எக்ஸ்க்ளூசிவ்: டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் வாங்கப் போறீங்களா? - இத படிங்க முதல்ல

ஆஃப்ரோடு சாகசப் பிரியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கின் முக்கிய விபரங்கள் எமக்கு கிடைத்துள்ளன. அறிமுக தேதி, புக்கிங், டெலிவிரி கொடுக்கப்படும் கால அளவு உள்ளிட்ட பல முக்கியத் தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

எக்ஸ்க்ளூசிவ்: டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கை வாங்கப் போறீங்களா?

இந்தியாவில் ஆஃப்ரோடு பயன்பாட்டு வகையில் எஸ்யூவி கார்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இந்த நிலையில், மேலை நாடுகளின் வாழ்க்கை முறை தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் நிலையில், அங்கு பிரபலமான தனிநபர் பயன்பாட்டு வகை பிக்கப் டிரக்குகளுக்கான மவுசு இந்தியர்கள் மத்தியிலும் அதிகரித்து வருகிறது.

எக்ஸ்க்ளூசிவ்: டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கை வாங்கப் போறீங்களா?

அந்த வகையில், இசுஸு நிறுவனத்தின் டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக் இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து, டொயோட்டா நிறுவனம் தனது ஹைலக்ஸ் என்ற பிக்கப் டிரக் வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த தனிநபர் பயன்பாட்டு வகை பிக்கப் டிரக் மாடல் குறித்த பல்வேறு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.

எக்ஸ்க்ளூசிவ்: டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கை வாங்கப் போறீங்களா?

புதிய டொயோட்டா ஹைலக்ஸ் வாகனம் வரும் 20ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த வாகனத்திற்கு டொயோட்டா டீலர்களில் ஏற்கனவே முன்பதிவு துவங்கப்பட்டுவிட்டது.

எக்ஸ்க்ளூசிவ்: டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கை வாங்கப் போறீங்களா?

ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் மார்ச் மாதம் முதல் டெஸ்ட் டிரைவ் மற்றும் டெலிவிரி கொடுக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

எக்ஸ்க்ளூசிவ்: டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கை வாங்கப் போறீங்களா?

தற்போது இந்தியர்கள் அதிகம் விரும்பும் கார் மாடல்களான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய வாகனங்கள் உருவாக்கப்பட்ட அதே கட்டமைப்புக் கொள்கையில்தான், இந்த புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் வாகனமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

எக்ஸ்க்ளூசிவ்: டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கை வாங்கப் போறீங்களா?

புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் வாகனத்திற்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.26 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்தியாவில் பிரபலமாக உள்ள சி வகையிலான எஸ்யூவி கார்களுக்கு இது போட்டியாக அமையும்.

எக்ஸ்க்ளூசிவ்: டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கை வாங்கப் போறீங்களா?

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் ஆகிய கார்களில் வழங்கப்படும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுதான் இந்த புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கிலும் வழங்கப்படும் என தெரிகிறது. அதிகபட்சமாக 204 எச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும்.

எக்ஸ்க்ளூசிவ்: டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கை வாங்கப் போறீங்களா?

இந்த பிக்கப் டிரக்கில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இதில் முக்கிய விஷயமாக இருக்கும். இது நிச்சயம் ஆஃப்ரோடு பிரியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் வகையில் சிறந்த செயல்திறனை வழங்கும் வகையில் இருக்கும் என்று நம்பலாம்.

எக்ஸ்க்ளூசிவ்: டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கை வாங்கப் போறீங்களா?

புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக் எமோஷனல் ரெட், கிரே மெட்டாலிக், ஒயிட் பியர்ல் சிஎஸ், சில்வர் மெட்டாலிக் மற்றும் சூப்பர் ஒயிட் ஆகிய 5 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த வாகனத்திற்கு 3 ஆண்டுகள் அல்லது 1 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டி கொடுக்கப்படும்.

எக்ஸ்க்ளூசிவ்: டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கை வாங்கப் போறீங்களா?

எஸ்யூவி வாகனங்களை போன்று ஆஃப்ரோடு பயன்பாடு, மற்றும் அந்தஸ்தை மேம்படுத்துவதற்கு தனித்துவமான தனிநபர் பயன்பாட்டு வாகனத்தை வாங்க விரும்புவோருக்கு இது நிச்சயம் சிறந்த தேர்வாக அமையும். அருமையான டிசைன், தரமான பாகங்கள், செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
According to our sources, Toyota is planning to launch new Hi Lux pick up truck in India on 20th, Jan 2022.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X