டொயோட்டா இன்னோவா காரின் புது மாடலில் இந்த வசதிலாம் இருக்கா! எத்தனை பேர் லைன்ல நிக்க போறாங்களோ!

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் சன்ரூஃப் வசதி இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சூழலில், இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) என்ற பெயரில் புதிய மாடல் ஒன்றை டொயோட்டா விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

டொயோட்டா இன்னோவா காரின் புது மாடலில் இந்த வசதிலாம் இருக்கா! எத்தனை பேர் லைன்ல நிக்க போறாங்களோ!

இது ஹைப்ரிட் (Hybrid) கார் ஆகும். இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் என்ற பெயரில் இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது. அதே சமயம் இந்தோனேஷியா சந்தையில் டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் (Toyota Innova Zenix) என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தோனேஷியா சந்தையில் வரும் நவம்பர் 21ம் தேதி டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த புதிய மாடலின் டீசர்களை டொயோட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது புதிய டீசர் ஒன்றை டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த டீசர் புகைப்படத்தின் மூலம் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் சன்ரூஃப் வசதி இடம்பெற்றிருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இதுதவிர ஆம்பியண்ட் லைட்டிங், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையிலான சீட் பெல்ட்கள், இரண்டாவது வரிசை பயணிகளுக்காக முன் பக்க இருக்கையின் பின் பகுதியில் திரைகள் ஆகிய வசதிகளும் இந்த புதிய மாடலில் இடம்பெறவுள்ளன.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், சன்ரூஃப் வசதி வழங்கப்படலாம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. ஏனெனில் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் சன்ரூஃப் வசதியை காண முடிந்தது. தற்போது இந்த வசதி இடம்பெறுவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை மிஸ் பண்ணீடாதீங்க: ஒரு நாள் ஓட்ட 3 ரூபாய் மட்டுமே செலவாகும்! பெட்ரோல் வண்டிகளின் கதையை முடிக்க வந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!இதை மிஸ் பண்ணீடாதீங்க: ஒரு நாள் ஓட்ட 3 ரூபாய் மட்டுமே செலவாகும்! பெட்ரோல் வண்டிகளின் கதையை முடிக்க வந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த புதிய மாடல், இந்தோனேஷியாவில் வரும் நவம்பர் 21ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், இந்தியாவில் வரும் நவம்பர் 25ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இதை தொடர்ந்து 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில், ஹைப்ரிட் மோட்டாருடன் கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை பற்றிய பல்வேறு கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகலாம்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota innova hycross features
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X