அதிகம் மைலேஜ் தரும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் விலை அறிவிப்பு.. இவ்ளோ குறைவா வரும்னு யாருமே எதிர்பாக்கல!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் விலைகள் பற்றிய விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. யாருமே எதிர்பார்த்திராத குறைவான விலையை இந்த காருக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பற்றிய கூடுதல் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டா நிறுவனம் அதன் புதுமுக இன்னோவா ஹைகிராஸ் காரை இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் வெளியீடு செய்தது. வெளியீட்டைத் தொடர்ந்து புக்கிங் பணிகளையும் நிறுவனம் தொடங்கியது. ஆனால், இதன் விலை விபரங்களை அது வெளியிடவில்லை. இருப்பினும், இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல புக்கிங் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே டொயோட்டா நிறுவனம் புதிய இன்னோவா ஹைகிராஸ் காரின் விலைகளை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

அறிமுகமாக ஆரம்ப நிலை வேரியண்டிற்கு ரூ. 18,30,000-ம், உயர் நிலை வேரியண்டிற்கு ரூ. 28,97,000-ம் விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டும் ஆகும். இரு விதமான பவர்டிரெயின் தேர்விலும், 8 விதமான வேரியண்ட் தேர்விலும் இன்னோவா ஹைகிராஸ் விற்பனைக்குக் கிடைக்கும். வழக்கமான பெட்ரோல் மற்றும் செல்ஃப் சார்ஜிங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய பெட்ரோல் என்கிற இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலேயே அது விற்பனைக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வேரியண்டுகளின் விபரம்:

இசட்எக்ஸ் (ஓ) ZX(O), இசட்எக்ஸ் (ZX), விஎக்ஸ் 8எஸ் (VX 8S), விஎக்ஸ் 7எஸ் (VX 7S), ஜிஎக்ஸ் 8எஸ் (GX 8S), ஜிஎக்ஸ் 7எஸ் (GX 7S), ஜி 8எஸ் (G 8S), ஜி 7எஸ் (G 7S) ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இதில், முதல் நான்கு வேரியண்டுகள் ஹைபிரிட் தொழில்நுட்ப வசதி உடனும், அடுத்த நான்கு வேரியண்டுகள் வழக்கமான பெட்ரோல் தேர்வுடனும் கிடைக்கும்.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

மைலேஜ் மற்றும் மோட்டார் விபரம்:

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் ஹைபிரிட் வேரியண்டில் 5ஆம் தலைமுறை செல்ஃப் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட ஸ்ட்ராங் ஹைபிரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. ஆமாங்க, காரின் இயக்கத்தின்போதே தானாக சார்ஜ் செய்து கொள்ளும் ஹைபிரிட் செட்-அப்பையே இந்த தேர்வில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது. ஆகையால், இந்த அம்சத்தை தனியாக சார்ஜ் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இதுவே மின் மோட்டாருக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும்.

இத்தகைய சூப்பரான செட்-அப்பையே ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தின்கீழ் இன்னோவா ஹைகிராஸ் காரில் வழங்கி உள்ளது. இத்துடன், பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்ட டிஎன்ஜிஏ 2.0 லிட்டர் 4 சிலிண்டர் மோட்டாரும் இந்த வேரியண்டில் இடம் பெற்றிருக்கும். இது மற்றும் மற்றும் மின்சார மோட்டார் ஆகிய இரண்டும் இணைந்து 137 கிலோவாட் பவர் வரை வெளியேற்றும். இது 183.7 எச்பி திறனுக்கு இணையானது. இதுமட்டுமில்லைங்க மிக அதிக ரேஞ்ஜ் தரும் திறன் கொண்டதாகவும் அது காட்சியளிக்கின்றது. லிட்டர் ஒன்றிற்கு 23.4 கிமீ வரை அது மைலேஜ் தரும்.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்

வழக்கமான பெட்ரோல் இன்னோவா ஹைகிராஸ் வேரியண்டிலும் இதே மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்படவில்லை. ஆகையால், இதன் மைலேஜ் திறன் ஹைபிரிட் வேரியண்டைக் காட்டிலும் பல மடங்கு குறைவாக உள்ளது. லிட்டர் ஒன்றிற்கு இந்த வேரியணட் 16.13 கிமீ மைலேஜை மட்டுமே வழங்கும். இதேபோல், இதில் இடம் பெற்றிருக்கும் டிஎன்ஜிஏ 2.0 லிட்டர் 4 சிலிண்டர் சற்று குறைவான திறனாக 171.6 எச்பி பவரை மட்டுமே வெளியேற்றும்.

நிற தேர்வுகள்:

டொயோட்டா நிறுவனம் இந்த புதிய இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலை பன்முக நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. சூப்பர் ஒயிட், பிளாட்டினம் ஒயிட் பியர்ல், சில்வர் மெட்டாலிக், ஆட்டிட்யூட் பிளாக் மைக்கா, ஸ்பார்க்கிளிங் பிளாக் பியர் கிரிஸ்டல் ஷைன், அவன்ட் கிரேட் ப்ரோன்ஸே மெட்டாலிக் மற்றும் பிளாக்கிஷ் ஏஜ்ஹா கிளாஸ் ஃப்ளேக் ஆகிய நிற தேர்வுகளிலேயே அது கிடைக்க இருக்கின்றது. இதுமட்டுமின்றி, காரின் உட்பகுதிக்கும் சில நிற தேர்வுகளை டொயோட்டா அறிவித்துள்ளது.

பிற முக்கிய விபரங்கள்:

தற்போது விற்பனையில் இருக்கும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்புகள் கொண்டதாக இந்த இன்னோவா ஹைகிராஸ் கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற வாகனமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. அதிக இட வசதியை விரும்புவோர்க்கு ஏற்ற மிக தாராளமான இடம், அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதி, கவர்ச்சிகரமான தோற்றம் என அனைத்திலும் சிறந்த கார் மாடலாக இன்னோவா ஹைகிராஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய வாகனத்திற்கே யாரும் எதிர்பார்த்திராத 18.30 லட்ச ரூபா என்கிற குறைவான விலையை டொயோட்டா நிர்ணயம் செய்திருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota announced all new innova hyCross price
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X