மானமே போச்சு! டொயோட்டா-மாருதி கூட்டணியின் புதிய கார்களில் அதுக்குள்ள பிரச்னையா! திருப்பி குடுக்க சொல்றாங்க!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்த கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). இது மிட் சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். சமீபத்தில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ஆனால் அதற்குள்ளாக இந்த காரில் பிரச்னை ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கு, டொயோட்டா நிறுவனம் தற்போது ரீகால் (Recall) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் சீட் பெல்ட்டில்தான் (Seat Belt) தற்போது பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அந்த பிரச்னையை உடனடியாக சரி செய்து கொடுப்பதற்கு டொயோட்டா நிறுவனம் தானாக முன்வந்துள்ளது.

மானமே போச்சு! டொயோட்டா-மாருதி கூட்டணியின் புதிய கார்களில் அதுக்குள்ள பிரச்னையா! திருப்பி குடுக்க சொல்றாங்க!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின், முன் பக்க சீட் பெல்ட்டின் தோள்பட்டை உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் ப்ளேட் அசெம்ப்ளியில் பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது. இன்றைய தேதி வரை, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் உரிமையாளர்கள் யாரும் இந்த பிரச்னை குறித்து புகார் தெரிவிக்கவில்லை. இருப்பினும் கடந்த நவம்பர் 9ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்ட கார்களில், இந்த பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே அந்த கார்களை மட்டும் திரும்ப பெற்று, பிரச்னையை சரி செய்து கொடுப்பதற்கு டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பிரச்னையால் மொத்தம் 994 டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சீட் பெல்ட் பிரச்னை கண்டறியப்பட்டுள்ள கார்களின் உரிமையாளர்களை, டொயோட்டா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்கள் தொடர்பு கொள்வார்கள். அத்துடன் இந்த பிரச்னையை அவர்கள் இலவசமாகவே சரி செய்தும் கொடுத்து விடுவார்கள்.

எனவே வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இருப்பினும் வாடிக்கையாளர்களுக்கு இது தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால், அருகில் உள்ள டொயோட்டா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்களை தொடர்பு கொள்ளலாம். டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரானது, ஹைப்ரிட் (Hybrid) ரகத்தை சேர்ந்தது ஆகும். வெகு விரைவிலேயே இந்த காரின் சிஎன்ஜி (CNG) வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டொயோட்டா நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது.

இந்த சூழலில்தான், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பிரச்னையால், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா ஆகிய 2 கார்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன (இந்த நிறுவனங்களுக்கு இடையே கூட்டணி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்).

இந்த கூட்டணியின் அடிப்படையில், கர்நாடக மாநிலம் பிடதி பகுதியில் செயல்பட்டு வரும் டொயோட்டா நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. எனவே மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரிலும் இந்த சீட் பெல்ட் பிரச்னை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வரும் நாட்களில் மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

இந்த 2 மிட் சைஸ் எஸ்யூவி ரக கார்களும், இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்களுடன் போட்டியிட்டு வருகின்றன. அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை தொடர்ந்து, இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) ஹைப்ரிட் காரை டொயோட்டா நிறுவனம் வெகு சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota urban cruiser hyryder recall
Story first published: Tuesday, December 6, 2022, 23:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X