7-இருக்கைகளுடன் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் இதுதான்!! இதிலிலும் மாருதி சுஸுகியின் ஆதிக்கமா!

கடந்த சில வருடங்களில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடந்த வருடங்களில் பல புதிய பிரிவுகளில் புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

7-இருக்கைகளுடன் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் இதுதான்!! இதிலிலும் மாருதி சுஸுகியின் ஆதிக்கமா!

இந்த வகையில் 7-இருக்கை கார்கள் சமீப காலங்களாக அதிகளவில் நம் நாட்டு சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. இத்தகைய 7-இருக்கை கார்கள் எவை? கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் அவை ஒவ்வொன்றும் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன? என்பதை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போவோம்.

7-இருக்கைகளுடன் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் இதுதான்!! இதிலிலும் மாருதி சுஸுகியின் ஆதிக்கமா!

மாருதி சுஸுகி எர்டிகா, இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனையாகக்கூடிய எம்பிவி மாடலான இது, 7-இருக்கை கார்களின் விற்பனையிலும் மற்ற அனைத்தையும் முந்திக்கொண்டு முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 11,840 எர்டிகா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது.

7-இருக்கைகளுடன் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் இதுதான்!! இதிலிலும் மாருதி சுஸுகியின் ஆதிக்கமா!

இந்தியாவில் பிரபலமான 'குடும்பத்திற்கான' காராக விளங்கும் எர்டிகாவின் விற்பனை 2020 டிசம்பரை காட்டிலும் கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 29% அதிகரித்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 9,177 எர்டிகா கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த, 7-இருக்கை கார்களின் கடந்த மாத விற்பனை லிஸ்ட்டில் எர்டிகாவின் விற்பனை எண்ணிக்கை மட்டுமே 10,000 யூனிட்களை கடந்துள்ளது.

7-இருக்கைகளுடன் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் இதுதான்!! இதிலிலும் மாருதி சுஸுகியின் ஆதிக்கமா!

இதற்கடுத்து இரண்டாவது இடத்தில் மஹிந்திராவின் பொலிரோ எஸ்யூவி மாடல் 5,314 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இதன் விற்பனையும் வருடம்-வருடம் ஒப்பிடுகையில் 5% அதிகரித்துள்ளது. ஏனென்றால் 2020 டிசம்பரில் 5,053 பொலிரோ கார்களையே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. மூன்றாவது இடத்தில் மற்றொரு மாருதி சுஸுகி தயாரிப்பாக எக்ஸ்.எல்6 பிரீமியம் ரக எஸ்யூவி கார் உள்ளது.

7-இருக்கைகளுடன் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் இதுதான்!! இதிலிலும் மாருதி சுஸுகியின் ஆதிக்கமா!

எர்டிகாவின் பிரீமியம் ரக வெர்சனான எக்ஸ்.எல்6 7-இருக்கை தேர்வில் தற்சமயம் கிடைப்பதில்லை. 6-இருக்கை தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. கடந்த மாதத்தில் இந்த மாருதி சுஸுகி கார் 4,090 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்.எல்6 மாடலின் விற்பனை 2020 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

7-இருக்கைகளுடன் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் இதுதான்!! இதிலிலும் மாருதி சுஸுகியின் ஆதிக்கமா!

ஏனெனில் அந்த மாதத்தில் 32.4% குறைவாக 3,088 எக்ஸ்.எல்6 கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இம்முறை நான்காம் இடத்தில் டொயோட்டாவின் இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி கார் உள்ளது. இந்தியர்களின் ஃபேவரட்டான இது கடந்த மாதத்தில் 3,989 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உண்மையில் 2020 டிசம்பரை காட்டிலும் 44.3% அதிகமாகும்.

7-இருக்கைகளுடன் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் இதுதான்!! இதிலிலும் மாருதி சுஸுகியின் ஆதிக்கமா!

ஏனெனில் அந்த மாதத்தில் 2,764 இன்னோவா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தை கடந்த 2021ஆம் ஆண்டில் கவனிக்கத்தக்க அப்டேட்களுடன், பிராண்டின் புதிய லோகோவை பெற்றுவந்துள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி700 தனதாக்கியுள்ளது. கடந்த மாதத்தில் இந்த மஹிந்திரா கார் 3,980 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

7-இருக்கைகளுடன் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் இதுதான்!! இதிலிலும் மாருதி சுஸுகியின் ஆதிக்கமா!

இத்தகைய புதிய வருகைகளினால் ரெனால்ட் ட்ரைபர் போன்ற ஆண்டுக்கணக்கில் விற்பனையில் உள்ள கார்களின் விற்பனை குறைகிறது. ட்ரைபர் எம்யூவி மாடல் 2,901 யூனிட்களின் விற்பனை உடன் இந்த லிஸ்ட்டில் ஆறாம் இடத்தில் உள்ளது. ஆனால் 2020 டிசம்பரில் ட்ரைபர் கார்களின் விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 ஆயிரமாக இருந்தது. இந்த வகையில் இந்த ரெனால்ட் 7-இருக்கை காரின் விற்பனை 41.6% கடந்த மாதத்தில் குறைந்துள்ளது.

7-இருக்கைகளுடன் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் இதுதான்!! இதிலிலும் மாருதி சுஸுகியின் ஆதிக்கமா!

டொயோட்டா ஃபார்ச்சூனர் 7வது இடத்தை 1,827 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. 2020 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் மும்மடங்கு அதிகரித்துள்ளது. ஏனெனில் 2020 டிசம்பரில் வெறும் 584 ஃபார்ச்சூனர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் 8வது இடத்தில் உள்ள மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களின் விற்பனை இதற்கு முந்தைய டிசம்பரை காட்டிலும் 48.5% குறைந்துள்ளது.

7-இருக்கைகளுடன் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் இதுதான்!! இதிலிலும் மாருதி சுஸுகியின் ஆதிக்கமா!

2020 டிசம்பரில் 3,417 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதத்தில் 1,757 ஸ்கார்பியோ கார்களே விற்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட 7-இருக்கை கார்கள் லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் டாடா சஃபாரி மற்றும் ஹூண்டாய் அல்கஸார் மாடல்கள் முறையே 1,481 யூனிட்கள் மற்றும் 1,002 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளன.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 7 seaters in dec 2021 maruti ertiga continue to finish on top
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X