இந்த காரையெல்லாம் யாருமே வாங்க மாட்டாங்கனு நினைச்சிட்டு இருந்தோம்! இவ்வளவு பேரு வாங்கி குவிச்சிருக்காங்களா?

கடந்த அக்டோபர் மாத கார் விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில், அப்பொழுது விற்பனையான டாப் 10 செடான் கார்களின் விற்பனையாகியுள்ளது.

இந்தியாவில் எஸ்யூவி கார்கள் வந்த பிறகு மக்கள் மத்தியில் செடான் கார்களுக்கான மவுசு குறைந்து விட்டதாகவே மக்கள் கருதினர். ஆனால் இன்றும் செடான் கார்களை வாங்கும் மக்கள் இருக்கிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் விற்பனையான டாப்10 செடான் கார்களின் பட்டியல் இதோ உங்களுக்காக.

இந்த காரையெல்லாம் யாருமே வாங்க மாட்டாங்கனு நினைச்சிட்டு இருந்தோம்! இவ்வளவு பேரு வாங்கி குவிச்சிருக்காங்களா?

டாப் 10 பட்டியலில் 10 வது இடத்தில் இருப்பது ஸ்கோடார் சூப்பர்ப் கார் இந்த கார் கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 143 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த 2021 அக்டோபரில் 251 கார்கள் விற்பனையாகியிருந்தது. விற்பனையில் 43 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 9வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் விர்டூஸ் கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 1072 கார்கள் விற்பனையாகியுள்ளன. 8 வது இடத்தில் ஸ்கோடா ஸ்லாவியா கார் இருக்கிறது. இது மொத்தம் 1376 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த இரு கார்களும் கடந்தாண்டு வெளியாகவில்லை.

7வது இடத்தில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் சியாஸ் கார் இருக்கிறது. இ்த கார் மொத்தம் 1884 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு 1069 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது விற்பனையில்76 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது. 6 இடத்தில் ஹூண்டாய் வெர்னா கார் இருக்கிறது. இது 2179 கார்கள் கடந்த மாதமும், 2438 கார்கள் கடந்தாண்டு அக்டோபர் மாதமும் விற்பனையாகியுள்ளது விற்பனையில் 10.6 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Rank Model Oct'22 Oct'21 Growth (%) YoY
1 Maruti Dzire 12,321 8,077 34.1
2 Honda Amaze 5,443 3,009 80.8
3 Hyundai Aura 4,248 2,701 87.2
4 Tata Tigor 4,001 1,377 190.5
5 Honda City 3,250 3,611 -10
6 Hyundai Verna 2,179 2,438 -10.6
7 Maruti Ciaz 1,884 1,069 76.2
8 Skoda Slavia 1,376 - -
9 Volkswagen Virtus 1,072 - -
10 Skoda Superb 143 251 -43

3250 கார்களை விற்பனை செய்து ஹோண்டா சிட்டி கார் 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு இதே கார் 3611 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது 10 சதவீத வீழ்ச்சியாகும். 4வது இடத்தில் டாடா டிகோர் கார் இருக்கிறது. இது மொத்தம் 4001 கார் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு வெறும் 1377 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இது 190.5 சதவீத வளர்ச்சியாகும்.

3வது இடத்தை ஹூண்டாய் ஆரா கார் 4248 கார்களை விற்பனை செய்து பிடித்துள்ளது. கடந்தாண்டு 2701 கார்களிலிரந்து 57.2 சதவீதம் விற்பனையை அதிகரித்துப் பிடித்துள்ளது. 2வது இடத்தில் ஹோண்டா அமேஸ் கார் 5443 கார்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தை கடந்தாண்டு விற்பனையான 3009 காரிலிருந்து 80.8 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றுப் பிடித்துள்ளது.

இறுதியாக மாருதி சுஸூகி டிசையர் கார் கடந்த அக்டோபரில் 12,321 கார்களை விற்பனை செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டு இதே கார் மொத்தம் 8077 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 34.1 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

Most Read Articles
English summary
Top 10 sedan cars October 2022
Story first published: Tuesday, November 15, 2022, 12:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X