ஒரே காரில் குடும்பமாக செல்ல வேண்டுமா? இந்த கார்களை வாங்கினால் எந்த பிரச்சனையும் இருக்காது...

குடும்பத்தினருடன் செல்ல ஏற்ற கார்களுக்கு தற்போது இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் குடும்பத்துடன் பயணிக்க டாப் 5 எம்பிவி கார்களை இங்கே காணலாம்

ஒரே காரில் குடும்ப மாக செல்ல வேண் டுமா ? இந்த கார் களை வாங்கி னால் எந்த பிரச்ச னையும் இரு க்கா து . . .

இந்தியாவில் சமீபகாலமாக குடும்பத்துடன் பயணிக்கும் வகையிலான 6 மற்றும் அதற்கு மேற்பட்ட சீட்டர்கள் கொண்ட கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. எம்பிவி மற்றும் 3 வரிசை சீட்கள் கொண்ட எஸ்யூவி கார்களைமக்கள் விரும்பி வாங்கி துவங்கிவிட்டனர். இந்த ரக கார்களை மக்கள் வாங்குவதற்கு முக்கியமான காரணம் இன்று குடும்பங்களுடன் மக்கள் பொது போக்குவரத்தில் பயணிப்பதில் உள்ள சிக்கல் மற்றும் மக்கள் இந்த ரக கார்களை வாங்கும் அளவிற்குப் பொருளாதாரத்தைப் பெருக்கியுள்ளனர் என உணர முடிகிறது. இந்த வகையில் இந்த செய்தியில் நாம் குடும்பத்தினருடன் செல்ல சிறந்த கார்களின் பட்டியலைக் காணப்போகிறோம்.

ஒரே காரில் குடும்ப மாக செல்ல வேண் டுமா ? இந்த கார் களை வாங்கி னால் எந்த பிரச்ச னையும் இரு க்கா து . . .

மாருதி சுஸூகி XL6 (ரூ11.29 லட்சம் முதல் 14.55 லட்சம் வரை)

மாருதி சஸூகி நிறுவனம் தனது பிரிமியம் 6 சீட்டர் காராக XL6 என்ற காரை அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் அந்நிறுவனம் வெளியிடும் எர்டிகா காரின் பிரிமியர் வெர்சன் காராக விற்பனையாகி வருகிறது. இந்த காரில் நல்ல இட வசதி, குடும்பத்தினர்களுடன் செல்ல வசதியான குறைந்த விலையிலான பிரிமியம் காராக இந்த கார் உள்ளது.

ஒரே காரில் குடும்ப மாக செல்ல வேண் டுமா ? இந்த கார் களை வாங்கி னால் எந்த பிரச்ச னையும் இரு க்கா து . . .

கியா கேரன்ஸ் (ரூ9.60 லட்சம் முதல் ரூ17.70 லட்சம் வரை)

பட்ஜெட்டில் குடும்பத்தினருடன் செல்ல கார் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த கார் சிறந்த தேர்வாக இருக்கும். குறைந்த விலையில் பல பிரிமியம் அம்சங்களை இந்த கார் கொண்டுள்ளது. 3 வரிசை சீட்டிங்கிற்கு ஏற்ப இந்த காரில் பல வசதிகள் உள்ளன. இந்த கார் 6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வருகிறது.

ஒரே காரில் குடும்ப மாக செல்ல வேண் டுமா ? இந்த கார் களை வாங்கி னால் எந்த பிரச்ச னையும் இரு க்கா து . . .

டொயோட்டா இன்னோவா க்ரைஸ்டா (ரூ17.86 லட்சம் முதல் ரூ25.68 லட்சம்)

சற்று பெரிய குடும்பமாக இருப்பவர்களுக்கு இந்த கார் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த கார் 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களுடன் விற்பனையாகிறது. மூன்று வரிசைகள் கொண்ட இந்த காரில் முதல் வரிசையில் 2 சீட்கள், இரண்டாம் வரிசை, இரண்டு ஆப்ஷன்களுடன் வருகிறது. இரண்டு கேப்டன் சீட் ஆப்ஷன் அல்லது 3 சீட் கொண்ட பெஞ்ச் ஆப்ஷன்களுடன் வருகிறது. மூன்றாவது வரிசையில் 3 சீட்கள் என இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரை வாங்கி சில ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை செய்தாலும் இந்த காருக்கு ரீ வேல்யூ சிறப்பாக இருக்கிறது.

ஒரே காரில் குடும்ப மாக செல்ல வேண் டுமா ? இந்த கார் களை வாங்கி னால் எந்த பிரச்ச னையும் இரு க்கா து . . .

கியா கார்னிவல் (ரூ29.99 லட்சம் முதல் ரூ34.99 லட்சம்)

பிரிமியர் அம்சங்களுடனான மார்கெட்டிற்கு 6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரின் முதல் இரண்டு வரிசையில் கேப்டன் சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது வரிசையில் கேப்டன் சீட் அல்லது பெஞ்ச் சீட் என இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. மேலும் இந்த காரில் இரண்டு என்டர்டெயிண்மெண்ட் டச் ஸ்கிரினும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரே காரில் குடும்ப மாக செல்ல வேண் டுமா ? இந்த கார் களை வாங்கி னால் எந்த பிரச்ச னையும் இரு க்கா து . . .

டொயோட்டோ வெல் ஃபயர் (ரூ90.80 லட்சம்)

டொயோட்டோ நிறுவனம் வெளியிடும் இந்த கார் முறையான லக்ஸரி எம்பிவி காராக உள்ளது. இது 7 சீட்டர் வேரியன்ட் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்தகாரில் 3 வரிசை சீட்கள் அதில் பின்புறம் என்ட்ர்டெயிண்மெண்ட் வசதி, கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது ஹைபிரிட் டெரைன் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது காரை ஓடும் சத்தமே இல்லா அளவிற்கு அமைதியாகச் செயல்படும். இந்த காரின் முக்கிய அம்சன் இதன் சஸ்பென்சர்தான். ரோட்டில் எப்படிப்பட்ட பள்ள மேடுகள் வந்தாலும் உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு அசைவே தெரியாது.

More from DriveSpark

Article Published On: Friday, May 13, 2022, 20:58 [IST]
English summary
Top 5 mpv cars most comfortable for families in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+