கார்கள் விற்பனையில் நினைத்ததை செய்துக்காட்டிய மாருதி!! டாடா நெக்ஸானை முந்தி மீண்டும் முதலிடம்...

மற்ற வெளிநாடுகளை போன்று, இந்தியாவிலும் மக்கள் செடான் கார்களில் இருந்து எஸ்யூவி கார்களுக்கு மாறி வருகின்றனர். இதனாலேயே கடந்த சில வருடங்களில் சாலைகளில் எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

கார்கள் விற்பனையில் நினைத்ததை செய்துக்காட்டிய மாருதி!! டாடா நெக்ஸானை முந்தி மீண்டும் முதலிடம்...

மினி, சப்-காம்பெக்ட், காம்பெக்ட், நடுத்தர-அளவு & முழு-அளவு என பல்வேறு வகைகளில் உள்ள எஸ்யூவி கார்கள் அவற்றின் நிமிர்ந்த கம்பீரமான தோற்றத்தினாலும், ஆற்றல்மிக்க என்ஜின்களினாலும் மக்களை கவர்ந்து வருகின்றன. இதில் சப்-காம்பெக்ட் எஸ்யூவி எனப்படும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எந்த அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை இனி பார்க்கலாம்.

கார்கள் விற்பனையில் நினைத்ததை செய்துக்காட்டிய மாருதி!! டாடா நெக்ஸானை முந்தி மீண்டும் முதலிடம்...

குறைவான விலை, காம்பெக்ட்டான தோற்றம் உள்ளிட்டவற்றினாலேயே மற்ற எஸ்யூவி கார் பிரிவுகளை காட்டிலும், சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவானது போட்டி மிகுந்ததாக விளங்குகிறது. இதனாலேயே இந்த பிரிவில் அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் குறைந்தது ஒரு மாடலையாவது கொண்டுள்ளன.

கார்கள் விற்பனையில் நினைத்ததை செய்துக்காட்டிய மாருதி!! டாடா நெக்ஸானை முந்தி மீண்டும் முதலிடம்...

இதனால் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் மாடல் தான் ஒட்டுமொத்தமாக அதிகளவில் விற்பனையான எஸ்யூவி காராக முதலிடத்தை பிடிக்கிறது. ஒரு சமயத்தில் இந்த பிரிவில் மாருதி சுஸுகியின் விட்டாரா பிரெஸ்ஸாவிற்கும், ஹூண்டாயின் வென்யூவிற்கும் இடையே தான் பலத்த போட்டியாக இருக்கும்.

கார்கள் விற்பனையில் நினைத்ததை செய்துக்காட்டிய மாருதி!! டாடா நெக்ஸானை முந்தி மீண்டும் முதலிடம்...

ஆனால் கடந்த ஒரு வருடமாக டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் கார்களை மக்கள் அதிகளவில் வாங்க ஆரம்பித்ததினால், மாருதி, ஹூண்டாய் மாடல்களை முந்திக்கொண்டு டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்து வந்தது. குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்தோமேயானால், டாடா நெக்ஸானின் அசூர வளர்ச்சிக்கு தடையாக இனி எந்த மாடலும் வராது என கூறும் அளவிற்கு சென்றது.

கார்கள் விற்பனையில் நினைத்ததை செய்துக்காட்டிய மாருதி!! டாடா நெக்ஸானை முந்தி மீண்டும் முதலிடம்...

ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே மாருதி சுஸுகி நிறுவனம் தனது புத்தம் புதிய பிரெஸ்ஸாவை அறிமுகம் செய்து நெக்ஸானை விற்பனையில் முந்தியுள்ளது. முந்தைய விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய தலைமுறை மாடலாக கொண்டுவரப்பட்ட புதிய பிரெஸ்ஸா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 15,193 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு கடந்த மாதத்தில் வேறெந்த எஸ்யூவி காரும் விற்பனையாகவில்லை.

Rank Model Aug-22 Aug-21 Growth (%) YoY
1 Maruti Brezza 15,193 12,906 17.72
2 Tata Nexon 15,085 10,006 50.76
3 Hyundai Venue 11,240 8,377 34.18
4 Kia Sonet 7,838 7,752 1.11
5 Mahindra XUV300 4,322 5,861 -26.26
6 Nissan Magnite 3,194 2,984 7.04
7 Toyota Urban Cruiser 3,131 2,654 17.97
8 Renault Kiger 2,641 2,669 -1.05
9 Honda WR-V 415 672 -38.24
10 Ford Ecosport 0 396 -100.00
கார்கள் விற்பனையில் நினைத்ததை செய்துக்காட்டிய மாருதி!! டாடா நெக்ஸானை முந்தி மீண்டும் முதலிடம்...

அதுவே 2021 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்த விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் எண்ணிக்கை 12,906 மட்டுமே ஆகும். இருப்பினும் 2021 ஆகஸ்ட்டிலும் இந்தியாவின் சிறந்த எஸ்யூவி காராக விட்டாரா பிரெஸ்ஸா தான் முதலிடத்தை பிடித்திருந்தது. அதற்கடுத்த 2வது இடத்தையே டாடா நெக்ஸான் பெற்றிருந்தது. அதேபோல் கடந்த மாத விற்பனையிலும் டாடா நெக்ஸான் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கார்கள் விற்பனையில் நினைத்ததை செய்துக்காட்டிய மாருதி!! டாடா நெக்ஸானை முந்தி மீண்டும் முதலிடம்...

கடந்த மாதத்தில் மொத்தம் 15,085 நெக்ஸான் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் உண்மையில், கடந்த ஜூலையில் விற்பனை செய்யப்பட்டதை காட்டிலும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 871 நெக்ஸான் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Rank Model Aug-22 Jul-22 Growth (%) MoM
1 Maruti Brezza 15,193 9,709 56.48
2 Tata Nexon 15,085 14,214 6.13
3 Hyundai Venue 11,240 12,000 -6.33
4 Kia Sonet 7,838 7,215 8.63
5 Mahindra XUV300 4,322 5,937 -27.20
6 Nissan Magnite 3,194 3,583 -10.86
7 Toyota Urban Cruiser 3,131 6,724 -53.44
8 Renault Kiger 2,641 2,597 1.69
9 Honda WR-V 415 527 -21.25
10 Ford Ecosport 0 0 -
கார்கள் விற்பனையில் நினைத்ததை செய்துக்காட்டிய மாருதி!! டாடா நெக்ஸானை முந்தி மீண்டும் முதலிடம்...

கடந்த மாத விற்பனையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவிற்கும், டாடா நெக்ஸானுக்கும் இடையே வெறும் 108 யூனிட்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. ஆதலால் வரும் மாதங்களில் பிரெஸ்ஸாவை நெக்ஸான் மீண்டும் விற்பனையில் முந்தினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 sub suvs in india new maruti brezza in first place
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X