Just In
- 5 min ago
இந்தியாவில் கார்களுக்கான ஆடியோ அமைப்புகளை வழங்கும் டாப் பிராண்ட்கள்!! இத்தனை இருக்கா...?
- 19 min ago
"எலெக்ட்ரிக் எல்லாம் வேஸ்ட்.. நாங்க ஃபிளக்ஸி ஃபியூயல் வாகனம் தயாரிக்க போறோம்" புது ரூட்டை எடுக்கும் ஹோண்டா
- 57 min ago
காரை அழகாக்கிய ஒரே காரணத்திற்காக அபராதம் விதித்த நீதிமன்றம்... எவ்வளவுனு தெரிஞ்சா மிரண்டுருவீங்க?
- 2 hrs ago
350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு... போட்டிக்கு யாருமே இல்ல...
Don't Miss!
- News
சதமடித்த தக்காளி விலை...இல்லத்தரசிகள் கவலை - பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் விற்க ஏற்பாடு
- Sports
ஐபிஎல் இறுதிப் போட்டி - ஒரு டிக்கெட் விலை ரூ.65 ஆயிரம்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்
- Movies
Nenjuku Needhi Review: ஆர்ட்டிக்கள் 15 படத்திற்கு நீதி செய்ததா நெஞ்சுக்கு நீதி? விமர்சனம் இதோ!
- Lifestyle
ஆரோக்கியமான இதயம் மற்றும் குடல் இயக்கத்திற்கு இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிடுங்க போதும்...!
- Finance
ஊபரில் இனி ‘நோ கேன்சலேஷன்', ஆனால் கட்டணம் உயரும்?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மல்லுக்கட்ட போகும் மாருதி-டாடா நிறுவனங்கள்... சின்ன கார் வாங்க போறவங்களுக்கு கொண்டாட்டம்தான்!
இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள அளவில் சிறிய ஹேட்ச்பேக் கார்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் ஹேட்ச்பேக் ரக கார்கள் இன்னமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக முதல் முறையாக கார் வாங்குபவர்கள் பலரது முதல் சாய்ஸாக இருப்பது ஹேட்ச்பேக்குகள்தான்.

ஓட்டுவதற்கு எளிது, நடைமுறை பயன்பாடு என இதற்கான காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ள தேவையை மனதில் வைத்து பல்வேறு நிறுவனங்களும் புதிய ஹேட்ச்பேக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. இதில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள முக்கியமான ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஆல்டோ (New-gen Maruti Suzuki Alto)
ஆல்டோ காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஆல்டோ கார், நடப்பாண்டே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. HEARTECT பிளாட்பார்ம் அடிப்படையில் புதிய தலைமுறை ஆல்டோ கட்டமைக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

தற்போது உள்ள 0.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 0.8 லிட்டர் bi-fuel (பெட்ரோல்-சிஎன்ஜி) இன்ஜின் ஆகியவை புதிய தலைமுறை மாடலிலும் அப்டேட்களுடன் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமுறை ஆல்டோ கார் சாலை சோதனை செய்யப்படும்போது ஏற்கனவே கேமராவின் கண்களில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (New-gen Maruti Suzuki Swift)
புதிய தலைமுறை ஆல்டோவுடன், புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை உருவாக்கும் பணிகளும் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடல் ஷார்ப்பான டிசைனை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் பல்வேறு புதிய வசதிகளும் கூடுதலாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனினும் தற்போது விற்பனையில் இருந்து வரும் ஸ்விஃப்ட் காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரிலும் தொடர்ந்து வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி (Maruti Suzuki Baleno CNG)
மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில்தான் தனது பலேனோ காரின் 2022 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதற்கு அடுத்தபடியாக இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் சிஎன்ஜி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும்? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எனினும் கூடிய விரைவில் மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி காரின் அறிமுகம் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி மாடலின் சோதனை ஓட்டமும் தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அதன் ஸ்பை படங்கள் வெளியாகி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன.

டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி (Toyota Glanza CNG)
மாருதி சுஸுகி பலேனோவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல்தான் டொயோட்டா க்ளான்சா என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் ரெகுலர் வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும். டொயோட்டா-சுஸுகி ஆகிய இரண்டு நிறுவனங்களும் கூட்டணியை ஏற்படுத்தி கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் மாருதி சுஸுகி கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் வேறு பெயரில் விற்பனை செய்து வருகிறது.

இந்த வகையில் விற்பனை செய்யப்படும் கார்தான் டொயோட்டா க்ளான்சா. மாருதி சுஸுகி பலேனோ காரில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, டொயோட்டா பிராண்டில் க்ளான்சா என்ற பெயரில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. மாருதி சுஸுகி பலேனோ காரின் 2022 மாடலை தொடர்ந்து, டொயோட்டா க்ளான்சா காரின் 2022 மாடலும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இதே பாணியில், மாருதி சுஸுகி பலேனோ காரின் சிஎன்ஜி மாடலை தொடர்ந்து, டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் (Tata Altroz EV)
கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் கிட்டத்தட்ட தயாரிப்பிற்கு உகந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் டாடா அல்ட்ராஸ் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். அனேகமாக நடப்பாண்டில் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனான டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள்தான் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
-
இந்தியாவில் பெட்ரோல் விலை "ரொம்ப சீப்" தான்... மற்ற நாடுகளில் எவ்வளவு விலைன்னு இங்க பாருங்க...
-
காஸ்ட்லி கார்களை தான் இந்திய மக்கள் வாங்குகிறார்களாம்... லோ பட்ஜெட் கார்களுக்கு மவுசே இல்லாம போச்சு...