எலெக்ட்ரிக் அவதாரத்தில் வருகிறது டொயோட்டா இன்னோவா! மத்த கார்கள் எல்லாத்தையும் ஒரே வாயில் மென்னு முழுங்க போகுது

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா (Toyota Innova) என்ற பெயர் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இது இந்தியர்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்பிவி (MPV) ரக கார்களில் ஒன்றாகும். இந்தியர்களின் மனதில் டொயோட்டா இன்னோவா காருக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.

சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்கள், தாரளமான இடவசதியுடன் கூடிய சொகுசான கேபின், பயணத்தை இனிமையாக்கும் வசதிகள் மற்றும் டொயோட்டா நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை ஆகியவைதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணங்கள். இந்திய சந்தையில் தற்போது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) கார் விற்பனையில் உள்ளது. இந்த வரிசையில் டொயோட்டா இன்னோவா காரின் புதிய வெர்ஷன் ஒன்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் அவதாரத்தில் வருகிறது டொயோட்டா இன்னோவா! மத்த கார்கள் எல்லாத்தையும் ஒரே வாயில் மென்னு முழுங்க போகுது

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) என்ற பெயரில் இந்த புதிய மாடல் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஹைப்ரிட் (Hybrid) ரகத்தை சேர்ந்த டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலை வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், டொயோட்டா இன்னோவா காரின் ரசிகர்களுக்கு தற்போது மிகவும் மகிழ்ச்சியான மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது.

ஆம், இன்னோவா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் டொயோட்டா நிறுவனம் தற்போது தீவிரம் காட்ட தொடங்கியுள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Car) நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. எனவே இன்னோவா காரை எலெக்ட்ரிக் அவதாரத்தில் (Toyota Innova EV) விற்பனைக்கு அறிமுகம் செய்ய டொயோட்டா நிறுவனம் மிகவும் ஆர்வமாக உள்ளது.

டொயோட்டா இன்னோவா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் தற்போது இந்தோனேஷியா சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் முன் பகுதியில் எலெக்ட்ரிக் கார்களுக்கே உரித்தான வகையில், மூடப்பட்ட க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஹெட்லைட்கள் நீல நிறத்தில் 'ஹைலைட்' செய்து காட்டப்பட்டுள்ளன. தற்போது விற்பனையில் இருந்து வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் அடிப்படையில் இந்த எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்தோனேஷியாவில் சோதனை செய்யப்படும் இன்னோவா எலெக்ட்ரிக் காரின் 'C' பில்லரில் Innova EV என்ற பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. அத்துடன் பக்கவாட்டு பகுதியில் நீல நிற 'க்ராபிக்ஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய அலாய் வீல்களையும் இந்த கார் பெற்றுள்ளது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, இந்த காரை அழகாக காட்டுகின்றன. அத்துடன் இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் வெளிப்புற டிசைனுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வெர்ஷனின் வெளிப்புற டிசைன் வேறு விதமாக இருக்கலாம் என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது.

ஆனால் உட்புறத்தை பொறுத்தவரை, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை போலவேதான், எலெக்ட்ரிக் வெர்ஷனின் உட்புறமும் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே பயணிகளுக்கு தாராளமான இடவசதி கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம். மேலும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 3 ஸ்போக் மல்டி-ஃபங்ஷனல் ஸ்டியரிங் வீல் மற்றும் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆகிய வசதிகளும் (Features) டொயோட்டா இன்னோவா எலெக்ட்ரிக் காரில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நடப்பாண்டு ஏப்ரல் மாதம், இந்தோனேஷியா சர்வதேச மோட்டார் ஷோ திருவிழாவில், இன்னோவா எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை டொயோட்டா நிறுவனம் காட்சிப்படுத்தியது. இந்த கான்செப்ட் வெர்ஷனின் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்க்ரீன், பேட்டரி அளவு, இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் மற்றும் பவர் அவுட்புட் ஆகியவற்றை வெளிக்காட்ட கூடியதாக இருந்தது. இந்த சூழலில் பொது சாலைகளில் டொயோட்டா இன்னோவா எலெக்ட்ரிக் கார் தற்போது தரிசனம் வழங்கியுள்ளது.

எனவே இந்த புதிய மாடல் கூடிய விரைவில் இந்தியா மற்றும் இந்தோனேஷியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் இந்திய வாடிக்கையாளர்களை உற்சாகமடைய செய்துள்ளது. டொயோட்டா இன்னோவா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன், இந்திய சந்தையில் மற்ற எலெக்ட்ரிக் கார்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய சிஎன்ஜி (CNG) வெர்ஷனை டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles

English summary
Toyota innova crysta ev all details we know so far
Story first published: Friday, December 2, 2022, 9:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X