விற்பனையில் டாடா நெக்ஸானை முந்திய மாருதி பிரெஸ்ஸா!! முதல் மாதத்திலேயே கை மேல் பலன்!

கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் டாடா நெக்ஸானை முந்திய மாருதி பிரெஸ்ஸா!! முதல் மாதத்திலேயே கை மேல் பலன்!

இந்தியாவில் பயணிகள் கார்கள் விற்பனை என்றாலே அதில் மாருதி சுஸுகியின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் என்பது ஊரறிந்த விஷயம். கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையிலும் மாருதி சுஸுகியின் கார்களே டாப்-10 லிஸ்ட்டில் பெரும்பான்மையான இடங்களை பிடித்துள்ளன.

விற்பனையில் டாடா நெக்ஸானை முந்திய மாருதி பிரெஸ்ஸா!! முதல் மாதத்திலேயே கை மேல் பலன்!

குறிப்பாக மாருதியின் சமீபத்திய அறிமுகமான பிரெஸ்ஸா டாடா நெக்ஸானை முந்தி இந்தியாவின் சிறந்த எஸ்யூவி மாடலாக உருவெடுத்துள்ளது. ஆனால் மொத்தமாக பார்க்கும்போது மாருதி சுஸுகியின் பலேனோ கடந்த மாதத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை பிடித்துள்ளது.

விற்பனையில் டாடா நெக்ஸானை முந்திய மாருதி பிரெஸ்ஸா!! முதல் மாதத்திலேயே கை மேல் பலன்!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி பலேனோ கார்களின் எண்ணிக்கை 18,418 யூனிட்களாகும். அதுவே 2021 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையான பலேனோ கார்களின் எண்ணிக்கை 15,646 மட்டுமே ஆகும். இந்த வகையில் பார்க்கும்போது, பலேனோ கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் 17.72% அதிகரித்துள்ளது.

விற்பனையில் டாடா நெக்ஸானை முந்திய மாருதி பிரெஸ்ஸா!! முதல் மாதத்திலேயே கை மேல் பலன்!

பலேனோவிற்கு அடுத்து 2வது இடத்தில் வேகன்ஆர் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 18,398 வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது கடந்த மாத விற்பனையில் முதலிடத்தில் உள்ள பலேனோவை காட்டிலும், வேகன்ஆர் வெறும் 20 யூனிட்கள் மட்டுமே குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் 18,398 வேகன்ஆர் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 2021 ஆகஸ்ட்டில் 9,628 வேகன்ஆர் கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

விற்பனையில் டாடா நெக்ஸானை முந்திய மாருதி பிரெஸ்ஸா!! முதல் மாதத்திலேயே கை மேல் பலன்!

இந்த வகையில் வருடம்-வருடம் ஒப்பீடுகையில் வேகன்ஆர் கார்களின் விற்பனை கடந்த மாதத்தில் 91.09% அதிகரித்துள்ளது. மொத்தமாக கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையில் இந்த இரு மாருதி கார்கள் தலா 13%-ஐ ஆக்கிரமித்துள்ளன. கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான 10 கார்களில் முதல் இரு இடங்கள் மட்டுமின்றி, 3வது இடத்திலும் மாருதி சுஸுகியின் தயாரிப்பே உள்ளது.

விற்பனையில் டாடா நெக்ஸானை முந்திய மாருதி பிரெஸ்ஸா!! முதல் மாதத்திலேயே கை மேல் பலன்!

மாருதி சுஸுகியின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரான பிரெஸ்ஸா அனைவரையும் அசரடிக்கும் விதமாக 15,193 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2021 ஆகஸ்ட்டில் 12,906 விட்டாரா பிரெஸ்ஸா கார்களே விற்கப்பட்டு இருந்தன. விட்டாரா பிரெஸ்ஸாவின் அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாடலே பிரெஸ்ஸா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கடுத்த 4வது இடத்தில்தான் டாடா நெக்ஸான் உள்ளது.

விற்பனையில் டாடா நெக்ஸானை முந்திய மாருதி பிரெஸ்ஸா!! முதல் மாதத்திலேயே கை மேல் பலன்!

கடந்த பல மாதங்களாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காராக விளங்கிவந்த டாடா நெக்ஸானை முந்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிறந்த விற்பனை எஸ்யூவியாக முதலிடத்திற்கு வந்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாடா நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 15,085 ஆகும். சிறந்த விற்பனை எஸ்யூவி என்கிற முதலிட அரியணையை இழந்திருந்தாலும், நெக்ஸான் கார்களின் விற்பனை 2021 ஆகஸ்ட்டை காட்டிலும் கடந்த மாதத்தில் ஏறக்குறைய 50% அதிகரித்துள்ளது.

விற்பனையில் டாடா நெக்ஸானை முந்திய மாருதி பிரெஸ்ஸா!! முதல் மாதத்திலேயே கை மேல் பலன்!

ஏனெனில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 10,006 மட்டுமே ஆகும். நெக்ஸானிற்கு அடுத்து ஆல்டோ 14,388 யூனிட்களின் விற்பனை உடன் 5வது இடத்தில் உள்ளது. அதுவே கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இதனை காட்டிலும் ஏறக்குறைய ஆயிரம் ஆல்டோ கார்கள் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

Rank Model Aug'22 Aug'21 Growth (%)
1 Maruti Baleno 18,418 15,646 17.72
2 Maruti WagonR 18,398 9,628 91.09
3 Maruti Brezza 15,193 12,906 17.72
4 Tata Nexon 15,085 10,006 50.76
5 Maruti Alto 14,388 13,236 8.70
6 Hyundai Creta 12,577 12,597 -0.16
7 Tata Punch 12,006 0 -
8 Maruti EECO 11,999 10,666 12.50
9 Maruti Dzire 11,868 5,714 107.70
10 Maruti Swift 11,275 12,483 -9.68
Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 cars august 2022 maruti baleno on top
Story first published: Friday, September 9, 2022, 19:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X