கூரையை பீய்த்துக் கொட்டும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை- மொத்த விற்பனையில் ஹூண்டாயை முந்திய டாடா மோட்டார்ஸ்

கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கூரையை பீய்த்துக் கொட்டும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை- மொத்த விற்பனையில் ஹூண்டாயை முந்திய டாடா மோட்டார்ஸ்

குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை மற்றும் வைரஸ் பரவலால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளினால் கடந்த டிசம்பர் மாதத்தில் பெரும்பான்மையான மக்கள் வாங்கக்கூடிய கார்களின் விற்பனை ஏற்றம், இறக்கங்களை சந்தித்த வண்ணம் உள்ளன.

கூரையை பீய்த்துக் கொட்டும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை- மொத்த விற்பனையில் ஹூண்டாயை முந்திய டாடா மோட்டார்ஸ்

கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட காராக மாருதி சுஸுகியின் வேகன்ஆர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 19,729 வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2020 டிசம்பர் மாதத்தில் 17,684 வேகன்ஆர் கார்களே விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில் வேகன்ஆர் கார்களின் விற்பனை 11.5% அதிகரித்துள்ளது.

கூரையை பீய்த்துக் கொட்டும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை- மொத்த விற்பனையில் ஹூண்டாயை முந்திய டாடா மோட்டார்ஸ்

இதற்கடுத்து கடந்த மாதத்தில் அதிக வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்ட காராக மாருதி சுஸுகியின் ஸ்விஃப்ட் காம்பெக்ட் ஹேட்ச்பேக் உள்ளது. மாருதியின் ஹார்டெக் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த 5-இருக்கை மாடலானது கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 15,661 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 டிசம்பரில் கிட்டத்தட்ட 13.6% அதிகமாக 18,131 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கூரையை பீய்த்துக் கொட்டும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை- மொத்த விற்பனையில் ஹூண்டாயை முந்திய டாடா மோட்டார்ஸ்

இவை இரண்டு மட்டுமின்றி இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்திலும் மாருதி சுஸுகியின் தயாரிப்பாக பலேனோ 14,458 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. பலேனோவின் விற்பனையும் 2020 டிசம்பரில் 18 ஆயிரத்தை கடந்து, 18,030 யூனிட்களாக இருந்தது. இதன்படி பார்க்கும்போது, பலேனோவின் உள்நாட்டு விற்பனை 19.8% குறைந்துள்ளது.

கூரையை பீய்த்துக் கொட்டும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை- மொத்த விற்பனையில் ஹூண்டாயை முந்திய டாடா மோட்டார்ஸ்

இந்த வரிசையில் நான்காவது இடத்தை அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக டாடா மோட்டார்ஸின் காம்பெக்ட் எஸ்யூவி காரான நெக்ஸான் பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் மட்டுமே 12,899 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 88.7% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 6,835 நெக்ஸான் கார்களையே டாடா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

கூரையை பீய்த்துக் கொட்டும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை- மொத்த விற்பனையில் ஹூண்டாயை முந்திய டாடா மோட்டார்ஸ்

நெக்ஸானின் விற்பனையில் அபரிதமான வளர்ச்சியின் உதவியுடன் டாடா மோட்டார்ஸ் கடந்த மாத பயணிகள் கார்கள் விற்பனையில் ஹூண்டாய் மோட்டார்ஸை முந்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு மாத விற்பனை எண்ணிக்கையை கடந்த டிசம்பர் மாதத்தில் டாடா நிறுவனம் பதிவு செய்துள்ளது.

கூரையை பீய்த்துக் கொட்டும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை- மொத்த விற்பனையில் ஹூண்டாயை முந்திய டாடா மோட்டார்ஸ்

இதேபோன்று ஐந்தாவது இடத்தில் உள்ள மாருதி எர்டிகா எம்பிவி காரின் விற்பனையும் 2020 டிசம்பரை காட்டிலும் கடந்த மாதத்தில் 29% அதிகரித்துள்ளது. 2020 டிசம்பரில் 9,177 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதத்தில் 11,840 எர்டிகா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இவ்வாறு எதிர்பாராத மாடல்கள் விற்பனையில் வளர்ச்சியை கண்டிருப்பினும், எப்போதும் அதிகளவில் விற்பனையாகும் சில மாடல்கள் விற்பனையில் சரிவை கண்டுள்ளன.

கூரையை பீய்த்துக் கொட்டும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை- மொத்த விற்பனையில் ஹூண்டாயை முந்திய டாடா மோட்டார்ஸ்

இதற்கு உதாரணமாக, மாருதி சுஸுகி ஆல்டோ மற்றும் டிசைர் கார்கள் கடந்த மாதத்தில் வருடம்-வருடம் ஒப்பிடுகையில் முறையே 38.4% மற்றும் 23.3% வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இவை இரண்டின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் 11,170 மற்றும் 10,633 ஆகும். ஆனால் இவை 2020 டிசம்பர் மாதத்தில் முறையே 18,140 மற்றும் 13,868 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

கூரையை பீய்த்துக் கொட்டும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை- மொத்த விற்பனையில் ஹூண்டாயை முந்திய டாடா மோட்டார்ஸ்

இவற்றை தொடர்ந்து 8வது இடத்தில், இந்த டாப்-10 லிஸ்ட்டின் ஒரே ஒரு ஹூண்டாய் காராக வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி 10,360 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. ஆனால் இதற்கு முந்தைய டிசம்பரில் கிட்டத்தட்ட 15.8% அதிகமான வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 9வது இடத்தில் வென்யூவிற்கு விற்பனையில் நேரடி போட்டி மாடலான மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளது.

கூரையை பீய்த்துக் கொட்டும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை- மொத்த விற்பனையில் ஹூண்டாயை முந்திய டாடா மோட்டார்ஸ்

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் எண்ணிக்கை 9,531 ஆகும். 2020 டிசம்பரில் இதன் விற்பனையும் 12 ஆயிரத்தை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் விற்பனை 22.2% குறைந்துள்ளது. இந்த லிஸ்ட்டில் கடைசி இடத்தில் மாருதி ஈக்கோ உள்ளது. கடந்த மாதத்தில் 9,165 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 2020 டிசம்பரில் 11,215 ஈக்கோ வாகனங்கள் விற்கப்பட்டு இருந்தன.

Most Read Articles

English summary
Top 10 cars in dec 2021 tata motors beat hyundai to secure 2nd position
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X