ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் நல்லா வேலை செய்யுது!! மீண்டும் 10 ஆயிரத்தை கடந்த ஹூண்டாய் வென்யூவின் விற்பனை!

கடந்த 2022 ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-25 பயணிகள் கார்களை இனி இந்த செய்தியில் அட்டவணையாக பார்ப்போம்.

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் நல்லா வேலை செய்யுது!! மீண்டும் 10 ஆயிரத்தை கடந்த ஹூண்டாய் வென்யூவின் விற்பனை!

பயணிகள் கார்கள் விற்பனை என்றாலே அதில் மாருதி சுஸுகியின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. இது கடந்த 2022 ஜூன் மாத விற்பனையிலும் தொடர்ந்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், அதிகம் விற்பனை செய்யப்பட்ட முதல் 25 கார்களில் கிட்டத்தட்ட 9 மாருதி சுஸுகி கார்கள் உள்ளன.

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் நல்லா வேலை செய்யுது!! மீண்டும் 10 ஆயிரத்தை கடந்த ஹூண்டாய் வென்யூவின் விற்பனை!

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், முதல் 3 இடங்களை மாருதி சுஸுகியின் வேகன்ஆர், ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ மாடல்களே பிடித்துள்ளன. முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகியின் உயரமான ஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 19,190 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 19,447 வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் நல்லா வேலை செய்யுது!! மீண்டும் 10 ஆயிரத்தை கடந்த ஹூண்டாய் வென்யூவின் விற்பனை!

இந்த வகையில் பார்க்கும்போது, தற்போதைக்கு இந்தியாவின் நம்பர்.01 விற்பனை பயணிகள் காராக உள்ள வேகன்ஆரின் விற்பனை 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் 1.32% குறைந்துள்ளது. இதற்கடுத்து 2வது இடத்தில் உள்ள மாருதி ஸ்விஃப்ட் கடந்த மாதத்தில் 16,213 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2021 ஜூனில் விற்பனை செய்யப்பட்ட ஸ்விஃப்ட் கார்களின் எண்ணிக்கை 17,727 ஆகும்.

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் நல்லா வேலை செய்யுது!! மீண்டும் 10 ஆயிரத்தை கடந்த ஹூண்டாய் வென்யூவின் விற்பனை!

இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ள மாருதி பலேனோ கடந்த மாதத்தில் 16,103 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 4வது இடத்தில் டாடா மோட்டார்ஸின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான நெக்ஸானும், 5வது இடத்தில் ஹூண்டாயின் காம்பெக்ட் எஸ்யூவி காரான க்ரெட்டாவும் உள்ளன. இவை இரண்டின் கடந்த ஜூன் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 14,295 மற்றும் 13,790 ஆகும். இந்த வகையில் இந்தியாவின் சிறந்த விற்பனை எஸ்யூவி காராக மீண்டும் டாடா நெக்ஸான் முன்னிலை வகித்துள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் நல்லா வேலை செய்யுது!! மீண்டும் 10 ஆயிரத்தை கடந்த ஹூண்டாய் வென்யூவின் விற்பனை!

6,7 மற்றும் 8வது இடங்களில் மீண்டும் மாருதி சுஸுகியின் மாடல்களாக ஆல்டோ, டிசைர் மற்றும் எர்டிகா முறையே 13,790; 12,597 மற்றும் 10,423 யூனிட்களின் விற்பனை எண்ணிக்கைகளுடன் உள்ளன. இதில் ஆல்டோ & டிசைர் மாடல்கள் 2021 ஜூனிலும் 12,500க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா பஞ்ச் மினி-எஸ்யூவி கார் 10,414 யூனிட்களின் விற்பனை உடன் 9வது இடத்தில் உள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் நல்லா வேலை செய்யுது!! மீண்டும் 10 ஆயிரத்தை கடந்த ஹூண்டாய் வென்யூவின் விற்பனை!

10வது இடத்தில் 10,321 யூனிட்களின் விற்பனை உடன் ஹூண்டாய் வென்யூ உள்ளது. ஆனால் 2021 ஜூன் மாதத்தில் இந்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் வெறும் 4,865 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது. இதில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வென்யூ ஃபேஸ்லிஃப்ட் காருக்கு வாடிக்கையாளர்கள் அளித்துவரும் அமோக வரவேற்பினை அறியலாம்.

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் நல்லா வேலை செய்யுது!! மீண்டும் 10 ஆயிரத்தை கடந்த ஹூண்டாய் வென்யூவின் விற்பனை!

மாருதியின் வேன் மாடலான ஈக்கோ 10,130 யூனிட்களின் விற்பனை உடன் 11வது இடத்தை பிடித்துள்ளது. இவைதான் கடந்த மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார்களாகும். இவற்றிற்கு அடுத்துள்ளவை அனைத்து 9 ஆயிரம் யூனிட்களுக்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டவை ஆகும். அவை என்னென்ன என்பதை கீழுள்ள அட்டவணையில் காணலாம்.

Rank Model Jun-22 Jun-21 Growth (%)
1 Maruti Wagonr 19,190 19,447 -1.32
2 Maruti Swift 16,213 17,727 -8.54
3 Maruti Baleno 16,103 14,701 9.54
4 Tata Nexon 14,295 8,033 77.95
5 Hyundai Creta 13,790 9,941 38.72
6 Maruti Alto 13,790 12,513 10.21
7 Maruti Dzire 12,597 12,639 -0.33
8 Maruti Ertiga 10,423 9,920 5.07
9 Tata Punch 10,414 0 -
10 Hyundai Venue 10,321 4,865 112.15
11 Maruti Eeco 10,130 9,218 9.89
12 Hyundai i10 NIOS 8,992 8,787 2.33
13 Maruti Celerio 8,683 752 1054.65
14 Kia Seltos 8,388 8,549 -1.88
15 Hyundai i20 7,921 6,333 25.08
16 Kia Carens 7,895 0 -
17 Mahindra Bolero 7,884 5,744 37.26
18 Kia Sonet 7,455 5,963 25.02
19 Toyota Innova 6,795 2,973 128.56
20 Mahindra XUV700 6,022 0 -
21 Tata Altroz 5,366 6,350 -15.50
22 Tata Tiago 5,310 4,881 8.79
23 Toyota Urban Cruiser 5,301 2,584 105.15
24 Maruti Ignis 4,960 3,583 38.43
25 Tata Tigor 4,931 1,076 358.27
Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 25 cars list sell in month of june
Story first published: Wednesday, July 6, 2022, 16:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X