உங்க இன்னோவா பெருசா மைலேஜ் தரலையா? கவலையே வேணாம் கால் டாக்சி நண்பர்களாலும் புதிய இன்னோவாவை வாங்கிக்க முடியும்!

புதிய இன்னோவா ஹைகிராஸ் காரை அதிக லாபத்தை விரும்பும் கால் டாக்சி ஓட்டுநர்களுக்கும் விற்பனைக்கு டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டிருப்பதா தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க. குறிப்பாக, எந்த வேரியண்டை கால் டாக்சி பிரிவிற்காக நிறுவனம் ஒதுக்கியுள்ளது?, அதில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கின்றன என்பது பற்றிய அனைத்து விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டா நிறுவனம் அதன் புதிய இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி ரக காரை வெகு விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. 2023 ஜனவரியில் இந்த கார் அதிகாரப்பூர்வமாக வருகையை புரிய இருக்கின்றது. இந்த கார் பிரைவேட் பயன்பாட்டாளர்களை மையமாகக் கொண்டே இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே மிக அதிக பிரீமியம் அம்சங்கள் தாங்கிய வாகமானக இதனை டொயோட்டா உருவாக்கியிருக்கின்றது.

ஹைகிராஸ்

Source: cardekho

அதேநேரத்தில், கால் டாக்சி துறையைச் சேர்ந்தவர்களாலும் இந்த காரை பயன்படுத்திக் கொள்ள முடியும் என தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் காரை ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஜி, ஜிஎக்ஸ், விஎக்ஸ், இசட்எக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் (ஓ) ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். இதில் ஜி என்பது ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும்.

இந்த வேரியண்டையே டொயோட்டா நிறுவனம் கால் டாக்சி துறைக்காக ஒதுக்க இருக்கிறதாம். இது ஓர் ஆரம்ப நிலை வேரியண்டாக இருந்தாலும், அதில், நல்ல அளவில் பிரீமியம் மற்றும் சிறப்பம்சங்களைக் டொயோட்டா வழங்கியிருக்கின்றது. அந்தவகையில், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லைட்டுகள் (ரெஃப்ளெக்டருடன் வழங்கப்பட்டிருக்கும்), புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப் அம்சம், பவர்டு ஓஆர்விஎம்கள் மற்றும் அட்ஜஸ்டபிள் ரியர் ஹெட்ரெஸ்ட் உள்ளிட்ட எக்கசக்க பிரீமியம் அம்சங்களை இன்னோவா ஹைகிராஸ் ஜி வேரியண்டில் டொயோட்டா வழங்கியிருக்கின்றது.

இதுமட்டுமின்றி இந்த ஜி வேரியண்டை ஏழு மற்றும் எட்டு ஆகிய இரு விதமான இருக்கைகள் தேர்விலும் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இந்த இன்னோவா ஹைகிராஸ் ஜி வேரியண்ட் சிறப்பம்சங்களில் மட்டுமில்லைங்க பாதுகாப்பு விஷயத்திலும் மிக சிறப்பானதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், முன் பக்க பயணிகளுக்காக டூயல் ஏர் பேக்குகள், வெயிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கைகள் மற்றும் ஆங்கர்கள் வழங்கப்பட்டிருக்கும்.

மோட்டாரை பொருத்தவரை இந்த வேரியண்டில் 2.0 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரே இடம் பெற இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 174 பிஎஸ் பவரையும் 205 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. சிவிடி கியர்பாக்ஸ் தேர்வே இந்த மோட்டாருடன் வழங்கப்பட இருக்கின்றது. அதேவேலையில் இதன் டாப் ஸ்பெக் மாடலான ஸ்ட்ராங் ஹைபிரிட் வெர்ஷனில் இ-சிவிடி எனும் கியர்பாக்ஸ் தேர்வே இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட இன்னோவா 26க்கும் அதிகமான கிமீ வரை மைலேஜ் தரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூப்பரான அம்சங்கள் கொண்ட காராகவே இந்திய சந்தையை டொயோட்டா இன்னோவா ஹைகிாரஸ் வந்தடைய இருக்கின்றது. இதன் விலை இப்போது அறிக்கப்படவில்லை. வெகு விரைவில் அறிமுகத்தை முன்னிட்டு இதன் விலை பற்றிய விபரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுமார் 20 லட்சம் ரூபாய் தொடங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இது விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய கார் விற்பனைக்கு வந்தாலும், இதன் வருகை தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவா கிரிஸ்டாவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆமாங்க, வெகு விரைவில் இன்னோவா கிரிஸ்டாவும் புதிய அப்டேட்டுகளுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு ஆப்ஷன்களிலும் இது கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது. புதிய இன்னோவா ஹைகிராஸ் காரை டொயோட்டா நிறுவனம் வழக்கமான இன்னோவிடம் இருந்து பலமடங்கு மாறுபட்ட ஸ்டைலில் உருவாக்கியிருக்கின்றது.

இதற்காக புதிய க்ரில், குரோம் அக்செண்டுகள், பிளாக் இன்செர்டுகள், புதிய பம்பர், அகலமான ஏர் இன்லெட், ஃபாக்ஸ், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டே டைம் லைட், எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லைட் ஆகியவற்றை இன்னோவா ஹைகிராஸ் காரில் பயன்படுத்தியிருக்கின்றது. இது தவிர, பனோரமிக் சன்ரூஃப், அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் போன்ற நவீன கால வசதிகளும் புதிய இன்னோவா ஹைகிராஸில் இடம் பெற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய க்ரில், குரோம் அக்செண்டுகள், பிளாக் இன்செர்டுகள், புதிய பம்பர் உள்ளிட்டவற்றால் இந்த கார் எம்பிவி தோற்றத்தை இழந்து எஸ்யூவி தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. இந்த காரின் முரட்டுத் தனமான தோற்றத்திற்கும் இவையே காரணமாக இருக்கின்றன. இதன் அளவும் வழக்கமான இன்னோவாவைக் காட்டிலும் சற்று அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் இன்னோவா ஹைகிராஸின் எஸ்யூவி தோற்றத்திற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களே இந்தியர்களின் எதிர்பார்ப்பை இந்த கார் கவர காரணமாக இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota innova hycross cab aggregator
Story first published: Monday, December 5, 2022, 13:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X