மைலேஜ் விஷயத்தில் சமரசம் வேண்டாம்... இந்தியாவில் இந்த 2022இல் விற்பனைக்கு வந்த பிரபலமான சிஎன்ஜி கார்கள்!!

பெட்ரோல் & டீசல் விலை உயர்வுகளினாலும், இவற்றிற்கு மாற்றாக புதியதொரு எரிபொருளின் பயன்பாட்டை கொண்டுவரும் முயற்சியாகவும் சிஎன்ஜி கார்கள் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன. இந்த வகையில் இந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த சிஎன்ஜி கார்களுள் முக்கியமான சில மாடல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் இந்த 2022இல் விற்பனைக்கு வந்த சிஎன்ஜி கார்கள்!!

மாருதி ஆல்டோ கே10 சிஎன்ஜி & செலிரியோ சிஎன்ஜி & எஸ்-பிரெஸ்ஸோ சிஎன்ஜி

இந்தியாவில் விலை குறைவான பட்ஜெட் கார்களாக விளங்கும் ஆல்டோ கே10, செலிரியோ மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் இந்த ஆண்டில் அப்டேட் செய்தது. இவை மூன்றும் பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, சிஎன்ஜி தேர்விலும் விற்கப்படுகின்றன. இந்த ஹேட்ச்பேக் கார்களில் பொருத்தப்படும் 1.0 லிட்டர் கே10சி என்ஜின் ஆனது சிஎன்ஜி மோடில் அதிகப்பட்சமாக 57 பிஎச்பி மற்றும் 82 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டாடா டியாகோ சிஎன்ஜி & டிகோர் சிஎன்ஜி

டாடா மோட்டார்ஸின் மலிவான, அதேநேரம் பாதுகாப்பான கார்கள் என பெயர் பெற்ற டியாகோ மற்றும் டிகோர் கார்கள் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பை-ஃப்யுல் சிஎன்ஜி தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் சிஎன்ஜி வெர்சனில் அதிகப்பட்சமாக 73 பிஎச்பி மற்றும் 95 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை பெற முடியும். சிஎன்ஜி வேரியண்ட்களில் மைலேஜ் 26.49kmpkg என்ற அளவில் கிடைக்கிறது.

மாருதி பலேனோ சிஎன்ஜி

இந்தியாவில் சிஎன்ஜி தேர்வுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் பிரீமியம் தர ஹேட்ச்பேக் காராக மாருதி சுஸுகி பலேனோ விளங்குகிறது. அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் பயணிகள் கார்களுள் ஒன்றாகவும் விளங்கும் பலேனோவின் சிஎன்ஜி வேரியண்ட்களில் 1.2 லிட்டர் கே12 பை-ஃப்யுல் சிஎன்ஜி என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த சிஎன்ஜி என்ஜினின் வாயிலாக அதிகப்பட்சமாக 77 பிஎச்பி மற்றும் 98.5 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும்.

டொயோட்டா க்ளான்ஸா சிஎன்ஜி

மாருதி சுஸுகியும், டொயோட்டாவும் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இதனாலேயே பலேனோ சிஎன்ஜி காரில் பொருத்தப்படும் அதே 1.2 லிட்டர் கே12 பை-ஃப்யுல் சிஎன்ஜி உடன் டொயோட்டா க்ளான்ஸா சிஎன்ஜி காரும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் க்ளான்ஸா சிஎன்ஜி காரில் அதிகப்பட்சமாக கிடைக்கப்பெறும் இயக்க ஆற்றலிலும் எந்த வித்தியாசமும் இல்லை. பலேனோ சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.28 லட்சமாக இருக்க, டொயோட்டா க்ளான்ஸா சிஎன்ஜி கார் அதனை காட்டிலும் சற்று விலைமிக்கதாக ரூ.8.43 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி

மாருதி ஸ்விஃப்ட், இந்தியாவில் கடந்த பல வருடங்களாக பிரபலமாக விளங்கும் கார்களுள் ஒன்று. இதனாலேயே ஸ்விஃப்ட் மாடலிலும் சிஎன்ஜி வெர்சனை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதனால் ஸ்விஃப்ட் கார் மேலும் பட்ஜெட் கார் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக மாறியுள்ளது. ஸ்விஃப்ட்டின் சிஎன்ஜி வேரியண்ட்களில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் 77 பிஎச்பி மற்றும் 98.5 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

மாருதி டிசைர் சிஎன்ஜி

மாருதி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக்கின் காம்பெக்ட் செடான் வெர்சன் தான் டிசைர் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். இதன் காரணமாக ஸ்விஃப்ட்டில் வழங்கப்படும் அதே சிஎன்ஜி உடன் டிசைரை விற்பனை செய்வதில் மாருதி சுஸுகிக்கு பெரியதாக எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. பலேனோ சிஎன்ஜி, ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார்களில் வழங்கப்படும் அதே சிஎன்ஜி என்ஜின் தான் இந்த காரிலும் வழங்கப்படுவதால், என்ஜின் வெளிப்படுத்தும் அதிகப்பட்ச இயக்க ஆற்றலில் எந்த வேறுப்பாடும் இல்லை.

மாருதி எக்ஸ்.எல்6

குடும்பமாக அதிக பயணிகளுடன் பயணிப்பதற்கு ஏற்ற காராக விளங்கும் மாருதி சுஸுகியின் எக்ஸ்.எல்6 எம்பிவியின் சிஎன்ஜி வெர்சன் சமீபத்தில் தான் ரூ.12.24 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காரில் பொருத்தப்படுகின்ற 1.5 லிட்டர் கே15சி என்ஜின் ஆனது 88 பிஎச்பி மற்றும் 121.5 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. என்ஜினின் அளவு பெரியது என்றாலும், மைலேஜில் எந்த குறையும் இல்லை. ஏனெனில் மாருதி எக்ஸ்.எல்6 சிஎன்ஜி காரிலும் 26.32 kmpkg வரையிலான மைலேஜை பெற முடிகிறது.

Most Read Articles

English summary
Top brands cng cars on sale in india 2022
Story first published: Saturday, December 10, 2022, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X