வென்ட்டோவுக்கு பதிலாக அட்டகாசமான விர்டுஸ் செடான்... அறிமுக விபரத்தை வெளியிட்டது ஃபோக்ஸ்வேகன்

வென்ட்டோ காருக்கு மாற்றாக புத்தம் புதிய விர்டுஸ் காரை மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதை ஃபோக்ஸ்வேகன் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

விரைவில் வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார்!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. அருமையான டிசைன், சிறந்த கட்டமைப்புத் தரம் கொண்ட மாடலாக பெயர் பெற்றுள்ளது. இந்த நிலையில், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா போன்ற போட்டி மாடல்கள் அவ்வப்போது புதிய தலைமுறை மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டு களமிறக்கப்பட்டன.

விரைவில் வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார்!

ஆனால், வென்ட்டோ காரின் டிசைன் மற்றும் வசதிகளில் குறிப்பபிடத்தக்க அளவு மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வென்ட்டோ காருக்கு பதிலாக புத்தம் புதிய செடான் மாடலை விரைவில் களமிறக்க உள்ளது.

விரைவில் வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார்!

விர்டுஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புத்தம் புதிய செடான் கார் வென்ட்டோ காரைவிட அனைத்து விதங்களிலும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வர இருக்கிறது. அதாவது, பரிமாணத்தில் கூட வென்ட்டோ காரைவிட விர்டுஸ் பெரிதான மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார்!

இதனால், புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காருக்கு நேரடியாக கடும் போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விர்டுஸ் கார் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தன் MQB-A0-IN என்ற கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்தியாவுக்கான சில முக்கிய மாற்றங்களுடன் வருகிறது.

விரைவில் வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார்!

மஹாராஷ்டிர மாநிலம், சகன் பகுதியில் செயல்பட்டு வரும் ஃபோக்ஸ்வேகன் ஆலையில் இந்த புதிய விர்டுஸ் கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த கார் 6ம் தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான செடான் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார்!

இந்த நிலையில், புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் வரும் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. கார் அண்ட் பைக் தளத்திற்கு அளித்த பேட்டியின்போது ஃபோக்ஸ்வேகன் உயர் அதிகாரி ஆசிஷ் குப்தா இந்த தகவலை தெரிவித்துள்ளார். வரும் மே மாதம் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார்!

புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரில் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும். இதில், 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

விரைவில் வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார்!

இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இரண்டு எஞ்சின் தேர்வுகளிலும் கிடைக்கும். 1.0 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும், 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படும்.

விரைவில் வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார்!

புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் ரூ.10 லட்சம் முதல் ரூ.11 லட்சத்திற்கு இடையிலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட மிட்சைஸ் செடான் கார்களுடன் போட்டி போடும். புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் அடிப்படையிலான ஸ்கோடா ஸ்லேவியா காரும் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Volkswagen To Reveal Virtus Sedan In India Very Soon.
Story first published: Friday, January 14, 2022, 12:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X