Bharat NCAP-க்கு பச்சை கொடி! கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு ரேட்டிங் வழங்க மத்திய அரசு அதிரடி திட்டம்

இந்திய கார்களை மோதல் சோதனைக்கு உட்படுத்தி, பாதுகாப்பு ரேட்டிங் வழங்கும் பாரத் என்சிஏபி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Bharat NCAP-க்கு பச்சை கொடி! கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு ரேட்டிங் வழங்க மத்திய அரசு அதிரடி திட்டம்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் பாதுகாப்பு சோதனைகளுக்காக தற்போது குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. குளோபல் என்சிஏபி அமைப்பானது, அந்த கார்களை மோதல் சோதனைகளுக்கு (Crash Test) உட்படுத்தி, பாதுகாப்பு ரேட்டிங்குகளை (Safety Rating) வழங்கும்.

Bharat NCAP-க்கு பச்சை கொடி! கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு ரேட்டிங் வழங்க மத்திய அரசு அதிரடி திட்டம்

தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ், டாடா பன்ச், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகிய 'மேட் இன் இந்தியா' கார்கள், குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. மேலும் பல்வேறு கார்கள் 4 ஸ்டார் ரேட்டிங்கையும் வாங்கியுள்ளன.

Bharat NCAP-க்கு பச்சை கொடி! கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு ரேட்டிங் வழங்க மத்திய அரசு அதிரடி திட்டம்

ஆனால் இனிமேல் இந்திய கார் உற்பத்தி நிறுவனங்கள் மோதல் சோதனைகளுக்காக, குளோபல் என்சிஏபி அமைப்பிற்கு தங்கள் கார்களை அனுப்ப வேண்டிய தேவை இருக்காது. ஆம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி (Nitin Gadkari), பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பிற்கு தற்போது ஒப்புதல் வழங்கி விட்டார்.

Bharat NCAP-க்கு பச்சை கொடி! கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு ரேட்டிங் வழங்க மத்திய அரசு அதிரடி திட்டம்

இனிமேல் பாரத் என்சிஏபி அமைப்பு இந்திய கார்களை மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தி, பாதுகாப்பு ரேட்டிங்கை வழங்கும். இந்தியாவிடம் வரும் காலங்களில் சொந்தமாக வாகன பாதுகாப்பு ரேட்டிங் திட்டம் இருக்கும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

Bharat NCAP-க்கு பச்சை கொடி! கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு ரேட்டிங் வழங்க மத்திய அரசு அதிரடி திட்டம்

நாங்கள் ஏற்கனவே கூறியபடி பாரத் என்சிஏபி என்ற பெயரில் இந்தியாவின் சொந்த பாதுகாப்பு ஏஜென்சி வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதில், NCAP என்பது New Car Assessment Programme என்பதை குறிக்கிறது. பாரத் என்சிஏபி வாகன சோதனை அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதை மத்திய அமைச்சர் நிதின் கட்காரியே தற்போது உறுதி செய்துள்ளார்.

Bharat NCAP-க்கு பச்சை கொடி! கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு ரேட்டிங் வழங்க மத்திய அரசு அதிரடி திட்டம்

சமூக வலை தளங்கள் மூலமாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இதனை அறிவித்துள்ளார். பாரத் என்சிஏபி அமைப்பின் மூலமாக, கார்கள் மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். இந்த மோதல் சோதனைகளில் கார்களின் செயல்பாடுகளை பொறுத்து, ஸ்டார் ரேட்டிங்குகள் (Star Ratings) வழங்கப்படும் என்றும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

Bharat NCAP-க்கு பச்சை கொடி! கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு ரேட்டிங் வழங்க மத்திய அரசு அதிரடி திட்டம்

இதன் மூலமாக கார்களின் ஸ்டார் ரேட்டிங்குகளை பொறுத்து, பாதுகாப்பான தயாரிப்புகளை இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முடியும். அத்துடன் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியையும் இது உருவாக்கும். பாதுகாப்பான கார்களை உற்பத்தி செய்வதற்கு அனைத்து நிறுவனங்களும் போட்டி போடலாம்.

Bharat NCAP-க்கு பச்சை கொடி! கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு ரேட்டிங் வழங்க மத்திய அரசு அதிரடி திட்டம்

ஏற்கனவே குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்குவதற்கு டாடா மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பாரத் என்சிஏபி பாதுகாப்பு ஏஜென்சியின் வருகையின் மூலமாக இந்த போட்டி இன்னும் அதிகரிக்கலாம் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

Bharat NCAP-க்கு பச்சை கொடி! கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு ரேட்டிங் வழங்க மத்திய அரசு அதிரடி திட்டம்

இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான கார்கள் கிடைக்கும். எனவே இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும். மேலும் கார்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு மட்டுமல்லாது, இந்திய கார்களின் ஏற்றுமதி தரத்தை அதிகரிப்பதற்கும் இந்த ஸ்டார் ரேட்டிங்குகள் மிகவும் அவசியம் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

Bharat NCAP-க்கு பச்சை கொடி! கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு ரேட்டிங் வழங்க மத்திய அரசு அதிரடி திட்டம்

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை அதிகளவில் குறைப்பதுடன், ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவை உலகின் நம்பர்-1 மையமாக மாற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு விரும்புகிறது. மத்திய அரசின் இந்த இலக்கிற்கும் பாரத் என்சிஏபி பாதுகாப்பு ஏஜென்ஸி பெரும் உதவியாக இருக்கலாம்.

Bharat NCAP-க்கு பச்சை கொடி! கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து பாதுகாப்பு ரேட்டிங் வழங்க மத்திய அரசு அதிரடி திட்டம்

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு, இந்திய மக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாரத் என்சிஏபி அமைப்பானது, சர்வதேச மோதல் சோதனைகளுக்கு இணையான தரத்தில் இந்தியாவில் கார்களை பரிசோதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதும் இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும்.

Most Read Articles
English summary
Union minister nitin gadkari approves bharat ncap here are all the details
Story first published: Friday, June 24, 2022, 20:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X