கியா கேரன்ஸிற்கு நேரடி போட்டி... டொயோட்டா கொண்டுவரும் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

ரூ.15 லட்சத்திற்கு உள்ளாக 7-இருக்கை எம்பிவி காரினை இந்தியாவில் அறிமுகப்படுத்த டொயோட்டா திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா கேரன்ஸிற்கு நேரடி போட்டி... டொயோட்டா கொண்டுவரும் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

செல்டோஸ், கார்னிவல் மற்றும் சொனெட் மாடல்களை தொடர்ந்து கேரன்ஸ் எம்பிவி காரினை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தென்கொரியாவை சேர்ந்த கியா தயாராகி வருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கியா கேரன்ஸிற்கு நேரடி போட்டி... டொயோட்டா கொண்டுவரும் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

அதுமட்டுமின்றி, இந்த புதிய கியா எம்பிவி கார் இன்னமும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வந்தடையவில்லை. அதாவது இந்த கியா காரினை இன்னும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் நேரில் பார்க்கவில்லை. இருப்பினும் முன்பதிவுகள் துவங்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் கியா கேரன்ஸை முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியது.

கியா கேரன்ஸிற்கு நேரடி போட்டி... டொயோட்டா கொண்டுவரும் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இதனை பற்றி விரிவாக சமீபத்தில் நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் கூட பார்த்திருந்தோம். இந்த நிலையில் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலில், கியா கேரன்ஸிற்கு போட்டியாக ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டொயோட்டா புதிய எம்பிவி கார் ஒன்றினை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாம்.

கியா கேரன்ஸிற்கு நேரடி போட்டி... டொயோட்டா கொண்டுவரும் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இந்த தகவலின்படி, டொயோட்டா நிறுவனம் ‘பெரிய பாய்ச்சல்' (Big leap) என்கிற பெயரில் இந்தியாவில் 5-இருக்கை நடுத்தர அளவு எஸ்யூவி மற்றும் ஒரு புதிய எம்பிவி கார்களை உருவாக்கும் வகையில் அதன் உள்நாட்டு தொழிற்சாலை பணிகளை விரிவுப்படுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளது. இதில் டி22 என தற்போதைக்கு குறியீட்டு பெயரால் அழைக்கப்பட்டுவரும் புதிய 5-இருக்கை நடுத்தர அளவு டொயோட்டா எஸ்யூவி கார் மாருதி சுஸுகி பிராண்டிலும் உருவாக்கப்பட உள்ளது.

கியா கேரன்ஸிற்கு நேரடி போட்டி... டொயோட்டா கொண்டுவரும் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

மற்றொரு, புதிய எம்பிவி கார் ஆனது 560பி என்கிற குறியீட்டு பெயரால் அழைக்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள டொயோட்டாவின் பிடாடி தொழிற்சாலை கிட்டத்தட்ட 1 மாத கால மூடலுக்கு பிறகு வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. அதன் பிறகே இந்த இரு புதிய கார்களை உருவாக்குவதற்கு தேவையான அளவிற்கு தொழிற்சாலையை டொயோட்டா ஒழுங்குப்படுத்தும் என தெரிகிறது.

கியா கேரன்ஸிற்கு நேரடி போட்டி... டொயோட்டா கொண்டுவரும் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இதில் புதிய டொயோட்டா நடுத்தர அளவு எஸ்யூவி கார் நடப்பு 2022ஆம் ஆண்டின் இறுதியில் வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தின் போது அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி உடனான கூட்டணியால், ஆசிய நாட்டு சந்தைகளில் விற்பனையில் பல டொயோட்டா மற்றும் டைஹட்சூ கார்களை போன்று இந்த புதிய டொயோட்டா எஸ்யூவி காரும் டிஎன்ஜிஏ (DNGA) ஃப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட உள்ளது.

கியா கேரன்ஸிற்கு நேரடி போட்டி... டொயோட்டா கொண்டுவரும் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இதே நடுத்தர அளவு எஸ்யூவி காரின் அடிப்படையில் மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து கொண்டுவரப்படும் மாடலுக்கு ஒய்.எஃப்.ஜி என குறியீட்டு பெயர் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாகவே அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த எஸ்யூவி காருக்கு சந்தையில் விற்பனையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர் உள்ளிட்டவை போட்டியாக விளங்கும்.

கியா கேரன்ஸிற்கு நேரடி போட்டி... டொயோட்டா கொண்டுவரும் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

அடுத்த 2 வருடங்களில் டொயோட்டா மொத்தம் 6 புதிய கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் இவை இரண்டும் அடங்குகின்றன. டொயோட்டா பிராண்டில் இருந்து புதிய நடுத்தர அளவு எஸ்யூவி காரை தொடர்ந்து, 560பி என குறியீட்டு பெயரால் அழைக்கப்படுகின்ற புதிய எம்பிவி கார் ஷோரூம்களை வந்தடைய எப்படியும் அடுத்த 2023ஆம் வருடம் வந்துவிடும்.

கியா கேரன்ஸிற்கு நேரடி போட்டி... டொயோட்டா கொண்டுவரும் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

டொயோட்டா நிறுவனம் அடுத்ததாக மிக விரைவில் இந்திய சந்தையில் ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்கினை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. பிரபலமான ஃபார்ச்சூனர் காரில் பொருத்தப்படும் 2.8 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் உடன் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த பிக்அப் ட்ரக் வாகனத்திற்கு இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக் ஒரேயொரு நேரடி போட்டி மாடலாக விளங்கவுள்ளது.

கியா கேரன்ஸிற்கு நேரடி போட்டி... டொயோட்டா கொண்டுவரும் புதிய எம்பிவி கார்!! அறிமுகம் எப்போது தெரியுமா?

இவை மட்டுமின்றி, மாருதி சுஸுகி அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ள பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரின் அடிப்படையிலான புதிய க்ளான்ஸா மற்றும் 2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் அடிப்படையிலான புதிய அர்பன் க்ரூஸர் காரும் டொயோட்டா பிராண்டில் இருந்து வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஏனெனில் பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீபேட்ஜ்டு வெர்சன்கள் தான் க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் ஆகும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota To Launch Kia Carens Rivalling MPV In India Next Year Report.
Story first published: Wednesday, January 19, 2022, 1:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X