கெத்து காட்டும் ஃபோக்ஸ்வேகன்... இந்த 2 கார்களுக்குதான் நன்றி சொல்லணும்... எந்தெந்த கார்கள் தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கெத்து காட்டும் ஃபோக்ஸ்வேகன்... இந்த 2 கார்களுக்குதான் நன்றி சொல்லணும்... எந்தெந்த கார்கள் தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த செப்டம்பர் மாதம் 4,103 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 2,563 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனையில் 60 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கெத்து காட்டும் ஃபோக்ஸ்வேகன்... இந்த 2 கார்களுக்குதான் நன்றி சொல்லணும்... எந்தெந்த கார்கள் தெரியுமா?

இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான வளர்ச்சியாகும். இதுகுறித்து ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஆஷிஷ் குப்தா கூறுகையில், ''உதிரி பாகங்கள் சப்ளையில் பிரச்னை இருக்கும் நேரத்திலும், சிறப்பான ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு தருவதற்கு நாங்கள் முயற்சி செய்துள்ளோம்.

கெத்து காட்டும் ஃபோக்ஸ்வேகன்... இந்த 2 கார்களுக்குதான் நன்றி சொல்லணும்... எந்தெந்த கார்கள் தெரியுமா?

எங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி. நாங்கள் எடுத்து வரும் கடின முயற்சிகளின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். 2022ம் ஆண்டை இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு மிகவும் வெற்றிகரமான ஒரு ஆண்டாக மாற்றுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது'' என்றார்.

கெத்து காட்டும் ஃபோக்ஸ்வேகன்... இந்த 2 கார்களுக்குதான் நன்றி சொல்லணும்... எந்தெந்த கார்கள் தெரியுமா?

உண்மையிலேயே தற்போது உதிரி பாகங்கள் சப்ளையில் நிலவி வரும் கடுமையான பற்றாக்குறை பிரச்னையால் ஆட்டோமொபைல் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செமி கண்டக்டர் சிப்கள் பற்றாக்குறை பிரச்னை ஆட்டோமொபைல் துறையை கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.

கெத்து காட்டும் ஃபோக்ஸ்வேகன்... இந்த 2 கார்களுக்குதான் நன்றி சொல்லணும்... எந்தெந்த கார்கள் தெரியுமா?

இதன் காரணமாக உலகின் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்து கொண்டாக வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளன. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனையில் மகத்தான ஒரு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு டைகுன் (Volkswagen Taigun) மற்றும் விர்டுஸ் (Volkswagen Virtus) ஆகிய 2 கார்களும் மிக முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

கெத்து காட்டும் ஃபோக்ஸ்வேகன்... இந்த 2 கார்களுக்குதான் நன்றி சொல்லணும்... எந்தெந்த கார்கள் தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஆகிய 2 கார்களும் இந்திய சந்தைக்கு புது வரவுகள் ஆகும். இதில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாத கடைசியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மறுபக்கம் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் நடப்பாண்டு ஜூன் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கெத்து காட்டும் ஃபோக்ஸ்வேகன்... இந்த 2 கார்களுக்குதான் நன்றி சொல்லணும்... எந்தெந்த கார்கள் தெரியுமா?

இந்த 2 கார்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே இந்த 2 கார்களின் விற்பனையும் மிகவும் சிறப்பாக உள்ளது. இதன் காரணமாகதான் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிரம்மாண்டமான ஒரு வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

கெத்து காட்டும் ஃபோக்ஸ்வேகன்... இந்த 2 கார்களுக்குதான் நன்றி சொல்லணும்... எந்தெந்த கார்கள் தெரியுமா?

டைகுன் மற்றும் விர்டுஸ் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவது நாமும் பெருமை கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும்.

கெத்து காட்டும் ஃபோக்ஸ்வேகன்... இந்த 2 கார்களுக்குதான் நன்றி சொல்லணும்... எந்தெந்த கார்கள் தெரியுமா?

இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா போன்ற கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மிட் சைஸ் எஸ்யூவி கார் போட்டியிட்டு வருகிறது. இதில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா ஆகிய கார்கள் வெகு சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. மறுபக்கம் மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற கார்களுக்கு ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார் விற்பனையில் கடுமையான சவாலை அளித்து கொண்டுள்ளது.

கெத்து காட்டும் ஃபோக்ஸ்வேகன்... இந்த 2 கார்களுக்குதான் நன்றி சொல்லணும்... எந்தெந்த கார்கள் தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஆகிய 2 கார்களுக்கும், ஸ்கோடா நிறுவனத்தின் குஷாக் மிட் சைஸ் எஸ்யூவி மற்றும் ஸ்லாவியா செடான் ஆகிய 2 கார்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய சந்தையில் ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய கார்களின் விற்பனையும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

Most Read Articles

English summary
Volkswagen india registers 60 percent growth in september 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X