இந்தியர்களுக்காக புதிய அவதாரத்தில் ரெடியாகி இருக்கும் டிகுவான்... விற்பனை தூள் கிளப்ப போகுது!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் அதிக சிறப்பு வசதிகள் கொண்டு டிகுவான் எக்ஸ்க்ளூசீவ் எடிசன் காரை இந்தியர்களுக்காக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. கூடுதல் சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த காரின் சிறப்புகள் பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் மாடல்களில் டிகுவான்-ம் ஒன்று. இந்த கார் மாடலின் உயர் நிலை வேரியண்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் சிறப்பு பதிப்பையே நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. புதிய சிறப்பு பதிப்பு 'டிகுவான் எக்ஸ்க்ளூசீவ் எடிசன்' எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கு அறிமுகமாக நிறுவனம் ரூ. 33.50 லட்சம் விலையை நிர்ணயித்துள்ளது.

எக்ஸ்க்ளூசீவ் எடிசன்

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். வழக்கமான டிகுவான் கார் மாடலைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்புகள் நிறைந்த காராக டிகுவான் எக்ஸ்க்ளூசீவ் எடிசன் உருவாக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அதிக கவர்ச்சியான டிகுவானை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டே இதனை அவ்வாறு உருவாக்கியிருக்கின்றது. காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என அனைத்திலும் காஸ்மெட்டிக் மற்றும் அலங்கார மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இரு விதமான தேர்வுகளில் இந்த சிறப்பு பதிப்பை விற்பனக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ப்யூர் ஒயிட் மற்றும் ஓரிக்ஸ் ஒயிட் இந்த நிற தேர்வுகளிலேயே ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்க்ளூசீவ் எடிசன் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த கார் மீது விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்கள் அல்லது ஆன்-லைன் வாயிலாக புக் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கும்.

டிகுவான் கார் மாடலுக்கு இந்தியாவில் சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக நாடுகள் சிலவற்றிலும் இந்த கார் மாடலுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டுள்ளது. இந்த நிலையிலேயே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டிகுவான் கார் மாடலில் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. சிறப்பு பதிப்பின்கீழ் சிறப்பு அலங்கார வேலைகள் பல இந்த காரில் செய்யப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், 18 அங்குல செப்ரிங் ஸ்டெர்லிங் சில்வர் நிற அலாய் வீல் மற்றும் டைனமிக் ஹப் கேப்கள் காரின் சூப்பரான கவர்ச்சி தோற்றத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி பி-பில்லரில் எக்ஸ்க்ளூசீவ் எடிசன் எனும் சிறப்பு பேட்ஜ், காரின் உட்பக்கத்தில் ஸ்போர்ட்டியான அலுமினியம் பெடல்கள், எக்ஸ்க்ளூசீவ் எடிசன் எனும் பேட்ஜ் அடங்கிய இருக்கைககள் என பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றால் வழக்கமான டிகுவான் கார் மாடலைக் காட்டிலும் இது அதிக ஸ்போர்ட்டியானதாகக் காட்சியளிக்கின்றது. மேலும், மிகவும் பெட்டரான வெர்ஷனாகவும் அது காட்சியளிக்கின்றது. இதுமட்டுமில்லைங்க இந்த சிறப்பு பதிப்பு டிகுவான் கார் மாடலில் பன்முக சிறப்பு தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

எக்ஸ்க்ளூசீவ் எடிசன்

ஐக்யூ உடன் கூடிய அடாப்டீவ் எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள், 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (இது ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), இலுமினேட்டட் ஸ்கஃப் பிளேட்டுகள், யுஎஸ்பி சி-போர்ட்டுகள், வியன்ன லெதர் இருக்கைகள், சாஃப்ட் டச் டேஷ்போர்டு, ஆம்பியன்ட் லைட்டுகள், 3 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஏர் கன்டிஷனிங் சிஸ்டம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை டிகுவான் எக்ஸ்க்ளூசீவ் எடிசனில் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டாரை பொருத்த வரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த காரில் வழக்கமான டிகுவானில் பயன்படுத்தும் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜட் டிஎஸ்ஐ பெட்ரோல் மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 4 மோஷன் ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்பம் கொண்ட 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷனே இந்த மோட்டாருடன் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மைலேஜ் திறன் 12.65 கிமீ ஆகும். இந்த காரில் பாதுகாப்பு வசதிகளாக ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்சி கனட்ரோல், ஆன்டி ஸ்லிப் அம்சம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஆக்டீவ் டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கும். இவை மட்டுமில்லைங்க இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகள் புதிய சிறப்பு பதிப்பு ஃபோக்ஸ்வேகன் டிகுவான் காரில் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Volkswagen tiguan exclusive edition
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X