பிரிட்டிஷ்காரர்களின் இரசனையே வேறதான்.. எலக்ட்ரிக் காராக 1967 ஃபோர்டு மஸ்டங்!! ஆனா விலைதான் மயக்கம் வர வைக்குது

1967இல் தயாரிக்கப்பட்ட ஃபோர்டு மஸ்டங் லிமிடெட் எடிசன் கார் ஒன்று மாடர்ன் தோற்றத்தில் எலக்ட்ரிக் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாடிஃபை வாகனத்தை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரிட்டிஷ்காரர்களின் இரசனையே வேறதான்.. எலக்ட்ரிக் காராக 1967 ஃபோர்டு மஸ்டங்!! ஆனா விலைதான் மயக்கம் வர வைக்குது

அமெரிக்காவை சேர்ந்த பழமையான கார் பிராண்டான ஃபோர்டில் இருந்து கடந்த காலங்களில் பல தனித்துவமான மாடல்கள் தயாரிக்கப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்று மஸ்டங் ஆகும். ஃபோர்டு மஸ்டங், உலகின் பல கார் ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்த மற்றும் கவர்ந்துவரும் ஸ்போர்ட்ஸ் கார் எனலாம்.

பிரிட்டிஷ்காரர்களின் இரசனையே வேறதான்.. எலக்ட்ரிக் காராக 1967 ஃபோர்டு மஸ்டங்!! ஆனா விலைதான் மயக்கம் வர வைக்குது

ஆனால் ஃபோர்டு மஸ்டங்கை எலக்ட்ரிக் காராக மாற்றி பயன்படுத்தும் எண்ணம் எத்தனை பேருக்கு எழும் என்பது தெரியவில்லை. ஆனால் இதனை யுகே-வை சேர்ந்த சார்ஜ் கார்ஸ் என்கிற கஸ்டமைஸ்ட் நிறுவனம் நினைவாக்கி உள்ளது. ஆம், 1967இல் தயாரிக்கப்பட்ட மஸ்டங் ஃபாஸ்ட்பேக் கார் ஒன்றினை எலக்ட்ரிக் காராக உருமாற்றியுள்ளது. அதற்காக இந்த காரினை விண்டேஜ் மாடல் என கூறிவிட முடியாது.

பிரிட்டிஷ்காரர்களின் இரசனையே வேறதான்.. எலக்ட்ரிக் காராக 1967 ஃபோர்டு மஸ்டங்!! ஆனா விலைதான் மயக்கம் வர வைக்குது

ஏனெனில் 1967 மஸ்டங் காரின் உடற்கூடின் அடிப்படையில் எடை குறைவான பாகங்களை கொண்டு முற்றிலும் புதிய வாகனமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது பழமையான ஃபோர்டு மஸ்டங் காருக்கு உண்டான கிளாசிக் டிசைன் அப்படியே தொடரப்பட்டுள்ளது என்றாலும், மாடர்ன் தொடுதல்களாக எல்இடி விளக்குகள், கருப்பு நிற சக்கரங்கள் இந்த கஸ்டம் எலக்ட்ரிக் காருக்கு வழங்கப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ்காரர்களின் இரசனையே வேறதான்.. எலக்ட்ரிக் காராக 1967 ஃபோர்டு மஸ்டங்!! ஆனா விலைதான் மயக்கம் வர வைக்குது

அதேபோல் இந்த கார் தற்போதைய மாடர்ன் சொகுசு கார்களை போன்று பியானோ கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த இவி-யின் உட்புறம் லெதர் இருக்கைகள், கேபினை சுற்றிலும் லெதர் ட்ரிம்கள், பெரிய அளவில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவற்றுடன் வெளிப்புறத்திற்கு இணையாக லக்சரி தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ்காரர்களின் இரசனையே வேறதான்.. எலக்ட்ரிக் காராக 1967 ஃபோர்டு மஸ்டங்!! ஆனா விலைதான் மயக்கம் வர வைக்குது

