ஒரே ஆண்டில் 1.25 லட்ச ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை!! முதல் 3 இடங்களுக்குள் டாடா நெக்ஸான்!

கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒரே ஆண்டில் 1.25 லட்ச ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை!! முதல் 3 இடங்களுக்குள் டாடா நெக்ஸான்!

கடந்த 2020 மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இந்திய சந்தையில் எஸ்யூவி கார்கள் விற்பனையில் ஹூண்டாய் க்ரெட்டாவின் ஆதிக்கம் தான் இருந்து வந்தது. கடந்த சில மாதங்களாகவே தான் மற்ற எஸ்யூவி கார்கள் மீண்டும் முன்னிலைக்குவர ஆரம்பித்துள்ளன.

ஒரே ஆண்டில் 1.25 லட்ச ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை!! முதல் 3 இடங்களுக்குள் டாடா நெக்ஸான்!

இருப்பினும் மொத்தமாக கடந்த 2021ஆம் ஆண்டில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி காராக ஹூண்டாய் மோட்டார்ஸின் க்ரெட்டா மாடலே விளங்குகிறது. கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1,25,437 க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 29.3% அதிகமாகும்.

ஒரே ஆண்டில் 1.25 லட்ச ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை!! முதல் 3 இடங்களுக்குள் டாடா நெக்ஸான்!

ஏனெனில் அந்த ஆண்டில் மொத்தமாகவே 96,989 க்ரெட்டா கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 3 மாதங்கள் கழித்து 2020 மார்ச்சில் அறிமுகப்படுத்தப்பட்ட க்ரெட்டாவின் விற்பனைக்கு பெரும் தடையாக ஆரம்பத்திலேயே கொரோனா வைரஸ் பரவலினால் நாடு தழுவிய அளவிலான ஊரடங்குகள் கடைப்பிடிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஒரே ஆண்டில் 1.25 லட்ச ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை!! முதல் 3 இடங்களுக்குள் டாடா நெக்ஸான்!

இதனாலேயே 2020ஆம் காலண்டர் ஆண்டில் 1 லட்சம் என்கிற மைல்கல்லை விற்பனையில் க்ரெட்டாவில் எட்ட முடியாமல் போனது. இதற்கடுத்து கடந்த 2021இல் அதிகம் விற்பனை செய்யபட்ட எஸ்யூவி மாடலாக மாருதி சுஸுகியின் விட்டாரா பிரெஸ்ஸா 1,15,962 யூனிட்களின் விற்பனை உடன் 2வது இடத்தை தனக்கு சொந்தமாக்கியுள்ளது. ஆனால் 2020ஆம் ஆண்டில் 83,666 விட்டாரா பிரெஸ்ஸா கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஒரே ஆண்டில் 1.25 லட்ச ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை!! முதல் 3 இடங்களுக்குள் டாடா நெக்ஸான்!

இந்த வகையில் பார்க்கும்போது, விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் விற்பனை கடந்த ஆண்டில் 38.6% அதிகரித்துள்ளது. டாடா நெக்ஸான் இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் மொத்தமாக 1,08,577 நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டிலேயே வருடம்-வருடம் ஒப்பிடுகையில் விற்பனையில் அதிகளவில் முன்னேற்றம் கண்டுள்ள எஸ்யூவி மாடலாக நெக்ஸான் விளங்குகிறது.

ஒரே ஆண்டில் 1.25 லட்ச ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை!! முதல் 3 இடங்களுக்குள் டாடா நெக்ஸான்!

ஏனெனில் 2020ஆம் ஆண்டில் கடந்த ஆண்டு விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் சுமார் 122% குறைவாக வெறும் 48,842 நெக்ஸான் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. நெக்ஸானை மிக நெருக்கமாக பின்தொடர்ந்தவாறு ஹூண்டாயின் மற்றொரு பிரபலமான எஸ்யூவி மாடலான வென்யூ உள்ளது. இந்த ஹூண்டாய் காம்பெக்ட் எஸ்யூவிக்கும், டாடா நெக்ஸானிற்கும் கடந்த ஆண்டு விற்பனையில் வெறும் 570 யூனிட்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.

ஒரே ஆண்டில் 1.25 லட்ச ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை!! முதல் 3 இடங்களுக்குள் டாடா நெக்ஸான்!

அதாவது கடந்த 2021ஆம் ஆண்டில் மொத்தம் 1,08,007 வென்யூ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கியா செல்டோஸ் இந்த வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. 2020இல் அத்தனை தடைகளுக்கு மத்தியிலும் 96,932 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு சரிக்கு சமமான போட்டி மாடலாக விளங்கிய செல்டோஸ், கடந்த ஆண்டிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான யூனிட்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒரே ஆண்டில் 1.25 லட்ச ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை!! முதல் 3 இடங்களுக்குள் டாடா நெக்ஸான்!

அதாவது, 2020ஐ காட்டிலும் 1% அதிகமாக 98,187 யூனிட்கள். ஆனால் க்ரெட்டாவின் கடந்த ஆண்டு விற்பனை எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்துள்ளது. இதனாலேயே செல்டோஸ் இம்முறை 5ஆவது இடத்திற்கு சறுக்கியுள்ளது. இதற்கடுத்து இந்த வரிசையில் ஆறாவது இடத்திலும் கியாவின் தயாரிப்பாக சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி உள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 79,823 சொனெட் கார்கள் விற்கப்பட்டுள்ளன.

ஒரே ஆண்டில் 1.25 லட்ச ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை!! முதல் 3 இடங்களுக்குள் டாடா நெக்ஸான்!

2020ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சொனெட் அந்த ஆண்டில் 38,363 யூனிட்களே விற்கப்பட்டு இருந்தது. இந்த வகையில் சொனெட்டின் விற்பனை எண்ணிக்கை 108% வருடம்-வருடம் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. இதற்கடுத்துள்ளவை அனைத்தும் 50,000 யூனிட்களும் குறைவாக விற்பனை செய்யப்பட்டவையே ஆகும்.

ஒரே ஆண்டில் 1.25 லட்ச ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை!! முதல் 3 இடங்களுக்குள் டாடா நெக்ஸான்!

இந்த வகையில் 47,422 யூனிட்கள் மற்றும் 36,345 யூனிட்களின் விற்பனை உடன் எக்ஸ்யூவி300 & ஸ்கார்பியோ என்ற மஹிந்திரா எஸ்யூவி மாடல்கள் இந்த லிஸ்ட்டில் 7வது மற்றும் 8வது இடங்களை பிடித்துள்ளன. அதுவே 2020இல் இவை இரண்டும் முறையே 32,197 மற்றும் 31,240 யூனிட்களே விற்கப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்த மஹிந்திரா கார்களின் விற்பனை கடந்த வருடத்தில் 47% மற்றும் 16.3% அதிகரித்துள்ளது. இவ்வாறு இந்த டாப்-10 லிஸ்ட்டில் அனைத்தும் எஸ்யூவி கார்களும் 2020ஐ காட்டிலும் கடந்த ஆண்டில் அதிக விற்பனை எண்ணிக்கைகளை பதிவு செய்துள்ளன.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top-10 SUVs In 2021, Hyundai Creta, Maruti Vitara Brezza & Tata Nexon On Top-3
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X