ADAS முக்கியமான பாதுகாப்பு அம்சமா மாறிடுச்சு... அடுத்ததாக இதனை பெற்றுவரவுள்ள 5 எஸ்யூவி கார்கள்!!

எஸ்யூவி கார்கள் ட்ரெண்ட் ஆனது நம்மை பாதுகாப்புமிக்க வசதிகளை நோக்கி கொண்டு சென்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் மற்ற பிராண்ட்களின் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக விளங்க ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு பாதுகாப்பு தொழிற்நுட்பங்களுடன் கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன.

ADAS முக்கியமான பாதுகாப்பு அம்சமா மாறிடுச்சு... அடுத்ததாக இதனை பெற்றுவரவுள்ள 5 எஸ்யூவி கார்கள்!!

இத்தகைய பாதுகாப்பு தொழிற்நுட்பங்களில் முக்கியமானதாக அதிநவீன ஓட்டுனர்-உதவி அமைப்பு (Advanced Driver-Assistance System -ADAS) உருவெடுத்து வருகிறது. இந்த தொழிற்நுட்ப தொகுப்பை ஏற்கனவே மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் எம்ஜி அஸ்டர் எஸ்யூவி கார்கள் பெற்றுள்ளன. இவற்றை தொடர்ந்து விரைவில் ஏடிஏஎஸ் அமைப்பை ஏற்றுவரவுள்ள 5 எஸ்யூவி கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ADAS முக்கியமான பாதுகாப்பு அம்சமா மாறிடுச்சு... அடுத்ததாக இதனை பெற்றுவரவுள்ள 5 எஸ்யூவி கார்கள்!!

புதிய எம்ஜி ஹெக்டர்

ஏடிஏஎஸ்-ஐ இந்திய சந்தையில் முதன்முறையாக அறிமுகம் செய்த நிறுவனம் என்கிற சிறப்பை எம்ஜி மோட்டார் கொண்டுள்ளது. இதன் க்ளோஸ்டர் பிரீமியம் ரக எஸ்யூவியில் நிலை-1 ஏடிஏஎஸ்-ஸும், சமீபத்திய அறிமுகமான அஸ்டரில் நிலை-2 ஏடிஏஎஸ்-ஸும் வழங்கப்பட்டுள்ளன. ஆதலால் இந்த பாதுகாப்பு தொழிற்நுட்ப தொகுப்பு விரைவில் அப்டேட் செய்யப்படும் ஹெக்டரில் வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

ADAS முக்கியமான பாதுகாப்பு அம்சமா மாறிடுச்சு... அடுத்ததாக இதனை பெற்றுவரவுள்ள 5 எஸ்யூவி கார்கள்!!

இதனுடன் செயற்கை நுண்ணறிவு வசதியும் புதிய ஹெக்டரின் டேஸ்போர்டில் ஏற்படுத்தி கொடுக்கப்படலாம். எம்ஜியின் அதிநவீன ஓட்டுனர்-உதவி தொகுப்பில் தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், 360-கோண கேமிரா, முன்பக்கமாக வாகனம் மோதலுக்கு உள்ளாகுவதை எச்சரிப்பான், தானியங்கி அவசரகால பிரேக்கிங் மற்றும் வாகனம் பாதை மாறி செல்வதை எச்சரிப்பான் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ADAS முக்கியமான பாதுகாப்பு அம்சமா மாறிடுச்சு... அடுத்ததாக இதனை பெற்றுவரவுள்ள 5 எஸ்யூவி கார்கள்!!

புதிய ஹூண்டாய் டக்ஸன்

எம்ஜி க்ளோஸடரை போல் பிரீமியம் ரக எஸ்யூவி மாடலாக ஹூண்டாய் டக்ஸன் விளங்குகிறது. இந்தியாவில் நான்காம் தலைமுறை டக்ஸனை சோதனை ஓட்டத்தில் உட்படுத்துவதை ஏற்கனவே ஹூண்டாய் துவங்கிவிட்டது. அப்போது நமக்கு கிடைக்க பெற்றிருந்த ஸ்பை படங்கள் புதிய டக்ஸனில் அதிநவீன ஓட்டுனர்-உதவி அமைப்பு வழங்கப்பட உள்ளதை நமக்கு சுட்டிக்காட்டி இருந்தன.

ADAS முக்கியமான பாதுகாப்பு அம்சமா மாறிடுச்சு... அடுத்ததாக இதனை பெற்றுவரவுள்ள 5 எஸ்யூவி கார்கள்!!

