Just In
- 1 hr ago
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- 2 hrs ago
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
- 4 hrs ago
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
- 6 hrs ago
மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்ப அவரு வாங்கியிருக்க கார பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!
Don't Miss!
- Finance
குஜராத்தின் கிப்ட் சிட்டியில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!
- Movies
வருண் அக்ஷராவுக்கு திருமணமா ?... இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!
- News
ஆளுங்கட்சி பிரமுகரின் காரில் சடலம்.. "அடிச்சு கொன்றது இவர்தான்" உறவினர்கள் புகாரால் அதிர்ச்சி!
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Sports
"ஓய்வு நியாயமாக இருக்காது".. சிஎஸ்கேவின் கடைசிப்போட்டி.. கேப்டன் தோனி கூறிய முக்கிய கருத்து!
- Lifestyle
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது வேற லெவல் சம்பவமா இருக்கே... மாருதியை தூக்கி சாப்பிட்ட டாடா... மேட்டர் என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!
இந்திய சந்தையில் மிகவும் பாதுகாப்பான டாடா நெக்ஸான் காரின் கை ஓங்கி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கிய முதல் இந்திய கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் தன்வசம் வைத்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 6,938 ஆக இருந்த டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 13,471 ஆக உயர்ந்துள்ளது. இது 94.1 சதவீத வளர்ச்சியாகும். டாடா நிறுவனம் நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலை எடுத்து கொண்டால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான் முதலிடம் வகித்து வருகிறது. இந்த சூழலில் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் என்ற பெயரில் இந்த புதிய மாடல் களமிறக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த பட்டியலில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரலில் 11,220 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரலில் 11,764 ஆக உயர்ந்துள்ளது. இது 4.8 சதவீத வளர்ச்சியாகும். ஒரு சமயத்தில் இந்த செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாதான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வந்தது.

ஆனால் சமீப காலமாக டாடா நெக்ஸான் காரின் கை ஓங்கி வருகிறது. இதற்கிடையே மாருதி சுஸுகி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடலை வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய மாடலின் வருகைக்கு பின் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் விற்பனையில் எழுச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்த பட்டியலில் டாடா பன்ச் 3வது இடத்தை பிடித்துள்ளது. இதுவும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற கார் ஆகும். நடப்பாண்டு ஏப்ரல் மாதம் டாடா நிறுவனம் 10,132 பன்ச் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பதால், 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட முடியாது.

இந்த பட்டியலில் ஹூண்டாய் வெனியூ 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரலில் 11,245 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரலில் 8,392 ஆக குறைந்துள்ளது. இது 25.3 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் கியா சொனெட் 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7,724 சொனெட் கார்களை கியா விற்பனை செய்திருந்தது.

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 5,404 ஆக குறைந்துள்ளது. இது 30 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 4 மற்றும் 5வது இடங்களில் உள்ள ஹூண்டாய் வெனியூ மற்றும் கியா சொனெட் கார்களின் புதிய சிஎன்ஜி மாடல்கள் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையே இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் 6வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரலில் 4,144 ஆக இருந்த இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரலில் 3,909 ஆக சுருங்கியுள்ளது. இது 5.6 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் 7வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,115 ஆக இருந்த அர்பன் க்ரூஸர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 3,524 ஆக உயர்ந்துள்ளது. இது 66.6 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ரெனால்ட் கைகர் காருக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரலில் 2,800 ஆக இருந்த ரெனால்ட் கைகர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரலில் 2,618 ஆக குறைந்துள்ளது.

இது 6.5 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் நிஸான் மேக்னைட் 9வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,904 நிஸான் மேக்னைட் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 1,966 ஆக குறைந்துள்ளது. இது 32.3 சதவீத வீழ்ச்சியாகும். ஆரம்பத்தில் ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால் தற்போது அந்த கார்களின் விற்பனை குறைய தொடங்கியுள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை ஹோண்டா டபிள்யூஆர்-வி பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1,194 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் வெறும் 635 ஆக சுருங்கியுள்ளது. இது 46.8 சதவீத வீழ்ச்சியாகும்.
-
அதிக ரேஞ்ச் உடன்... டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா? டீசர் வீடியோ வெளியீடு!!
-
பரிதாபத்திற்குள்ளான பஜாஜ் பல்சர்.. இப்படி ஒரு நிலைமை வரும்ன்னு யாருமே நினைச்சு பார்த்திருக்க மாட்டாங்க...
-
ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?