ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப்-5 எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் எந்த கார்னு சொல்லுங்க பாக்கலாம்!

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப்-5 எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் எந்த கார்னு சொல்லுங்க பாக்கலாம்!

இந்தியாவில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்துள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் சமீப காலமாகவே டாடா நெக்ஸான் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப்-5 எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் எந்த கார்னு சொல்லுங்க பாக்கலாம்!

இந்த வரிசையில் கடந்த ஏப்ரல் மாதமும் டாடா நெக்ஸான் கார் மிகவும் சிறப்பான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 13,471 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 6,938 ஆக மட்டுமே இருந்தது. இது 94 சதவீத வளர்ச்சியாகும்.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப்-5 எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் எந்த கார்னு சொல்லுங்க பாக்கலாம்!

கிட்டத்தட்ட டாடா நெக்ஸான் காரின் விற்பனை அப்படியே இரட்டிப்பாகியுள்ளது என்று சொல்லலாம். இதுதான் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற முதல் மேட் இன் இந்தியா கார் ஆகும். டாடா நெக்ஸான் காரின் விற்பனை சிறப்பாக இருந்து வருவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப்-5 எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் எந்த கார்னு சொல்லுங்க பாக்கலாம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனை செய்து வருகிறது. இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல் வரும் மே 11ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் ஹூண்டாய் க்ரெட்டா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப்-5 எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் எந்த கார்னு சொல்லுங்க பாக்கலாம்!

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12,463 க்ரெட்டா கார்கள் விற்பனையாகியிருந்தன. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 12,651 க்ரெட்டா கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. இது 2 சதவீத வளர்ச்சியாகும். ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா காரின் ஸ்பெஷல் எடிசன் ஒன்றை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நைட் எடிசன் என்ற பெயரில் இந்த ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப்-5 எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் எந்த கார்னு சொல்லுங்க பாக்கலாம்!

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. டாடா நெக்ஸான் காரை போல், இதுவும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11,220 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 11,764 ஆக உயர்ந்துள்ளது. இது 5 சதவீத வளர்ச்சியாகும்.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப்-5 எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் எந்த கார்னு சொல்லுங்க பாக்கலாம்!

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தொடர்ச்சியாக பல்வேறு புதிய கார்களை களமிறக்கி வருகிறது. 2022 வேகன் ஆர், 2022 பலேனோ, 2022 எர்டிகா, 2022 எக்ஸ்எல்6 என மாருதி சுஸுகி நிறுவனத்தின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல்கள் தொடர்ச்சியாக களமிறங்கி வருகின்றன. இந்த வரிசையில் விட்டாரா பிரெஸ்ஸாவின் புதிய மாடலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப்-5 எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் எந்த கார்னு சொல்லுங்க பாக்கலாம்!

ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டாக அல்லாமல், புதிய தலைமுறை அப்டேட்டை விட்டாரா பிரெஸ்ஸா காரில் மாருதி சுஸுகி நிறுவனம் செய்யவுள்ளது. புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா கார் அடுத்த ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் டாடா பன்ச் 4வது இடத்தை பிடித்துள்ளது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப்-5 எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் எந்த கார்னு சொல்லுங்க பாக்கலாம்!

நடப்பாண்டு ஏப்ரலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 10,132 பன்ச் கார்களை விற்பனை செய்துள்ளது. இது மினி எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த காரும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. டாடா பன்ச் கார் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விற்பனையில் இல்லை.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப்-5 எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் எந்த கார்னு சொல்லுங்க பாக்கலாம்!

ஏனெனில் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் இந்த கார் விற்பனைக்கே கொண்டு வரப்பட்டது. எனவே கடந்த 2021 ஏப்ரல் மாதத்துடன் டாடா பன்ச் காரின் விற்பனையை ஒப்பிட இயலாது. இந்த பட்டியலில் ஹூண்டாய் வெனியூ 5வது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. நெக்ஸான் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை தொடர்ந்து இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள 3வது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் இதுவாகும்.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான டாப்-5 எஸ்யூவி கார்கள்... முதலிடத்தில் எந்த கார்னு சொல்லுங்க பாக்கலாம்!

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11,245 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் வெறும் 8,392 ஆக குறைந்துள்ளது. இது 25 சதவீத வீழ்ச்சியாகும். ஹூண்டாய் வெனியூ காரில் தற்போதைய நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால் கூடிய விரைவில் சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Top 5 suv s in april 2022 tata nexon leads chart
Story first published: Friday, May 6, 2022, 19:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X