ஆனால் 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் அப்படியே 1967 மஸ்டங்கில் இருந்து பெறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஸ்டேரிங் சக்கரத்தில் ஆடியோ கண்ட்ரோல் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மைய கன்சோல் பகுதியில் ட்ரைவ் மோட்களுக்காக 4 பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த கஸ்டம் மஸ்டங் எலக்ட்ரிக் காரில் 64kWh பேட்டரி தொகுப்பை சார்ஜ் கார்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

பிரிட்டிஷ்காரர்களின் இரசனையே வேறதான்.. எலக்ட்ரிக் காராக 1967 ஃபோர்டு மஸ்டங்!! ஆனா விலைதான் மயக்கம் வர வைக்குது

இது காரின் முன் & பின்பக்கத்திற்கு தலா 1 என பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார்களுக்கு ஆற்றலை வழங்கும். இதன் மூலமாக இந்த மஸ்டங் எலக்ட்ரிக் கார் அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்தை கொண்ட காராக மாறியுள்ளது. இதன் இரு எலக்ட்ரிக் மோட்டார்களின் மூலம் அதிகப்பட்சமாக 400 கிலோவாட்ஸ் மற்றும் 1,500 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும். 0-வில் இருந்து 96kmph வேகத்தை இந்த எலக்ட்ரிக் காரில் வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிட முடியும்.

பிரிட்டிஷ்காரர்களின் இரசனையே வேறதான்.. எலக்ட்ரிக் காராக 1967 ஃபோர்டு மஸ்டங்!! ஆனா விலைதான் மயக்கம் வர வைக்குது

அதேபோல் இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக்கொண்டு அதிகப்பட்சமாக 322கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது கஸ்டமைஸ்ட் நிறுவனம். இதன் பேட்டரி ஆனது 50 கிலோவாட்ஸ் விரைவு சார்ஜரை ஏற்கக்கூடியதாக உள்ளது. இதன் மூலமாக 20இல் இருந்து 80 சதவீத பேட்டரி சார்ஜினை வெறும் 1 மணிநேரத்தில் நிரப்பிவிடலாமாம்.

பிரிட்டிஷ்காரர்களின் இரசனையே வேறதான்.. எலக்ட்ரிக் காராக 1967 ஃபோர்டு மஸ்டங்!! ஆனா விலைதான் மயக்கம் வர வைக்குது

1967 ஃபோர்டு மஸ்டங் ஃபாஸ்ட்பேக் காரை சார்ந்த இந்த எலக்ட்ரிக் காருக்கு 3.5 லட்ச பிரிட்டிஷ் பவுண்ட்களை சார்ஜ் கார்ஸ் நிறுவனம் விலையாக நிர்ணயித்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.3.5 கோடியாகும். ஆக்ஸஸரீகள், கூடுதல் தனிப்பயனாக்க தேர்வுகளுக்கான செலவுகளை சேர்த்தால் இந்த விலை இன்னும் அதிகரிக்கும் என்கிறது சார்ஜ் கார்ஸ். இந்த எலக்ட்ரிக் மஸ்டங் காரினை வெறும் 499 யூனிட்கள் மட்டுமே தயாரிக்க இந்த கஸ்டம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரிட்டிஷ்காரர்களின் இரசனையே வேறதான்.. எலக்ட்ரிக் காராக 1967 ஃபோர்டு மஸ்டங்!! ஆனா விலைதான் மயக்கம் வர வைக்குது

ஆதலால் இது மிகவும் அரிய வகையான எலக்ட்ரிக் காராக விளங்கவுள்ளது. இதில் பெரும்பான்மையானவற்றை ஐரோப்பியர்களே வாங்கிவிடுவர். அதனை தாண்டி நமது இந்தியாவில் இத்தகைய விலையில் கஸ்டம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் காரை வாங்க எத்தனை பேர் தயாராக உள்ளனர் என்பது தெரியவில்லை. இந்திய சந்தையை பொறுத்தவரையில், கடந்த ஆண்டில்தான் நேரடி வணிகத்தில் இருந்து விலகி கொள்வதாக அதிரடி அறிவிப்பு ஒன்றினை ஃபோர்டு வெளியிட்டு இருந்தது.

Most Read Articles
English summary
Limited Edition 1967 Ford Mustang Get A Modern EV Powertrain
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X