இவங்க 2 பேரும் போட்டி போட்டா என்ன ஆகுறது? டாடா, மஹிந்திரா இருவரும் ஜனவரில சூப்பரான இ-காரை களமிறக்க போறாங்க!

டாடாவின் டியாகோ இவி, மஹிந்திரா எக்ஸ்யூவி 400 மற்றும் பிஒய்டி அட்டோ3 ஆகிய எலெக்ட்ரிக் கார்களே அடுத்த மாதம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அதன் வருகையை வழங்க இருக்கின்றன. ஏற்கனவே இந்த கார் மாடல்கள் இந்தியாவில் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே இந்த கார்களை ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் விற்பனைக்குக் கொண்டு வர அந்தந்த கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதுமட்டுமில்லைங்க இன்னும் பல கார்கள் அடுத்த ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஆனால், நாம் இப்போது பார்க்க இருக்கின்ற இந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கே இந்திய சந்தையில் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. இந்தியாவின் மாபெரும் நிறுவனங்களின் தயாரிப்புகள் இவை என்பதனாலேயே பெரும் எதிர்பார்ப்பையும், ஈர்ப்பையும் இந்த கார் கவர்ந்திருக்கின்றது.

எலெக்ட்ரிக் கார்கள்

டாடா டியாகோ இவி:

டாடா மோட்டார்ஸின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக டியாகோ இவி உள்ளது. இந்த காரை நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் பொதுப் பார்வைக்குக் கொண்டு வந்தது. மேலும், இதன் விலையையும் அறிவித்துவிட்டது. ஆனால், இதன் டெலிவரி பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அதாவது, இன்னும் இந்த கார் இந்தியர்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. அடுத்த ஆண்டு ஜனவரி முதலே இந்த மின்சார வாகனம் மக்களின் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. அறிமுகமாக இந்த காருக்கு ரூ. 8.49 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலையில் எலெக்ட்ரிக் கார்களை வழங்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த 10,000 -த்திலும் இரண்டாயிரம் டாடா நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி வாடிக்கையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. டாடா டியாகோ இவி ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எக்ஸ்இ, எக்ஸ்டி, எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட் பிளஸ் டெக் லக்ஸ் இவையே அவை ஆகும். ரூ. 21 ஆயிரம் முன் தொகையில் இந்த அனைத்து வேரியண்டுகளுக்கும் முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன.

டியாகோ இவி-யை இரு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களில் வாங்கிக் கொள்ள முடியும். 19.2 kWh மற்றும் 24 kWh ஆகிய இரு பேட்டரி பேக் தேர்வுகளிலேயே டியாகோ இவி கிடைக்கும். 19.2 kWh பேட்டரி பேக் ஃபுல் சார்ஜில் 250 கிமீ ரேஞ்ஜையும், 24 kWh பேட்டரி பேக் முழு சார்ஜில் 315 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும். மின் மோட்டாரை பொருத்தவரை இந்த இரு பேட்டரி பேக் தேர்விலும் ஒரே மாதிரியான மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 74 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளியேற்றக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரே இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வெறும் 5.7 செகண்டுகளிலேயே மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 400:

மஹிந்திரா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காராக எக்ஸ்யூவி 400 உள்ளது. இந்த காரை நிறுவனம் வெகு விரைவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. ஏற்கனவே இந்த காரை மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் வெளியீடு செய்துவிட்டது. இதைத்தொடர்ந்தே 2023 ஜனவரியில் இந்த காரை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் விலை விபரமும் அடுத்த மாதமே அறிவிக்கப்பட இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது.

அவை, பேஸ், இபி மற்றும் இஎல் ஆகும். எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் பணிகள் தொடங்க இருப்பதாக தெரிவிக்கின்றன. ஜனவரி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரின் வருகை எதிர்நோக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு கூடுதல் குஷியாக அமைந்துள்ளது. 39.4 kWh பேட்டரி பேக்கையே மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூ 400 காரில் பயன்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 456 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். எலெக்ட்ரிக் காரில் டிஜிட்டல் எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மஹிந்திராவின் அட்ரினாக்ஸ் மென்பொருள் வசதி, சன்ரூஃப், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, டூயல் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஆறு ஏர் பேக்குகள், டிஸ்க் பிரேக்குகள், ஐசோஃபிக்ஸ் ஆங்கர்கள் உள்ளிட்ட பன்முக சிறப்பம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கும்.

பிஒய்டி அட்டோ3:

பிஒய்டி நிறுவனத்தின் இந்தியாவிற்கான இரண்டாவது தயாரிப்பே அட்டோ 3 எலெக்ட்ரிக் கார். இது ஓர் எஸ்யூவி ரக காராகும். கடந்த மாதம் 10 ஆம் தேதி அன்று இந்த காரை நிறுவனம் அதிகாரப்பூர்வ வெளியீடு செய்துவிட்டது. அப்போதே காருக்கான புக்கிங் பணிகளும் தொடங்கிவிட்டன. தற்போதைய நிலவரப்படி சுமார் 1,500 புக்கிங்குகளை இந்த கார் இந்தியர்களிடத்தில் குவித்துள்ளது. பிஒய்டி அட்டோ 3 ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராகும். பிரீமியம் அம்சங்கள் இந்த காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. இதனால்தான் இந்திய பிரீமியம் கார் பிரியர்கள் மத்தியில் இந்த காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

தற்போது இந்த காரை புக் செய்திருக்கும் பெரும்பாலானோர் ஏற்கனவே பென்ஸ், ஆடி சொகுசு கார்களை பயன்படுத்துபவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மின்சார காரின் டெலிவரி பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 521 கிமீ தூரம் வரை பயணிக்கக் கூடிய பெரிய அளவு பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. 60.48 kWh பேட்டரி பேக்கே அதிக ரேஞ்ஜ் திறனுக்கு காரணமாக உள்ளது. இந்த பேக்கை 80kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்ட் வாயிலாகவும் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், கேபினை விரைவில் குளிர்விக்கக் கூடிய பவர்ஃபுல் ஏசி, வட்ட வடிவ ஸ்பீக்கர்கள், 12.8 அங்குல ரொட்டேட் செய்யக் கூடிய திரை, பனோரமிக் சன்ரூஃப், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், 5 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், சிந்தெட்டிக் லெதர் இருக்கைகள், பன்முக வண்ணங்களில் ஒளிரக் கூடிய ஆம்பியன்ட் லைட் என எக்கசக்க சிறப்பம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு அம்சங்களாக ஏழு ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஏபிஎஸ், இஎஸ்சி, டிராக்சன் கன்ட்ரோல், ஹில் டிசன்ட் கன்ட்ரோல் உள்ளிட்டவையும் அட்டோ 3இல் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Upcoming e cars atto3 tiago ev xuv400
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X