26 கி.மீ மைலேஜ் கொடுக்கும் செம கார் வரப்போகுது! இதுக்காக தானே காத்துக்கிட்டிருந்தோம்!

டொயோட்டா நிறுவனம் தனது அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி காரை அறிமுகப்படுத்தப்போவதாக திட்டமிட்டுள்ளது.இந்த கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26 கி.மீ மைலேஜை வழங்குகிறது. ஸ்டிராங்க் ஹைபிரிட் காரை விட குறைந்த விலையில் இந்த அதிக மைலேஜ் கொண்ட கார் இது.

டொயோட்டா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த கார் மார்கெட்டில் நேரடியாக ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, எம்ஜி அஸ்டர், டாடா ஹாரியர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், நிஸான் கிக்ஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது. இந்த செக்மெண்டில் ஸ்டிராங்க் ஹைபிரிட் இன்ஜின் கொண்ட 2 எஸ்யூவிகளிகல் இதுவும் ஒன்று.

26 கி.மீ மைலேஜ் கொடுக்கும் செம கார் வரப்போகுது! இதுக்காக தானே காத்துக்கிட்டிருந்தோம்!

டொயோட்டாவின் இந்த அர்பன் க்ருஸர் ஹைரைடர் காரை பல அட்வாட்டேஜ்கள் இருக்கிறது. இந்த காரை போலவே உள்ள கிராண்ட் விட்டாராக காரை ஒப்பிடும் போது ஸ்டிராங்க் ஹைபிரிட் வேரியன்ட்டில் இந்த காரில் இவி மோட் இருக்கிறது. மேலும் இது ஒரு லிட்டருக்கு 28 கீ.மீ வரை பயணிக்கும் மைலேஜ் கொண்டது. இந்த காரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் கே15சி மைல்டு-ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 103 பிஎஸ் பவரையும், 136 என்எம் டார்க் திறனையும் வெளியப்படுத்துகிறது.

இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் ஹைரைடர் காரின் சிஎன்ஜி வேரியன்டை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த வேரியன்ட் இந்த மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்கான புக்கிங் துவங்கியுள்ளது. இந்த ஹைரைடர் சிஎன்ஜின கார் டொயோட்டாவின் இரண்டாவது சிஎன்ஜி காராகும். ஏற்கனவே கிளான்ஸா என்ற பிரிமியம் ஹெட்ச் பேக் சின்ஜி காரை வெளியிட்டிருந்தது.

அபர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை தேர்வு செய்பவர்களுக்கு நல்ல மைலேஜ் தரும் காரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் தற்போது ஸ்டிராங்க் ஹைபிரிட் வேரியன்ட் தான் ஒரே தேர்வாக இருக்கிறது. ஆனால் அதன் விலை சற்று அதிகம். ஆனால் இனி குறைந்த விலையில் நல்ல மைலேஜ் தரும் அர்பன் க்ரூஸர் காரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் சிஎன்ஜி வேரியன்ட் காரை தேர்வு செய்யலாம். இந்த காரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் கே15சி மைல்டு -ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 88பிஎச்பி பவரையும் 98.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இதே திறன் கொண்ட இன்ஜின் தான் எர்டிகா மற்றம் எக்ஸ்எல்6 சிஎன்ஜின கார்கள் இருக்கிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை மைல்டு ஹைபிரிட் இன்ஜின் காரின் விலையை விட ரூ75 ஆயிரம் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைல்டு ஹைபிரிட் இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.10 கி.மீ மைலேஜை வாரி வழங்குகிறது.

அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி வேரியன்டிற்கு பிறகு டொயோட்டா நிறுவனம் காம்பேக்ட் கிராஸ் ஓவர் காரை களம் இறக்கவுள்ளது. இது மார்கெட்டில் மாருதி சுஸூகியின் ஒய்டிபி காருக்கு போட்டியாக களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் டொயோட்டா தனது இன்னோவா ஹைகிராஸ் காரின் டெலிவரியை இந்த மாத மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் அடுத்த தலைமுறை ஃபார்ச்சூனர் கார் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota urban Cruiser Hyryder cng will launch in this month
Story first published: Saturday, December 3, 2022, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X