புதிய ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் 4ஆம் தலைமுறை டக்ஸனில் பிராண்டின் புதிய ‘உணர்வுப்பூர்வமான விளையாட்டுத்தன்மை' என்கிற டிசைன் மொழி பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஸ்யூவி காரில் தானியங்கி அவசரகால பிரேக்கிங், ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதியை கண்காணிக்கும் வசதி, ரிவர்ஸில் குறுக்காக ஏதேனும் வாகனம் வந்தால் எச்சரிப்பான், ஒரே பாதையை கடைப்பிடிக்க உதவி உள்ளிட்ட அதிநவீன ஓட்டுனர்-உதவி அம்சங்கள் வழங்கப்படலாம்.

ADAS முக்கியமான பாதுகாப்பு அம்சமா மாறிடுச்சு... அடுத்ததாக இதனை பெற்றுவரவுள்ள 5 எஸ்யூவி கார்கள்!!

ஜீப் மெரிடியன்

அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஜீப் வருகிற மார்ச் 29ஆம் தேதி அதன் பிரபலமான காம்பஸ் மாடலின் 7-இருக்கை வெர்சனை மெரிடியன் என்கிற பெயரில் வெளியீடு செய்யவுள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அறிமுகம் வருகிற மே மாதத்தில் இருக்கலாம். இந்த எஸ்யூவி சில உயர் தரத்திலான சவுகரிய மற்றும் பாதுகாப்பு வசதிகளை பெற்றுவரலாம் என எதிர்பார்க்கிறோம்.

ADAS முக்கியமான பாதுகாப்பு அம்சமா மாறிடுச்சு... அடுத்ததாக இதனை பெற்றுவரவுள்ள 5 எஸ்யூவி கார்கள்!!

இதனால், தானியங்கி அவசரகால பிரேக்கிங் அமைப்பு, தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல், சாலையில் ஒரே பாதையை கடைப்பிடிக்க உதவி உள்ளிட்ட அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்கள் மெரிடியனில் வழங்கப்படலாம். டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி க்ளோஸ்டர் மற்றும் புதிய ஸ்கோடா கோடியாக் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக விளங்கவுள்ள ஜீப் மெரிடியனில் காம்பஸின் அதே 2.0 லி மல்டிஜெட் டர்போ டீசல் என்ஜின் தான் வழங்கப்பட உள்ளதாம்.

ADAS முக்கியமான பாதுகாப்பு அம்சமா மாறிடுச்சு... அடுத்ததாக இதனை பெற்றுவரவுள்ள 5 எஸ்யூவி கார்கள்!!

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்

செல்டோஸின் மூலமாகவே கியா இந்தியாவில் நுழைந்தது. அறிமுகம் செய்யப்பட்டு ஏறக்குறைய 3 வருடங்களாகிவிட்டதால், செல்டோஸை அப்டேட் செய்யும் முனைப்பில் இந்த தென்கொரிய ஆட்டோமொபைல் நிறுவனம் உள்ளது. இந்த வகையில் வெளிவரவுள்ள புதிய கியா ஃபேஸ்லிஃப்ட் கார் ஏற்கனவே தென்கொரியாவில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டுள்ளது.

ADAS முக்கியமான பாதுகாப்பு அம்சமா மாறிடுச்சு... அடுத்ததாக இதனை பெற்றுவரவுள்ள 5 எஸ்யூவி கார்கள்!!

புதிய செல்டோஸ் ஃபேஸிஃப்ட் அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்களை பெற்றுவரவுள்ளதை அந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் வெளிக்காட்டி இருந்தன. ஏனெனில் அந்த படங்களில் ADAS-க்கான ரேடார்கள் காரின் முன்பக்கத்தில் வழங்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக ஓட்டுனரால் காண முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி, ஒரே பாதையை கடைப்பிடிக்க உதவி, தானியங்கி அவசரகால பிரேக்கிங், தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவைகளை புதிய செல்டோஸ் எஸ்யூவி மாடலில் எதிர்பார்க்கிறோம்.

ADAS முக்கியமான பாதுகாப்பு அம்சமா மாறிடுச்சு... அடுத்ததாக இதனை பெற்றுவரவுள்ள 5 எஸ்யூவி கார்கள்!!

ஹூண்டாய் க்ரெட்டா & அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்

மற்றொரு தென்கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் நடப்பு 2022ஆம் ஆண்டிற்குள்ளாக ADAS-ஐ அதன் அனைத்து பிரீமியம் ரக கார்களிலும் வழங்க திட்டமிட்டுள்ளது. இதன்படி டக்ஸன் இந்த வசதியினை பெறவுள்ளதாக ஏற்கனவே கூறிவிட்டோம். 2022 க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் இதன் 7-இருக்கை வெர்சனான அல்கஸாரில் நிலை-2 தானியங்கி ஓட்டுனர் உதவிகள் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Upcoming suvs in india to get adas feature
Story first published: Monday, March 21, 2022, 23:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X