இன்னோவால எலெக்ட்ரிக் காரா? என்னங்க சொல்றீங்க? எப்ப வரப்போகுது தெரியுமா?

டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரைஸ்டா காரில் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கி இந்தோனேஷிய சாலைகளில் டெஸ்ட் செய்து வருகிறது. விரைவில் இந்த கார் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகியுளு்ளது. இந்த காரில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கிறது? என்பது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்ல இந்தோனேஷியாவிலும் சிறப்பான விற்பனையை செய்து வருகிறது. இந்தேனேஷியா மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டேஸ்ட் இருப்பதால் இந்தோனேஷியாவில் ஒரு காரை அந்நிறுவனம் வெளியிட்டால் அதை விரைவில் இந்தியாவிற்குள் அறிமுகப்படுத்திவிடும். இப்படி தான் இந்தோனேஷியாவில் வெளியான இன்னோவா கைஜிங் ஜினிக்ஸ் காரை இந்தியாவில் இன்னோவா ஹைகிராஸ் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.

இன்னோவால எலெக்ட்ரிக் காரா? என்னங்க சொல்றீங்க? எப்ப வரப்போகுது தெரியுமா?

டொயோட்டா நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக ஹைபிரிட் கார்கள் பிரிவில் கவனம் செலுத்தி வருகிறது.தொடர்ந்து பல ஹைபிரிட் கார்களை வெளியிட்டு வந்தாலும், மற்றொரு பக்கத்தில் டொயோட்டா நிறும் முழுமையாக எலெக்ட்ரிக்கில் இயங்கும் கார் மற்றும் பிளக்இன் ஹைபிரிட் கார்களின் ஆய்வுக்காக பெரும் முதலீட்டையும் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது முழுமையாக எலெக்ட்ரிக்கில் இயங்கும் இன்னோவா காரை தயாரித்துளு்ளது.

இந்த காரின் புரோட்டோ டைப்பை இந்தாண்டு துவக்கத்தில் இந்தோனேஷியாவில் நடந்த சர்வதேச மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. அப்பொழுது முதல் இந்த காரின் மீது மக்களின் பார்வைபட்டுவிட்டது. முக்கியமாக இந்தியா உட்பட தெற்காசியா முழுவதும் இன்னோவா கார் பிரபலமாக இருப்பதால் அதில் எலெக்ட்ரிக் வெர்ஷன் காரை வாங்க மக்கள் பலர் ஆர்வமாக காத்திருந்தனர்.

இந்நிலையில் தான் இந்தோனேஷிய சாலைகளில் இன்னோவா எலெக்ட்ரிக் கார் டெஸ்டிங்கில் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதை இந்தோனேஷிய டொயோட்டா நிறுவனத்தின் துணை தலைவர் ஹென்றியும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கார் டெஸ்ட் செய்யப்படுகிறது. இதன் அறிமுகம் குறித்து முடிவாகவில்லை என்று கூறியுள்ளார். இன்னோவா காரை பொருத்தவரை ஐஎம்வி2 லேடர் ஆன் ஃபிரேம் ஆர்க்கிடெக்ஷரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள எலெக்ட்ரிக் காரும் இதே பிளாட்பார்மில் உருவான பெட்ரோல்/ டீசல் வேரியன்ட் காரை மட்டும் அப்படியே எலெக்ட்ரிக் காராக மாற்றி வெளியிட்டுள்ளனர். இந்த பிளாட்பார்மில் செய்யப்பட்ட வாகனங்களி பேட்டரி மற்றும் மோட்டாருக்கு போதுமான இடம் இருக்கிறது. இதனால் இதை எளிதாக அப்படியே எலெக்ட்ரிக் காராக மாற்றிவிட்டனர். இனி இதே பிளாட்ஃபார்மில் உள்ள மற்ற வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றப்படும் என தெரிகிறது.

விரைவில் இன்னோவா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் தயாரிக்கப்படாலம் என எதிர்பார்க்கப்பட்டாலும் இது விற்பனைக்கு வர சற்று காலம் பிடிக்கும் என்றே தெரிகிறது. தற்போது தான் டொயோட்டா தனது எம்பிவி காரில் ஹைபிரிட்வெர்ஷனை களம் இறக்கியுள்ளது. இப்பொழுது எலெக்ட்ரிக் காரை களம் இறக்கினால் ஹைபிரிட் கார்களின் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்படும்.இதனால் 2023ம் ஆண்டிற்கு பிறகு வேண்டுமானால் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டோ நிறுவனம் இன்னோவா காரை மட்டுமல்ல தொடர்ந்து தனது பல கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில் டொயோட்டாவிடமிருந்து பல எலெக்ட்ரிக் கார்களை எதிர்பார்க்கலாம். இருந்தாலும் டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் எல்லாம் ஹைபிரிட்டை விட்டு விட்டு நேரடியாக எலெக்ட்ரிக் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த வருகின்றனர். டொயோட்டா வருவதற்குள் இந்த இரு நிறுவனங்களும் விற்பனையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துக்கொள்வர் என்பது மட்டுமே உண்மை.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota testing innova ev in indonasia
Story first published: Wednesday, November 30, 2022, 18:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X