ரொம்ப சந்தோஷம்யா... வாடிக்கையாளர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த டொயோட்டா! எதிர்பாத்தது நடந்துருச்சு!

டொயோட்டா நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிஎன்ஜி (CNG) கார்களுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என்பதும் சிஎன்ஜி கார்களின் முக்கியமான சிறப்பம்சம்.

ரொம்ப சந்தோஷம்யா... வாடிக்கையாளர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த டொயோட்டா! எதிர்பாத்தது நடந்துருச்சு!

இந்த சூழலில் டொயோட்டா நிறுவனம் தற்போது தனது பிரபலமான காரின் புதிய சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அது டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி வெர்ஷன் (Toyota Glanza CNG) ஆகும். மிகவும் பிரபலமாக உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் காரான டொயோட்டா க்ளான்சாவில் சிஎன்ஜி வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார், G மற்றும் S என 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சிஎன்ஜி காரின் ஆரம்ப விலை 8.43 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது S வேரியண்ட்டின் விலையாகும். அதே சமயம் G வேரியண்ட்டின் விலை 9.46 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி காரில், 1.2 லிட்டர் K-சீரிஸ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 76 பிஹெச்பி பவரை உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அராய் அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் ஆகும். டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி காருக்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஒரு சில டீலர்கள் முன்பதிவுகளை ஏற்று வருவதாக கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் செய்தி வெளியிட்டிருந்தது. அத்துடன் டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் விரைவில் விற்பனைக்கு வரலாம் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி டொயோட்டா க்ளான்சா சிஎன்ஜி கார் தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. க்ளான்சா சிஎன்ஜி கார் தவிர, அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் சிஎன்ஜி வெர்ஷனும் (Toyota Urban Cruiser Hyryder CNG) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் டொயோட்டா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

ஆனால் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி காரின் விலைகள் தற்போது அறிவிக்கப்படவில்லை. எனினும் கூடிய விரைவில் விலைகள் அறிவிக்கப்பட்டு, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி கார் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படும். டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது.

அதற்குள்ளாக அதன் சிஎன்ஜி வெர்ஷன் பற்றிய தகவலை டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், மிட் சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் கியா செல்டோஸ் போன்ற கார்களுடன் இது போட்டியிட்டு வருகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota glanza cng price
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X