ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வாடிக்கையாளர்கள் பார்வையிட வாய்ப்பு... ஜூன் 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே, வாடிக்கையாளர்கள் அதனை பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வாடிக்கையாளர்கள் பார்வையிட வாய்ப்பு... ஜூன் 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus). இந்த காரின் உற்பத்தி பணிகள் ஏற்கனவே முழு வீச்சில் தொடங்கப்பட்டு விட்டன. அத்துடன் இந்த காரை இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சமீபத்தில் தொடங்கியது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வாடிக்கையாளர்கள் பார்வையிட வாய்ப்பு... ஜூன் 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த சூழலில் இந்தியாவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 152 டீலர்ஷிப்களில் தற்போது விர்டுஸ் காரின் 'கஸ்டமர் பிரிவியூக்கள்' (Customer Previews) தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை பார்வையிடும் வாய்ப்பு, வாடிக்கையாளர்களுக்கு கிடைத்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வாடிக்கையாளர்கள் பார்வையிட வாய்ப்பு... ஜூன் 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் கஸ்டமர் பிரிவியூக்கள் இன்றுதான் (மே 14ம் தேதி) தொடங்கப்பட்டன. வரும் ஜூன் 8ம் தேதி வரை ஃபோக்ஸ்வேகன் டீலர்ஷிப்கள் இதனை நடத்தவுள்ளன. இதை தொடர்ந்து வரும் ஜூன் 9ம் தேதி ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அன்றைய தினம்தான் இந்த காரின் விலை அறிவிக்கப்படும்.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வாடிக்கையாளர்கள் பார்வையிட வாய்ப்பு... ஜூன் 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

இது மிட்-சைஸ் செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டைனமிக் லைன் (Dynamic Line) மற்றும் பெர்ஃபார்மென்ஸ் லைன் (Performance Line) என இரண்டு ட்ரிம்களில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் கிடைக்கும். இந்த கார் ட்யூயல்-டோன் இன்டீரியரை பெற்றுள்ளது. இதன் இன்டீரியரில் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வாடிக்கையாளர்கள் பார்வையிட வாய்ப்பு... ஜூன் 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்றவற்றையும் இந்த காரின் முக்கிய வசதிகளாக குறிப்பிடலாம். அதே நேரத்தில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மிட்-சைஸ் செடான் கார் மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கவுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வாடிக்கையாளர்கள் பார்வையிட வாய்ப்பு... ஜூன் 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

இதில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 113 பிஹெச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கிறது. 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படும் அதே சமயத்தில் 3 கியர் பாக்ஸ் தேர்வுகளை ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் பெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வாடிக்கையாளர்கள் பார்வையிட வாய்ப்பு... ஜூன் 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

இதன்படி 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி என ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் மொத்தம் 3 கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை பற்றிய தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி விட்டன. ஆனால் விலை மட்டும்தான் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வாடிக்கையாளர்கள் பார்வையிட வாய்ப்பு... ஜூன் 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

அதுவும் கூடிய விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி, மாருதி சுஸுகி சியாஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா போன்ற கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் போட்டியிடவுள்ளது. இதில், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தை சேர்ந்த ஸ்கோடா ஸ்லாவியா மிட்-சைஸ் செடான் கார் சமீபத்தில்தான் விற்பனைக்கு வந்தது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வாடிக்கையாளர்கள் பார்வையிட வாய்ப்பு... ஜூன் 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காருக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதேபோல் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கும் உற்சாகமான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் இருந்து புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய 3 கார்களுமே எதிர்பார்த்தபடி நன்றாக விற்பனையாகி கொண்டுள்ளன.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரை வாடிக்கையாளர்கள் பார்வையிட வாய்ப்பு... ஜூன் 9ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!

அதேபோல் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கும் உற்சாகமான வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மிட்-சைஸ் செடான் காரை நாங்கள் ஏற்கனவே ஓட்டி பார்த்து விட்டோம். இந்த காரில் வாடிக்கையாளர்களை கவரும் பல்வேறு அம்சங்கள் இருப்பதை அப்போது நாங்கள் கண்டறிந்தோம்.

Most Read Articles
English summary
Volkswagen virtus customer previews begins check full details here
Story first published: Saturday, May 14, 2022, 23:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X