இந்தியா வர தயாராகும் 2022 டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் கார்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக 2022 காம்ரி ஹைப்ரீட் காரின் டீசர் வீடியோவினை டொயோட்டா வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவினை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியா வர தயாராகும் 2022 டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் கார்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

கடந்த 2019 ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்டு தற்சமயம் டொயோட்டா ஹைப்ரீட் காராக காம்ரி விளங்குகிறது. ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்ற காம்ரி ஹைப்ரீட் காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.41.20 லட்சமாக உள்ளது.

இந்தியா வர தயாராகும் 2022 டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் கார்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்சனை அறிமுகப்படுத்த இந்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது, "கண்ணிமைக்கும் நேரத்தில் 0-வில் இருந்து மூச்சு-விடுவது போன்றதான உணர்வு" என்கிற கருத்துடன் வெளியிடப்பட்டுள்ள 2022 காம்ரி ஹைப்ரீட் காரின் டீசர் வீடியோவினை கீழே காணலாம்.

இந்த வீடியோவில் அப்டேட் செய்யப்பட்ட காம்ரி காரினை எந்தவொரு மறைப்புமின்றி காணலாம். அப்டேட் செய்யப்பட்ட டொயோட்டா காம்ரி உலகளவில் கடந்த 2020 நவம்பர் மாதத்தில் வெளியீடு செய்யப்பட்டது. இந்த காரில் மிக முக்கிய அப்டேட்கள் அனைத்தும் வெளிப்பக்கத்தில் தான் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அப்டேட்டான க்ரில் மற்றும் பம்பர் பகுதியுடன் காம்ரி ஹைப்ரீட்டின் முன்பக்கம் ரீஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா வர தயாராகும் 2022 டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் கார்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

கிடைமட்டமான க்ரில்லின் கீழ்பகுதி காருக்கு அகலமான நிலைப்பாட்டை வழங்குகிறது. புதிய காம்ரி ஹைப்ரீட் காரில் பிற முக்கிய அம்சமாக 17 மற்றும் 18 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன. மேலுள்ள டீசர் வீடியோவில் டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் கார் முற்றிலும் புதிய அடர் மெட்டல் க்ரே நிறத்தில் காட்சியளிக்கிறது.

இந்தியா வர தயாராகும் 2022 டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் கார்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்களில் கூட சிறிய அப்டேட்களை காணப்படுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தையும் இந்திய காம்ரி ஹைப்ரீட் காரிலும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு வெளிப்புறம் கவனிக்கத்தக்க அப்டேட்களுடன் மெருக்கேற்றப்பட்டிருக்க, 2022 காம்ரியின் உட்புறத்திலும் சில அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய காம்ரியில் உட்புற இருக்கைகள் கருப்பு & பழுப்பு என இரு விதமான நிறத்தேர்வுகளில் வழங்கப்படுகின்றன.

இந்தியா வர தயாராகும் 2022 டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் கார்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

அதுவே, உட்புறத்தில் டேஸ்போர்டு பொறியியல் மரக்கட்டையில், டைட்டானியம் லைன் பேட்டர்னில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் காம்ரியில் பயணிகள் பாதுகாப்பு அம்சங்களையும் டொயோட்டா மேம்படுத்தியுள்ளது. இதன்படி, காம்ரியின் மோதல் எச்சரிக்கை அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலமாக சில தொழிற்நுட்ப வசதிகளை பெறலாம்.

இந்தியா வர தயாராகும் 2022 டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் கார்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

இதில், பகல்நேரத்தில் எதிர்வரும் வாகனத்தை அடையாளம் காணுதல், அவசரகால ஸ்டேரிங் உதவி, யு-டர்ன் வளைவு உதவி, ஒரே பாதையை தொடர அப்டேட் செய்யப்பட்ட உதவி, நுட்பமான அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்குகின்றன. மற்றப்படி காரின் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

இந்தியா வர தயாராகும் 2022 டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் கார்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

இதனால் புதிய டொயோட்டா ஹைப்ரீட் காரிலும் வழக்கமான 2.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினே பொருத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்படுகின்ற இந்த பெட்ரோல் என்ஜின் அமைப்பின் மூலம் அதிகப்பட்சமாக 215 பிஎச்பி-ஐ பெறலாம். பெட்ரோல் என்ஜின் மட்டும் தனியாக 178 பிஎச்பி மற்றும் 221 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இந்தியா வர தயாராகும் 2022 டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் கார்!! புதிய டீசர் வீடியோ வெளியீடு!

அதேபோல் எலக்ட்ரிக் மோட்டார் மட்டும் தனியாக 120 பிஎச்பி மற்றும் 202 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த பெட்ரோல்-ஹைப்ரீட் பவர்ட்ரெயின் உடன் சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனையில் இருப்பது 8ஆம் தலைமுறை டொயோட்டா காம்ரி ஆகும். இதன் ஆயுட்காலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் 2022 காம்ரி ஹைப்ரீட் கார் கொண்டுவரப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2022 Toyota Camry Hybrid Teased In India; Launch Soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X