என்னதான் இருந்தாலும் மாருதி மாருதிதான்... இங்க அவங்கதான் கெத்து... டாடா, ஹூண்டாய் எல்லாம் நெருங்க கூட முடியாது

மாருதி சுஸுகி நிறுவனம் மீண்டும் ஒரு முறை கெத்து காட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

என்னதான் இருந்தாலும் மாருதி மாருதிதான்... இங்க அவங்கதான் கெத்து... டாடா, ஹூண்டாய் எல்லாம் நெருங்க கூட முடியாது!

இந்தியாவின் ஹேட்ச்பேக் கார் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த ஜூலை மாதமும் இது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், 7 இடங்களை மாருதி சுஸுகி நிறுவனம் பிடித்துள்ளது. இதன் மூலம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் தனது கெத்தை மாருதி சுஸுகி நிரூபித்துள்ளது.

என்னதான் இருந்தாலும் மாருதி மாருதிதான்... இங்க அவங்கதான் கெத்து... டாடா, ஹூண்டாய் எல்லாம் நெருங்க கூட முடியாது!

மறுபக்கம் ஹூண்டாய் நிறுவனம் 2 இடங்களையும், டாடா நிறுவனம் 1 இடத்தையும் மட்டுமே பிடித்துள்ளன. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி வேகன் ஆர் முதலிடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 22,836 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜூலை மாதம் 22,588 என சற்றே சரிந்துள்ளது. இது 1 சதவீத வீழ்ச்சியாகும்.

என்னதான் இருந்தாலும் மாருதி மாருதிதான்... இங்க அவங்கதான் கெத்து... டாடா, ஹூண்டாய் எல்லாம் நெருங்க கூட முடியாது!

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 14,729 ஆக இருந்த மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 17,960 ஆக உயர்ந்துள்ளது. இது 22 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டுதான் வேகன் ஆர் மற்றும் பலேனோ கார்களின் அப்டேட் செய்யப்பட்ட புதிய 2022 மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் இருந்தாலும் மாருதி மாருதிதான்... இங்க அவங்கதான் கெத்து... டாடா, ஹூண்டாய் எல்லாம் நெருங்க கூட முடியாது!

இதற்கிடையே இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 18,434 ஆக இருந்த ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 17,539 ஆக குறைந்துள்ளது. இது 5 சதவீத வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் ஸ்விஃப்ட் காரின் புதிய மாடலை களமிறக்கவுள்ளது.

என்னதான் இருந்தாலும் மாருதி மாருதிதான்... இங்க அவங்கதான் கெத்து... டாடா, ஹூண்டாய் எல்லாம் நெருங்க கூட முடியாது!

இதற்கிடையே இந்த பட்டியலில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 6,818 ஆக இருந்த எஸ்-பிரெஸ்ஸோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 11,268 ஆக உயர்ந்துள்ளது. இது 65 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் முதல் 4 இடங்களையும் மாருதி சுஸுகி கார்களே ஆக்கிரமித்துள்ள நிலையில், 5வது இடம் ஹூண்டாய் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

என்னதான் இருந்தாலும் மாருதி மாருதிதான்... இங்க அவங்கதான் கெத்து... டாடா, ஹூண்டாய் எல்லாம் நெருங்க கூட முடியாது!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்தான் 5வது இடத்தில் உள்ள கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 9,379 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 10,000 ஆக உயர்ந்துள்ளது. இது 7 சதவீத வளர்ச்சியாகும். இதற்கிடையே இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஆல்டோ 6வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

என்னதான் இருந்தாலும் மாருதி மாருதிதான்... இங்க அவங்கதான் கெத்து... டாடா, ஹூண்டாய் எல்லாம் நெருங்க கூட முடியாது!

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 12,867 ஆல்டோ கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பாண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 9,065 ஆக குறைந்துள்ளது. இது 30 சதவீத வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் ஒரு சில நாட்களில் அப்டேட் செய்யப்பட்ட புதிய ஆல்டோ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அப்போது இந்த காரின் விற்பனை மேலும் உயரலாம்.

என்னதான் இருந்தாலும் மாருதி மாருதிதான்... இங்க அவங்கதான் கெத்து... டாடா, ஹூண்டாய் எல்லாம் நெருங்க கூட முடியாது!

இதற்கிடையே இந்த பட்டியலில் ஹூண்டாய் ஐ20 கார் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 6,518 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 6,873 என சற்றே உயர்ந்துள்ளது. இது 5 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி செலிரியோ 8வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

என்னதான் இருந்தாலும் மாருதி மாருதிதான்... இங்க அவங்கதான் கெத்து... டாடா, ஹூண்டாய் எல்லாம் நெருங்க கூட முடியாது!

கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் வெறும் 2 செலிரியோ கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 6,854 ஆக உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் டாடா அல்ட்ராஸ் 9வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 6,980 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜூலை மாதம் 6,159 ஆக குறைந்துள்ளது. இது 12 சதவீத வீழ்ச்சியாகும்.

என்னதான் இருந்தாலும் மாருதி மாருதிதான்... இங்க அவங்கதான் கெத்து... டாடா, ஹூண்டாய் எல்லாம் நெருங்க கூட முடியாது!

இந்த பட்டியலில் கடைசி மற்றும் 10வது இடத்தை மாருதி சுஸுகி இக்னிஸ் தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 3,797 இக்னிஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. நடப்பாண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 6,130 ஆக உயர்ந்துள்ளது. இது 61 சதவீத வளர்ச்சியாகும்.

Most Read Articles
English summary
Top 10 hatchbacks july 2022 maruti suzuki wagon r tops the list
Story first published: Saturday, August 6, 2022, 8:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X