அரசியல்வாதிங்க அள்ளிட்டு போயிடுவாங்க! டொயோட்டா கிராண்ட் ஹைலேண்டர் கார் வரப்போகுது! எங்கனு தெரியுமா?

டொயோட்டா நிறுவனத்தின் ஃபாச்சூனர் காரை போலவே அமெரிக்காவில் அந்நிறுவனம் ஃபார்ச்சூனர் காரை விட அதிக வசதி கொண்ட காரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. கிராண்ட் ஹைலேண்டர் என்ற பெயரில் இந்த கார் வெளியாகவுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம்.

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் ஃபார்ச்சூனர் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் எனப் பலர் இந்த காரை வைத்திருக்கின்றனர். இந்த கார் ஒரு தனி மனிதனிற்கான சமூக அந்தஸ்தையும் பெற்றுத் தருகிறது. இதனால் இந்த காரின் விற்பனை நீண்ட நாட்களாக நல்ல விற்பனையிலிருந்து வருகிறது. இந்த கார் ஒரு முழு சைஸ் எஸ்யூவி காராக இருக்கிறது.

அரசியல்வாதிங்க அள்ளிட்டு போயிடுவாங்க! டொயோட்டா கிராண்ட் ஹைலேண்டர் கார் வரப்போகுது! எங்கனு தெரியுமா?

டொயோட்டா நிறுவனம் கடந்த 2001ம் ஆண்டு முதல் ஹைலேண்டர் என்ற எஸ்யூவி காரை அமெரிக்காவில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் அடுத்த வெர்ஷனாக கிராண்ட் ஹைலேண்டர் என்ற காரை தயாரித்துள்ளது. இந்த காரை அந்நிறுவனம் வரும் பிப்ரவரி மாதம் சிகாகோவில் நடக்கவுள்ள மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கிராண்ட் ஹைலேண்டர் கார் 3 வரிசை சீட்டர் கொண்ட ஒரு முழு சைஸ் எஸ்யூவி காராகும்.

இந்த காரை டொயோட்டா நிறுவனம் அதிகமான சொகுசு வசதி, நல்ல இட வசதி, மற்றும் பவர்ஃபுல் காராக கட்டமைத்துள்ளது. இந்த மூன்றுமே ஹைலேண்டர் காரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது அதையே இந்த காரிலும் குறையாத படி வடிவமைத்துள்ளனர். இந்த கார் ஹைலேண்டர் காரை விட உயர்வான விலையிலும், பெரிய செக்யோயுயா காரை விட குறைவான விலையிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் இன்ஜினினை பொருத்தவரை 2.4 லிட்டர் டர்போ சார்ஜ்டு 4 சிலிண்டர் ஹைபிரிட்டில் 2 எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் இணைக்கப்பட்ட இன்ஜினாக இடம் பெறுகிறது. இந்த இன்ஜின் 340 பிஎச்பி பவரை வெளியிடும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த காரின் டீசர் புகைப்படத்தை டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் வரும் 2023 பிப்ரவரி 8ம் தேதி இந்த காரை அறிமுகப்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது. இந்த டீசரில் காரின் பின்பக்கத்தை மட்டும் புகைப்படமாக வெளியிட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது ஹைலேண்டர் காரை விட இதில் அதிக ஸ்டோரேஜ் இடம் இருக்கிறது. இந்த கார் தற்போது அமெரிக்காவிற்கு மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

இந்த கார் இந்தியாவிற்கு வருவது குறித்து அந்நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் காரின் வடிவமைப்பைப் பார்த்தால் இந்தியாவில் அரசியல்வாதிகள், நடிகர்கள், பணக்காரர்கள் எனப் பலர் இந்த ரக காரை விரும்பி வாங்குவார்கள் எனத் தெரிகிறது. ஆனால் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் தனது ஹைகிராஸ் காரை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக இறங்கியுள்ளது.

டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா ஹைகிராஸ் கார் குறித்த தகவல்களை வெளியிட்டுவிட்டாலும் அதன்விலை விபரங்களை வெளியிடவில்லை. இந்த தகவல்கள் எல்லாம் ஜனவரி மாதம்தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் தான் இந்த காருக்கான விற்பனை துவங்கும். தற்போது வெறும் புக்கிங் மட்டுமே நடந்து வருகிறது.

இந்த காரின் முக்கிய அம்சமாக டொயோட்டா சேஃப்டி சென்ஸ் சூட் ஏடிஏஎஸ் தொழிற்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் நேச்சுரல் அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின், ஸ்டிராங்க் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் என 2 ஆப்ஷன்களில் வருகிறது. நேச்சரலி அஸ்பயர்டு இன்ஜின் 172 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் இன்ஜின் ஆகவும், ஸ்டிராங் ஹைபிரிட் இன்ஜின் 186பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் இன்ஜினாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் G, GX, VX, ZX மற்றும் ZX (O) ஆகிய வேரியன்ட்களில் 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota plans to launch grand Highlander SUV in Feb 2023
Story first published: Tuesday, December 13, 2022, 13:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X