சீக்கிரமே இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் குட்டி கார்களின் லிஸ்ட்... பட்டியல்ல 6 கார்கள் இருக்கு!

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் சிறிய கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். என்னென்ன கார் மாடல்கள் இந்த லிஸ்டில் உள்ளன என்பதை பார்க்கலாம், வாங்க.

எஸ்யூவி கார்களின் இடத்தை சிறிய தோற்றம் கொண்ட 'மைக்ரோ ரக கார்கள்' பிடித்துவிடுமோ என்கிற சந்தேகம் தற்போது எழும்பியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனமான பிஎம்வி நிறுவனம் அதன் ஈஸ்-இ எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

கார்

இது ஓர் மைக்ரோ ரக எலெக்ட்ரிக் காராகும். இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக அது விற்பனைக்கு வந்திருக்கின்றது. ரூ. 4.79 லட்சமே இக்காருக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஒரு கிமீ பயணிக்க வெறும் 75 பைசா மட்டுமே செலவாகும். இந்த குறைவான செலவீணம் மற்றும் விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் ஈஸ்-இ எலெக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே இன்னும் சில சிறிய கார்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் உறுதியான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த கார் மாடல்கள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

எம்ஜி ஏர் இவி:

பிஎம்வி ஈஸ்-இ எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக எம்ஜி நிறுவனம் அதன் மைக்ரோ ரக எலெக்ட்ரிக் காரை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. 2023 முதல் காலாண்டிற்குள் இந்த வாகனம் அதன் தரிசனத்தை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் இரண்டு கதவுகள் கொண்ட 4 சீட்டர் காராகும். பன்முக பிரீமியம் தர அம்சங்களுடன் இந்த வாகனத்தை எம்ஜி உருவாக்கியிருக்கின்றது. இது தற்போது விற்பனையில் இருக்கும் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரை காட்டிலும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. 150 கிமீ ரேஞ்ஜ் தரும் பேட்டரி பேக், 40 பிஎச்பி பவரை வெளியேற்றும் மின் மோட்டார் ஆகியவையும் இந்த மின்சார காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார்:

இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் முன்னணி சிறிய ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களில் ஸ்விஃப்ட்-ம் ஒன்று. இந்த கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனையே மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகை 2024ம் ஆண்டிற்குள் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி, என்ன மாதிரியான ரேஞ்ஜ் திறனுடன் விற்பனைக்கு வரும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த தகவலின்படி புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் லிட்டருக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரையிலான மைலேஜ் திறனுடன் விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் ஃபேஸ்லிஃப்ட்:

ஹூண்டாய் நிறுவனம் அதன் கிராண்ட் ஐ10 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. பன்முக அப்டேட்டுகளைப் பெற்ற வாகனமாக இது விற்பனைக்கு வர உள்ளது. சமீபத்தில் அப்டேட்டுகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கிராண்ட் ஐ10 நியாஸ் காரே கேமிராவின் கண்களில் சிக்கியது. இந்த படங்களின் வாயிலாக கிரில், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் புதிய ஹெட்லேம்ப் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்களுடன் இக்கார் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது இந்த கார் 1.2 லிட்டர், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி ஆகிய மோட்டார் தேர்வுகளில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

சிட்ரோன் சி3 இவி:

சிட்ரோன் நிறுவனம் அதன் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றான சிட்ரோன் சி3 காரை விரைவில் மின்சார வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் அறிமுகம் கடந்த செப்டம்பர் 29ம் தேதி அன்றே அரங்கேற இருந்தது. ஆனால், குறிப்பிட்ட சில காரணங்களால் அறிமுக நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், இப்போது வரை இதன் அறிமுகம் அரங்கேற நிலையே தென்படுகின்றது. சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜில் 350க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜில் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகவும் இதன் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா அல்ட்ராஸ் இவி:

டாடா நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் நெக்ஸான் இவி, டிகோர் இவி, டியாகோ இவி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் வருகின்றது. இதில், நெக்ஸான் இவி-யை மட்டும் இரு விதமான வெர்ஷன்களில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவை போதாதென்று இன்னும் பல எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் டாடா ஈடுபட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் நிறுவனம் அடுத்ததாக அல்ட்ராஸ் இவி-யையே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த மின்சார கார் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய தலைமுறை டாடா டியாகோ:

டாடா மோட்டார்ஸ் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் பிரபலமான கார் மாடல்களில் டியாகோவும் ஒன்று. இந்தியாவின் மலிவு விலை ஹேட்ச்பேக் காராகவும் இது இருக்கின்றது. இந்த ஹேட்ச்பேக் காரின் புதிய தலைமுறை வெர்ஷனையே டாடா மோட்டார்ஸ் வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அட்வான்ஸ்ட் பிரீமியம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. ஏற்கனவே இந்த கார் நான்கு ஸ்டார் ரேட்டிங் பெற்ற காராக இருக்கின்றது. இந்த மதிப்பு மேலும் சில மடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Upcoming small car list
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X