சம்பளம், போனஸ் நாள் நெருங்கிடுச்சு... காரும் வரிசையா வருது... எந்த காரை புக் பண்ண போறீங்க?

அடுத்த 15 நாட்களில் வரிசையாக பல கார்கள் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளன. இந்த 5 கார்கள் என்னென்ன? எந்த காரை வாங்கலாம் பாருங்கள்

சம்பளம் , போனஸ் நாள் நெருங்கிடுச்சு . . . காரும் வரிசையா வருது . . . எந்த காரை புக் பண்ண போறீங்க . . .

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் களை கட்டி விட்டது. இந்தியாவைப் பொருத்தவரை மக்கள் பண்டிகை காலங்களில் தான் அதிகம் செலவு செய்வார்கள். அதனால் பெரும் நிறுவனங்கள் எல்லாம் அதைக் கணக்கிட்டு இந்த காலகட்டத்தில் தான் தனது புதிய தயாரிப்புகளைக் களம் இறக்கி வாடிக்கையாளர்களைக் கவர நினைப்பார்கள். தற்போது தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பொங்கல் என அடுத்தடுத்து 4 மாதங்களுக்கு பண்டிகைகள் வரிசையாக வருவதால் இந்த காலத்தில் மக்களைக் கவர ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாராகிவிட்டன.

சம்பளம் , போனஸ் நாள் நெருங்கிடுச்சு . . . காரும் வரிசையா வருது . . . எந்த காரை புக் பண்ண போறீங்க . . .

தீபாவளிக்கு இன்னும் சரியாக 1 மாதமே இருக்கும் நிலையில் இன்னும் 15 நாட்களில் மாருதி சுஸூகி, டாடா, பிஓய்டி, எம்ஜி மோட்டார், டொயோட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்து கார்களை களம் இறக்கத் தயாராக இருக்கின்றனர். 5 புதிய கார்கள் தீபாவளி விற்பனையைக் குறி வைத்து விற்பனைக்குத் தயாராகி வருகிறது. இந்த பதிவில் அந்த கார்களின் பட்டியலைத் தான் காணப்போகிறோம்.

சம்பளம் , போனஸ் நாள் நெருங்கிடுச்சு . . . காரும் வரிசையா வருது . . . எந்த காரை புக் பண்ண போறீங்க . . .

மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா

மாருதி நிறுவனம் வரும் 26ம் தேதி கிராண்ட் விட்டாரா காரை இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கார் பேஸ் வேரியன்ட் ரூ9.5 லட்சம் முதல் டாப் வேரியன்ட் ரூ19.5 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த கார் குளோபர் சி ஃபிளாட்ஃபார்மில் தயாரான மிட் சைஸ் எஸ்யூவி கார், இந்த கார் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் கே15சி ஸ்மார்ட் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் அட்கின்சன் சைக்கிள் டிஎன்ஜிஏ ஸ்டிராங்க் ஹைபிரிட் சிஸ்டத்துடன் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் என மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்கவுள்ளது.

சம்பளம் , போனஸ் நாள் நெருங்கிடுச்சு . . . காரும் வரிசையா வருது . . . எந்த காரை புக் பண்ண போறீங்க . . .

டாடா டியாகோ இவி

டாடா நிறுவனம் தயாரித்து விற்பனையில் களைகட்டி வரும் டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் வரும் 28ம் தேதி அறிமுகமாகவுள்ளது.இந்த கார் டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் லைன் அப்களில் குறைந்த விலை காராக அறிமுகமாகவுள்ளது. இந்நிறுவனத்தின் நெக்ஸான் இவி, டிகோர் இவி கார்கள் ஏற்கனவே மார்கெட்டில் நல்ல விற்பனையில் இருக்கிறது. இந்த டியாகோ இவி காரில் க்ரூஸ் கண்ட்ரோல், மல்டிபிள் ரீஜெனரேட்டிவ் மோட்கள் எல்லாம் பொருத்தப்படவுள்ளன.

சம்பளம் , போனஸ் நாள் நெருங்கிடுச்சு . . . காரும் வரிசையா வருது . . . எந்த காரை புக் பண்ண போறீங்க . . .

பிஒய்டி அட்டோ 3

சீனாவின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாளர் பிஒய்டி, இந்நிறுவனம் இந்தியாவில் களமிறங்கி எலெக்ட்ரிக் கார் விற்பனைகளை துவங்கவுள்ளது. இந்நிறுவனம் வரும் அக்டோபர் 11ம் தேதி தனது அட்டோ 3 காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த கார் மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எம்ஜி ஸிஎஸ் இவி மற்றும் ஹூண்டாய் கோனா இவி ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கவுள்ளது. பிஒய்டி இ6 எம்பிவி காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு இந்த கார் களம் இறங்குகிறது. இந்த அட்டோ 3 கார் ரூ30-35 லட்சம் என்ற விலையில் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜில் 420 கி.மீ வரை பயணிக்கும்

சம்பளம் , போனஸ் நாள் நெருங்கிடுச்சு . . . காரும் வரிசையா வருது . . . எந்த காரை புக் பண்ண போறீங்க . . .

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்

எம்ஜி ஹெக்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் கார் ஏற்கனவே டீஸ் செய்யப்பட்டு விட்டது. இந்த கார் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் வெளிப்புறத்தோற்றம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பல புதிய தொழிற்நுட்பங்கள் மற்றும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

சம்பளம் , போனஸ் நாள் நெருங்கிடுச்சு . . . காரும் வரிசையா வருது . . . எந்த காரை புக் பண்ண போறீங்க . . .

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்

டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. அப்பொழுது டாப் வேரியன்ட்களுக்கான விலை நிறுவனம் வெளியிட்டது. விரைவில் அனைத்துவேரியன்டிற்கான விலையும் வெளியிடும். இந்த கார் மாருதி கிராண்ட் விட்டாரா காரை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலையும் கிட்டத்தட்ட அந்த காரின் விலையை ஒட்டியே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

சம்பளம் , போனஸ் நாள் நெருங்கிடுச்சு . . . காரும் வரிசையா வருது . . . எந்த காரை புக் பண்ண போறீங்க . . .

தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. மாத கடைசி என்பதால் பலர் கையில் பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். மாத சம்பளக்காரர்களை மனதில் வைத்து சரியாக மாதத்தின் கடைசி தேதிகளான 26,28 ஆகிய தேதிகளில் கார்களை வெளியிடுகின்றனர். இதனால் சம்பளம் வந்ததுடன் பலர் காரை புக் செய்ய வசதியாக இருக்கும் என்கிற எண்ணத்தில் இந்த நாளை ஆட்டோமொபைல் துறையினர் தேர்வு செய்கின்றனர்.

Most Read Articles

English summary
Upcoming cars launch for the festive season in India
Story first published: Saturday, September 24, 2022, 12:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X