ரோட்ல போற கப்பல் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அது இந்த கார் தான்... இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா?

டொயோட்டா நிறுவனம் இன்று தனது இன்னோவா காரின் அடுத்த அப்டேட்டாக இன்னோவா ஹைகிராஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. பலரும் நீண்டநாட்களாக எதிர்பார்த்த இந்த கார் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த காருக்கான வரவேற்பு சிறப்பாக இருந்து வரும் நிலையில் இந்த காரின் வேரியன்ட்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை பொருத்தவரை மொத்தம் 2 விதமான ப்யூயல் டைப்களில் வெளியாகிறது. பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. அதில் பெட்ரோலில் 2 வேரியன்ட்களும் (G-SLF, GX), ஹைபிரிட்டில் 3 வேரியன்ட்களும் (VX,ZX,ZX(O)) உள்ளன. இதில் பெட்ரோல் வேரியன்ட்களில் 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷனும், ஹைபிரிட்டில், ஹைபிரிட் வேரியன்ட்களில் VX வேரியன்டில் மட்டும் 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷனும், ZX மற்றும் ZX(O) ஆகிய வேரியன்ட்களில் 7 சீட்டர் ஆப்ஷன் மட்டுமே உள்ளன.

ரோட்ல போற கப்பல் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அது இந்த கார் தான்... இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா?

இந்த காரின் டைமெண்ஷனை பொருத்தவரை நீளம் 475.5 செ. மீ, அகலம் 184.5 செ. மீ, உயரம் 178.5 செ. மீ வீல் பேஸ் 285 செமீ அளவுகளைக் கொண்டது. இதில் ஹைபிரிட் வேரியன்ட் கார்கள் மட்டும் உயரம் 1 செ.மீ வரை அதிகம் கொண்டதாக இருக்கும். அகலமும் 0.5 செ.மீ அதிகமாக இருக்கிறது. அத்தனை வேரியன்டிலும் 52 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

இன்ஜினை பொருத்தவரை பெட்ரோ வேரியன்டில் டிஎன்ஜிஏ, 4-சிலிண்டர், இன்-லைன் 16 வால்வு,DOHC,VVTi இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஹைபிரிட் வெர்ஷனில் டிஎன்ஜிஏ 5ம் தலைமுறை 4-சிலிண்டர், இன்-லைன் 16 வால்வு,DOHC,VVTi இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 1987 சிசி திறன் கொண்டது. பெட்ரோல் வேரியன்ட் இன்ஜின்171.6 எச்பி பவரையும் 205 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஹைபிரிட் வேரியன்ட் இன்ஜின் 183.7 எச்பி பவரையும் 188 என்எம் டார்க் திறனையும் மேம்படுத்தும். ஹைபிரிட் இன்ஜினின் மோட்டார் டார்க் 207 என்எம் பவராகும்.

இந்த பெட்ரோல் வேரியன்ட் இன்ஜின் சீக்வொன்ஷியல் ஸ்விஃப்ட் உடன் கூடிய டேரக்ட் ஸ்விஃப்ட் சிவிடி கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. ஹைபிரிட் வேரியன்டை பொருத்தவரை சிக்வொன்ஷியல் ஸ்விஃப்ட் உடன் கூடிய இ-டிரைவ் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் வில்களை பொருத்தவரை பெட்ரோல் வேரியன்டில் 40.64 செ. மீ அளவிலும், ஹைபிரிட் வேரியன்டில் அதிகபட்சமாக 45.72 செ. மீ அளவிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இன்னோவா ஹைகிராஸ் காரில் வெளிப்புற விஷயங்களைப் பொருத்தவரை பெட்ரோல் வேரியன்டில் பானரோமிக் சன்ஃரூப் வசதி இல்லை. ஆனால் ஹைபிரிட் வேரியன்ட்களான ZX,ZX(O) ஆகிய வேரியன்ட்களில் பானரோமிக் சன் ரூப் பொருத்தப்பட்டுள்ளது. ஹைலைட்களை பொருத்தவரை பெட்ரோல் வேரியன்ட்களில் டூயல் எல்இடி ஹெட்லைட்களும், ஹைபிரிட்டில் ட்ரை-ஐ எல்இடி ஹெட்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்க லைட்டை பொருத்தவரை பெட்ரோல் வேரியன்டில் எல்இடி மற்றும் ரிஃப்லெக்டர் ஹைட்லைட்டும், ஹைபிரிட் வேரியன்டில் முழு எல்இடி ஹைட்லைட்டும் பொருத்தப்படும்.

இந்த காரின் ஏசி வசதியைப் பொருத்தவரை பெட்ரோல் வேரியன்டில் மேனுவல் ப்ளோயர் கண்ட்ரோல் ஏசியும், ஹைபிரிட் வேரியன்டில் ஆட்டோமெட்டிக் ஏசியும் பொருத்தப்பட்டுள்ளது. ஹைபிரிட்டில் ZX,ZX(O) ஆகிய வேரியன்டில் மட்டும் பவர் டிரைவர் சீட் வசதி மற்றும் ஜேபிஎல் பிரிமியம் ஆடியோ சிஸ்டம் ஆகிய வசதிகள் இருக்கிறது. இதே போல பெடல் ஸ்விஃப்டர் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய வசதிகள் ஹைபிரிட் கார்களில் மட்டும் இருக்கிறது.

இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை டைனமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் ட்ரேஸ் அசிஸ்ட், ரியர் கிராஸ் டிராஃபிக் அலார்ட், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், ப்ரீ கோலிஷன் சிஸ்டம், ஆட்டோ ஹை பீம் ஆகியவை அடங்கிய டொயோட்டா சேஃப்டி சென்ஸ் சிஸ்டம் ஹைபிரிடில் ZX(O) வேரியன்டில் மட்டும் இருக்கிறது. ஏர்பேக் வசதியைப் பொருத்தவரை ZX,ZX(O) ஆகிய வேரியன்ட்களில் 6 ஏர்பேக்களும், மற்ற வேரியன்ட்களில் 2 ஏர்பேக்களும் உள்ளன.

இது போக அனைத்து வேரியன்ட்களிலும் வெஹிகில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் சிஸ்டம் இருக்கிறது. காரின் உட்புறத்தைப் பொருத்தவரை பெட்ரோல் வேரியன்டில் 10.7செ. மீ டிஸ்பிளேயும், ஹைபிரிட் வேரியன்டில் 17.8 செ. மீ டிஸ்பிளேயும்இருக்கிறது. பெட்ரோல் வேரியன்டில் ஸ்பிடோமீட்டர் அலாக்கிலும், ஹைபிரிட் வேரியன்டில் டிஜிட்டல் மற்றும் அனலாக் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. ஹைபிரிட் கார்களில் மட்டும் சாஃப்ட் டச் டேஷ்போர்டு உள்ளது.

இந்த காரின் நிறங்களைப் பொருத்தவரை பிளாக்கிஷ் அகேஹா கிளாஸ் ஃப்ளேக், பிளாட்டினம் ஒயிட் பியர்ல், ஸ்பார்க்கிலிங் பிளாக் பியர்ல் கிரிஸ்டல் ஷைன், சில்வர் மெட்டாலிக், அவென்-கார்டே பிரான்ஸ் மெட்டாலிக், ஆட்டிடியூட் பிளாக் மைக்கா, சூப்பர் ஒயிட் ஆகிய 7 நிறங்களில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்கள் இது தான். இதில் நீங்கள் எந்த வேரியன்ட் காரை வாங்குவீர்கள்?

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Innova Hycross Variants details explained
Story first published: Friday, November 25, 2022, 17:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X