விளக்குகள் புதியவை ஆகும். அதேபோல் முன்பக்கத்தில் கீழ்பகுதியில் பெரிய அளவில் சில்வர் நிற பேஷ் தட்டு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதிய தலைமுறை எவரெஸ்ட் மாடலின் முன்பக்கத்தில்தான் பெரும்பான்மையான அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளதே தவிர்த்து பக்கவாட்டில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், புதிய எண்டேவியர் சற்று பெரியதாக காட்சியளிக்கிறது.

2023 ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி கார் உலகளவில் வெளியீடு!! நமக்குத்தான் கொடுத்து வைக்கல...!

இதற்கேற்ப அளவில் பெரியதாக 20-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் இந்த எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த சக்கரங்களின் மேற்புறத்தில் தடிமனான பிளாஸ்டிக் க்ளாடிங்குகளால் மூடப்பட்ட பெரிய அளவிலான சக்கர வளைவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் காரில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஏதுவாக பெரிய படிக்கட்டு புதிய எவரெஸ்ட்டின் பக்கவாட்டில் காட்சியளிக்கிறது.

2023 ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி கார் உலகளவில் வெளியீடு!! நமக்குத்தான் கொடுத்து வைக்கல...!

அப்படியே பின்பக்கத்திற்கு சென்றால், C-வடிவிலான எல்இடி டெயில்லேம்ப் இருமுனைகளிலும் வழங்கப்பட்டுள்ளன. ஸ்பாய்லர் மேற்கூரையின் இறுதிமுனை உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பிரேக் விளக்கு வழக்கம்போல் ஸ்பாய்லரின் கீழ்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான வெளிப்புற அப்டேட்களுக்கு இணையாக புதிய தலைமுறை எவரெஸ்ட் எஸ்யூவி மாடலின் உட்புற கேபினும் அப்டேட்களை பெற்றுள்ளது.

2023 ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி கார் உலகளவில் வெளியீடு!! நமக்குத்தான் கொடுத்து வைக்கல...!

புதிய எவரெஸ்ட்டின் கேபின் முற்றிலும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்க, இருக்கைகள், ஸ்டேரிங் சக்கரம் மற்றும் கியர் க்னாப் உள்ளிட்டவை லெதரால் மூடப்பட்டுள்ளன. டேஸ்போர்டில் இரு திரைகள் காட்சி தருகின்றன. இதில் புதிய அகலமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரை மற்றும் பெரிய அளவில் மாத்திரை வடிவிலான இன்ஃபோடெயின்மெண்ட் திரை என்பவை அடங்குகின்றன.

2023 ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி கார் உலகளவில் வெளியீடு!! நமக்குத்தான் கொடுத்து வைக்கல...!

அத்துடன் இணைப்பு கார் தொழிற்நுட்ப வசதிகளின் எண்ணிக்கையையும் புதிய எவரெஸ்ட்டில் ஃபோர்டு அதிகரித்துள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கிய சிறப்பம்சமாக அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்பு (ADAS) பயணிகள் பாதுகாப்பு தொகுப்பாக வழங்கப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி புதிய எண்டேவியரில் மூன்று என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

2023 ஃபோர்டு எண்டேவியர் எஸ்யூவி கார் உலகளவில் வெளியீடு!! நமக்குத்தான் கொடுத்து வைக்கல...!

இதில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர், இரட்டை-டர்போ ஈக்கோப்ளூ டீசல் மற்றும் 2.3 லிட்டர் ஈக்கோ பூஸ்ட் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் அடங்குகின்றன. இவை இரண்டும் ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் வழங்கப்பட்டு கொண்டிருக்க, புதியதாக 3.0 லிட்டர் வி6 டர்போ டீசல் என்ஜின் தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றுடன் 10-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழக்கம்போல் கொடுக்கப்பட உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஃபோர்டு #ford
English summary
The new gen ford endeavour suv launched for global markets
Story first published: Tuesday, March 1, 2022, 21:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X