வேற எந்த டொயோட்டா கார்லயும் இது இல்ல! இன்னோவா காரின் புது மாடலில் இப்படி ஒரு வசதியா! எகிறும் எதிர்பார்ப்பு!

இந்தியாவில் டொயோட்டாவின் வேறு எந்த காரிலும் இல்லாத ஒரு வசதி, இன்னோவாவின் புதிய மாடலில் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்களின் மனதில் ஒரு சில கார்களுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அப்படிப்பட்ட கார்களில் ஒன்றுதான் டொயோட்டா இன்னோவா (Toyota Innova). இந்திய வாடிக்கையாளர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான காராக டொயோட்டா இன்னோவா உள்ளது.

வேற எந்த டொயோட்டா கார்லயும் இது இல்ல! இன்னோவா காரின் புது மாடலில் இப்படி ஒரு வசதியா! எகிறும் எதிர்பார்ப்பு!

இந்த சூழலில் டொயோட்டா நிறுவனம் வெகு விரைவில் இன்னோவா காரை ஹைப்ரிட் (Hybrid) அவதாரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova HyCross) என்ற பெயரில் இந்த கார் விற்பனை செய்யப்படும். வரும் நவம்பர் 25ம் தேதி (November 25) இந்த கார் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட உடனேயே இன்னோவா ஹைக்ராஸ் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை டொயோட்டா நிறுவனம் தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் இந்த கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் விலைகள் அறிவிக்கப்படும். எனவே இந்த காரின் விலைகள் எவ்வளவு? என்பது வரும் ஜனவரி மாதம்தான் நமக்கு தெரியவரும். அதற்கு முன்னதாக டொயோட்டா நிறுவனம் புதிய இன்னோவா ஹைக்ராஸ் காரின் டீசர்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது ஒரு டீசர் புகைப்படத்தை டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை டொயோட்டா நிறுவனம் அதிகரிக்க செய்துள்ளது. தற்போது விற்பனையில் இருந்து வரும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Innova Crysta) காருடன் ஒப்பிடும்போது, புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் உருவத்தில் பெரியதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் பெரிய பனரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்னோவா காரில் பனரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. அதேபோல் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance System) வசதியும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் இதற்கு முன்னதாக இன்னோவா காரில் அடாஸ் வசதி வழங்கப்பட்டதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் இதுவரை டொயோட்டா நிறுவனத்தின் எந்த ஒரு காரிலும் அடாஸ் வசதி வழங்கப்பட்டதில்லை. எனவே இந்தியாவில் அடாஸ் வசதியுடன் வரும் டொயோட்டா நிறுவனத்தின் முதல் காராக இன்னோவா ஹைக்ராஸ் இருக்கலாம்.

அடாஸ் வசதி இருப்பதால், பாதுகாப்பு அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்லும். இதுதவிர 360 டிகிரி கேமரா, 7 ஏர்பேக்குகள், பல்வேறு டிரைவிங் மோடுகள் மற்றும் டிராக்ஸன் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் இன்ஜின் விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

எனினும் எலெக்ட்ரிக் மோட்டாருடன் கூடிய 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஹைப்ரிட் இன்ஜின் சிறப்பான மைலேஜை வழங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை பற்றிய அனைத்து தகவல்களும் வரும் நவம்பர் 25ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும்.

ஆனால் விலைகள் மட்டும் அன்றைய தினம் அறிவிக்கப்படாது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலைகள் வெளியிடப்படும். தற்போது விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருடன் ஒப்பிடும்போது, புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலைகள் சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota innova hycross india new teaser
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X