இந்த கார் எல்லாம் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டிற்கு வந்தாலே கொத்திட்டு போக கழுகு மாதிரி காத்திகிட்டு இருக்காங்க!

இந்தியாவில் தற்போது செகண்ட் ஹேண்ட் கார் விற்பனை கொரோனா காலத்திற்கு முந்தைய அளவை எட்டியுள்ளது. புதிய கார்களுக்கு நிகராக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்கெட்டும் பெரியதாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 41 லட்சம் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்கெட் மிகவும் பெரியதாக இருக்கிறது. இங்கு புதிதாக கார் வாங்க பட்ஜெட் இல்லாத பலர் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். சிலர் குறைந்த விலையில் சொகுசான கார் வேண்டும் என்பதற்காகவும், சிலர் கார் ஓட்டி படிப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி வருகின்றனர். இப்படியாக கார்கள் வாங்கப்படும் எண்ணிக்கை புதிய கார்கள் வாங்கப்படும் எண்ணிக்கைக்கு நிரகாக உள்ளது.

இந்த கார் எல்லாம் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டிற்கு வந்தாலே கொத்திட்டு போக கழுகு மாதிரி காத்திகிட்டு இருக்காங்க!

இந்நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்கெட் குறித்த ஒரு அய்வறிக்கை புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2022ம் நிதியாண்டில் மொத்தம் 41 லட்சம் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் உள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை 2027ம் நிதியாண்டில் 82 லட்சமாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது உள்ளதை விட 5 ஆண்டுகளில் மார்கெட் இரு மடங்காகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியாகப் பயன்படுத்தப்பட்ட கார் மார்கெட்டில் குறிப்பிட்ட ரக கார்களுக்கு மட்டுமே அதிக டிமாண்ட் உள்ளது. 2022ம் நிதியாண்டில் மொத்தம் விற்பனையான பயன்படுத்தப்பட்ட கார்களில் 49 சதவீதம் யூட்டிலிட்டி வாகனங்களும், 45 சதவீதம் சிறிய ரக கார்களும், 3 சதவீதம் செடான் கார்களும் விற்பனையாகிறது. இந்த காலகட்டத்தில் பெரிய கார்களின் விற்பனை 8 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகும், சிறிய கார்களின் விற்பனை 65 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் அதிகமாக விற்பனையாகும் கார்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. யூட்டிலிட்டி வாகனங்களைப் பொருத்தவரை ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி பிரெஸ்ஸா, மாருதி எர்டிகா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 ஆகிய கார்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையாகியுள்ளது. இந்த கார்கள் எல்லாம் மக்கள் அதிகம் விரும்புவதால் இந்த கார்களுக்கு மார்கெட்டில் நல்ல டிமாண்ட் உள்ளது.

அதே போல 5 ஆண்டுகள் பழமையான காரை பொருத்தவரை மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ரெனால்ட் க்விட், மாருதி சுஸூகி டிசையர், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மற்றும் செடான் கார்களில் ஹோண்டா சிட்டி ஆகிய கார்களுக்கு செகண்ட் ஹேண்ட் மார்கெட்டில் மவுசு அதிகமாக இருக்கிறது. இந்த கார்கள் எல்லாம் அதிக எண்ணிக்கையில் வாங்கப்படுகிறது. மற்ற கார்கள் எல்லாம் வாங்கப்படுவதில்லை என அர்த்தம் இல்லை. எண்ணிக்கையில் அடிப்படையில் இந்த பட்டில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் எல்லாம் செகண்ட் ஹேண்டில் காரை வாங்கி அதை பதிவு செய்ததன் தகவலின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது. இது போக பல கார்கள் பெயர் பதிவுகளை மாற்றாமலேயே கைமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அது இந்த கணக்கில் வராது. அதே போல கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு கொரோனா தொற்றிலிருந்து பல தொழில்கள் மீண்டு வந்துள்ளது ஒரு முக்கியமான காரணமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எஸ்யூவி ரக மார்கெட்களுக்கு நல்ல மவுசு இருக்கும் நிலையில் அந்த ரக கார்களுக்கு செகண்ட் ஹேண்ட் மார்கெட்டிலும் நல்ல மவுசு இருக்கிறது. இதனால் பலர் எஸ்யூவி ரக கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். செடான் கார்களுக்கான மவுசு குறைந்த விட்டது. பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்கெட்டில் ஹோண்டா சிட்டியைத் தவிர மற்ற செடான் கார்களின் விற்பனை மிகவும் குறைவாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
These cars have a big demand in the second hand car market
Story first published: Monday, November 28, 2022, 15:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X